ஹீப்ரு எண் 28 ன் பலன்கள் :
நவ கிரகங்களில் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் என்னும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
மனித சக்திக்கு வெகு அப்பாலுள்ளது இந்த இந்த 28 - ம் - எண். ஜனன மரண அடிப்படைய உணர்த்துகிறது.பெரிய பதவி - பணம் - அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கும் . பின் வந்தது வந்தது போலவே எல்லாம் மறைந்து விடும் .
"இரண்டு செங்கோல்கள்" - ஊன்றப்பட்ட காட்சி எகிப்திய சித்திரங்களில் இந்த 28 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது ."பிரதி பய - ஜராம் ருத்யு ஹரிணீம் ஸூ தாம் " என வரும் சுலோகத்தில் . "மூப்பு மரணங்களை விளக்குகிற அமிருததை சாப்பிட்டும் கூட பிரளய காலயத்தில் அழிவுறும் தேவர்களையும் . கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவ பெருமான் தேவியின் தாடங்க மகிமையினால் காலத்தின் முடிவு நிலை பெறாமையும்" இந்த 28 ம் எண்ணிற்க்கு மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கமாகிறது .
" கடக ராசியில் சந்திரன் வடிவில் சூரியனின் பலம் என்பது இந்த எண்ணை குறிக்கிறது .
சாதரணமான நிலைமையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும் முயற்சிகளில ஈடுபட்டு முன்னேருவதையும் - ஆன்மீகத்திலும் - தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த என் எண் குறிக்கிறது . வழக்கு சம்பந்தபட்டவைகளில் வெற்றியும் - சினிமா துறைகளில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் - இரக்கமும் மாறி மாறி வருவதை இந்த எண் குறிக்கிறது .
2 என்ற சந்திரன் வளர்வதும் - தேய்தலுமான தன்மையை தருவதால் நிலையான வெற்றிகள் இல்லாமல் 8 என்ற சனி மிகபெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதால் " சமச்சீர் நிலையை தருவதில்லை "
கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - கடன் கொடுத்தால் திரும்ப வராமல் போவதும் இந்த 28 ம் எண்ணிற்க்கு உண்டு . ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுவதை இந்த எண் குறிக்கிறது .
பெயர் எண்ணாக வந்தால் ஆன்மீக பலம் இருப்பவர்களுக்கு தீமை ஏற்படாது . ஆனால் எந்த தேதியில் பிறந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த 28 ம் எண் வரவே கூடாது .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள் - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம்
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம் - மஞ்சள் புஷ்ப ராகம்
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன்
அதிர்ஷ்ட தேதி - 1 -10 - 19 - 4 - 13 - 22 - 31 - 2 - 1 - 1 - 20- 3- 12 - 21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி - 28 இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A- I - J - B- K- R - T- M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு
பரிகாரம் : 1
சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் .
பரிகாரம் : 2
செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் .
பரிகாரம் : 3
பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் .
பரிகார தலம் :
இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment