Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 19 - 9 - 2024

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 19 - 9 - 2024


ஹீப்ரு எண் 17  ன் பலன்கள் : 

சூரியனின் ஆதிக்க எண்ணும்  கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து 8 என்று சனி பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் ரிஷப ராசியில்  வரக்கூடிய எண்ணாகும் . 

சரசுவதி தேவியின் பூரண கடாட்சம் கொண்டது இந்த எண் . ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு அறிவியல் மருத்துவம் கலைத்திறன் பல்வேறு விதமான ஆராய்ச்சி திறனை இவ்வெண் குறிப்பிடுகிறது .

இந்த 17 ம் எண் ரிஷப லக்கினத்தில் இடம்பெறுவதால் ரிஷப லக்கினத்திற்கு 9 10 ம் இடத்திற்கு சனிபகவான் தர்மகர்மாதிபதியாக வருவதால் இந்த எண் யோகமளிப்பதாக உள்ளது . 

ஒருவருடைய பெயர் எண் 17 ம் எண்ணாக வரும்பொழுது அரசுவகை யோகமும் உலகம் மறக்க முடியாத சாதனைகளை செய்து முடிப்பவராகவும் விளங்குவார்கள் . ஏராளமான ஐஸ்வர்யம் புகழ் அந்தஸ்து ஆகியவற்றையும் தரும் வல்லமை கொண்ட எண்ணாகும் .

பல்வேறு வகையான சோதனைகளையும் கஷ்டங்களையும் வென்று தனது குறிக்கோளை அடையும்வரை ஓயாது உழைத்து வெற்றி பெறுதலை இந்த எண் குறிக்கிறது . 

ஆண்களுக்கு பெண்களாலும் வாழ்க்கை துணைவியாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும் . 1 ம் எண்ணை குறிக்கக்கூடிய சூரியனின் ஆதிக்கம் முதலில் வருவதால் ஆயுள் பலம் ஓங்கும் . ஜோதிடம் தியானம் சித்துக்கள் ஜல ஸ்தம்பன வித்தைகள் கை ஓங்கும் .

பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களும் இந்த 17 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் விபரீதமான விளைவுகள் உண்டாகும் .




அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . 

சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று சனிபகவானுக்கு கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .



ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment