Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 29 - 9 - 2024

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 29 - 9 - 2024

 


ஹீப்ரு எண்  26 ன் பலன்கள் : 

சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் இணைந்து மறுபடியும் சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 26 ம் எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .

தோல்வியும் - ஆபரணம்  - பொருள் நஷ்டம் - இடம் பெயர்வதும் இந்த எண்ணில் காணப்படும் . இது மிகவும் அமானுஷ்யமான எண்ணாகும் 

குடும்ப நலனும் நன்கு அமையாது . தெய்வீக மத சம்பந்தமானவற்றில் ஈடுபாடு ஏற்படலாம் . பொருளாதார வகையில்  சுமாரான பலன்களை தரக்கூடியது . 

வயோதிகத்தில் வறுமையையும் - வீண் முயற்சிகளையும் - தோல்விகளையும் இந்த 26 ம் எண் குறிக்கிறது . நண்பர்கள் - கூட்டு ஒப்பந்தம் - ஜாமீன் வகைகளில் - நஷ்டங்களையும் - மனஸ்தாபத்தையும் உண்டாக்கும் . 

கஷ்டம் - நஷ்டம் -   தோல்வி - குழப்பம் போன்றவைகளை இந்த எண் உண்டாக்கும் . விரோதிகளால் பகிரங்கமாக தாக்கபடுதல் பணம் - பதவி வகைகளில் வீண் சிரமங்களையும் கொடுக்கும் . வீண் ஆடம்பரத்தையும் - ஆர்ப்பாட்டத்தையும் - பெண்களால் ஏற்ற - இறக்க - அவமானகளையும் தரக்கூடியது இந்த எண் . 

மிதுன ராசியில் 26 ம் - எண் - இடம்பெறுவதால் - மிதுன ராசிக்கு 8 ம் - இடம் - மகர ராசியாகவும் - 9 ம்  இடமாக - கும்பராசியாக இடம் பெறுவதால்  அஷ்டம பாக்கியங்களை இந்த 26 ம்  குறிக்கிறது . 

கஷ்டத்திற்கு பிறது லாபம் வந்தாலும் அந்த லாபம் எதற்கும் பிரயோஜனப்படாமல் போகும் . அரசியலுக்கு ஏற்றது இந்த 26 ம்  எண் . வீடு - நிறுவனம் - வியாபார துறைக்கு கடினமான தோல்விகளை வழங்கும் . ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் வெற்றிகள் ஏற்பட்டாலும் பிறகு சரிவை உண்டாக்கும் . 

" தனி மனித செங்கோல் " போன்ற சிற்பங்கள் எகிப்திய சிற்பங்கள் இந்த 26 ம்  எண்ணொடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " த்வேஷம் " சிரஞ்சீவித்யம் " என சாஸ்திரங்களிலும் இந்த எண்  குறிப்பிடப்பட்டுள்ளது . 

"பஞ்சபூதனாம்". "வ்யஷ்டி ரூபதாம் மரண மிதியாவத் "(அதாவது பஞ்சபூதங்களும் தனித்தனியே பிரிந்து போகும் மரண நிலை ) 

பிரம்மா - விஷ்ணு - யமன் - குபேரன்  - மரணமடைதலையும் - சிவனின் சம்ஹார தாண்டவத்தை சக்தி பார்த்து கொண்டிருத்தலையும் இவ்வெண்  குறிக்கிறது . 

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த எண் திருப்தியான வாழ்வு தருவதில்லை - பழைய நூல்களில் சகலமும் பிரளயத்தில் மூழ்குவது பற்றி காணப்படுகிறது . 26 தத்துவம் - மனித யோகிகள் - ரிஷிகள் ஆகியோரின் தவ வலிமையையும் தாண்டின தத்துவத்தை இந்த எண் குறிப்பிடுவதால் 

ஒரு மனிதனின் பெயர் எண்ணாக இந்த எண் அமைவது பேரழிவை தரும் . அதுவும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 26 ம் - எண்  அமைந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.



 அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . 

சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .



ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment