Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 16 - 9 - 2024

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 16 - 9 - 2024


 ஹீப்ரு பிரமிடு எண்  14 ன் பலன்கள்  : 

சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் - ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது . மந்திர நூல்களில் சுபிட்சம் என்று இந்த 14 ம் எண் வருணிக்கப்பட்டுள்ளது . 

இந்த 14 ம் எண் வியாபார வசியத்தை தரக்கூடியது . பிற்காலத்தில் குழந்தைகளுக்கு மிக பெரிய ராஜ யோகத்தை கொடுக்கக்கூடிய எண்ணாகும் . இந்த எண்ணை கொண்டுள்ளவர்களை சுற்றி எப்பொழுதும் நாலு பேர் இருந்துகொண்டே இருப்பார்கள் . 

அதிகார அந்தஸ்தில் உள்ள மனிதர்களின் சந்திப்பு . ஜனக்கூட்டம் -  விதவிதமான வியாபார பொருள்கள் ஆகியன இந்த 14 ம் எண்ணிற்குரிய அம்சங்கள் என்பதால் வளர வளர இதன் மூலம் பல்வேறு அதிர்ஷ்டகரமான ஆதாயங்களை அடைவார்கள் . பரம் பிரம்மத்தின் மூலம் அறம் - பொருள் - இன்பம் - வீடு இந்நான்கையும் .பெறுவார்கள்  .

வியாபார ரீதியாக ஏற்றுமதி இறக்குமதி - கொடுக்கல் வாங்கல் பங்கு மார்க்கெட் பண புழக்கமுள்ள துறைகள் கணித நிபுணத்துவம் அனைத்தும் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அமையும் . கலைகளில் ஆர்வத்தையும் - படைப்பாற்றலையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் கொடுப்பதால் குழந்தையின் எதிர்காலம் பிரமிக்கும் படியாக அமையும் . 

வியாபாரத்தில் திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களால் அதிக திரவிய சம்பாதனைகள் உண்டாகும் . ஈரேழு லோகங்கள் 14. வித்யா ஸ்தானங்கள் 14. வேதத்தின் அங்கங்கள் 14. மனுக்கள் 14. இப்படியான பல மகத்துவங்கள் இந்த 14 எண்ணிற்கு உண்டு . 

சூரியன் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்து 14 என்று வருவதால் இவர்களின் வயது வந்த காலகட்டங்களில் காதல் விஷயங்களில் கௌரவ குறைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் இவைகளை அனுசரித்து  அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தால்  எதிர்காலம் மேலும் மேலும் மதிப்புமிக்கதாக அமையும் . 

அதிர்ஷ்டமானவைகள்

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .


ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment