Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 2 8 - 9 - 2024

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 2 8 - 9 - 2024


ஹீப்ரு எண்  25 ன் பலன்கள் : 

மன பலத்தை ஆட்சி செய்யும் சந்திரனும் புத்திக்கு அதிபதியான புதனும் இணைந்து கேது பகவானின் குண நலன்களை இந்த 25 எண் வெளிபடுத்துகிறது . 

இந்த எண்ணை முற்றிலும் அதிர்ஷ்டமான எண் என்று சொல்ல முடியாது. இந்த எண்ணின் முழு பலத்தையும் தெரிந்து கொள்ளவும்  முடியாது . 

சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும் . இந்த எண் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். 

அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த எண் குறிக்கிறது . ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும் . 

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும். பெண்கள் மூலம் தொந்தரவுகளும் உண்டாகும் . புத்திரர்களுக்கு பீடையை உண்டாக்கும் . 

சோதனைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் இந்த எண் திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி பெரும் சோதனைகளையும் தரும் .

இந்த எண்ணின ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் , ஒரு சில இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 2 11 20 29 வருபவர்கள் இந்த எண் நற்பலன்களை தரும் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம் பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் .




ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment