ஹீப்ரு பிரமிடு எண் 27 ன் பலன்கள் :
2 சந்திரனும் - 7 என்ற கேதுவும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மிதுன ராசியில் வரும் எண்ணாகும் . குடும்பம் மக்கள் மீது பாசத்தை காட்டுகிறது இந்த எண் . அன்பு அபரிதமாக காணப்படும் .
சிறந்த அறிவாளியாகவும் - மேதையாகவும் விளங்குவார்கள் . " சக்தி வாய்ந்த செங்கோல் " செங்கோல் என இந்த 27 ம் எண் - பற்றி எகிப்திய பிரமிடுகளில் ஓவியங்களாக காணப்படுகிறது .
சரணாகதி மந்திர சக்தி என்று சாஸ்திரங்களிலும் இந்த எண் . பற்றி வருணிக்கபடுவதால் இவ்வெண் தெய்வீகமானது .
படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை இந்த எண் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு - அதிகார பதவிகளையும் இந்த எண் தரும் .
தொழிலில் மேன்மை - ஆன்ம லாபம் - மந்திர சித்தி - செல்வ விருத்தி - தெளிந்த நன் அறிவு - நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகளை இந்த 27 ம் எண் . தருகிறது . மனோகாரகன் சந்திரனும் - ஞானக்காரகனோடு சேர்ந்து வீர செவ்வாயின் 9 ஐ 27 ம் எண் - உள்ளடக்கி இருப்பதால் விவேகமும் - மனதை ஆளும் ஞான மார்க்கம் பெற்றவர்களாக இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் திகழ்கிறார்கள் . " ஆத்ம ஞான சித்தி " என மந்திர நூல் தெரிவிக்கிறது .
பேசும் பேச்செல்லாம் துதியாகவும் - செயல்கள் எல்லாம் பூஜையாகவும் " என் குறிப்பிட்டபடியால் சொல்லும் - செயலும் -சிறப்பை சேர்க்கும் வகையில் இந்த 27 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் அடைவார்கள் . முயற்சி இல்லாமலேயே இவர்கள் வாசற் கதவை லக்ஷ்மி தேவி தட்டுவாள் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை- தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு
அதிர்ஷ்ட கல் - பவழம்
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் .
பரிகாரம் : 2
நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment