Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 17- 9 - 2024

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 17- 9 - 2024

 


ஹீப்ரு எண்  15 ன் பலன்கள் : 

சூரியனை குறிக்கும் 1 ம் எண்ணும் புதனை குறிக்கும் 5 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த லட்சுமி கடாட்சமான அதிர்ஷ்ட எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

சரசுவதி தேவியின் கடாட்சம் கொண்டது. நவ ரத்ன பீடமாகவும் மர்மசக்தியாகவும் இந்த எண் விளங்குகிறது

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த 15 ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் அமையுமானால் உண்டாகும் . 

முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இந்த எண்ணிற்கு உண்டு .

 காமம் குரோதம் வஞ்சக தன்மைகள் சுயநலம் மேன்மையற்ற செயல் இவை எல்லாம் இந்த எண்ணினரை ஆட்டி படைக்கும் 

மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு காரியமாற்றுவதையும் கவிஞானம் கவின் மிகு பெண்களால் லாபம் உண்டாகும் . நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும் . 

எட்டு திக்கின் அதிபதிகளின்   ஆசிர்வாதமும் இந்த எண்ணினருக்கு உண்டாகும் 15 கண்களையுடைய ஸ்ரீ காயத்திரி தேவியின் தெய்வ சொரூபத்தை இந்த எண் காட்டுகிறது . 

பிறந்த தேதி  - 3 - 12 - 21 - 30 - 8 - 17 - 26 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் தீமையான பலன்கள் உண்டாகும் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

பரிகாரங்கள் : 

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் 


.ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment