இன்றைய தேதியில் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு எண் 13. ராகுவின் ஆதிக்கத்தை கொண்ட இந்த எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும்
ஆங்கிலேயர்கள் இந்த எண்ணை கண்டு ஒதுக்கி விடுகிறார்கள் . பல விதமான சோதனைகளை தந்து இந்த எண் வெற்றியை கொடுக்கும் . எகிப்திய ஓவியங்களில் மரண தேவனை குறிப்பதாக இந்த எண்னை பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஸ்திரி லாபம் - ஜீவ எண் என்றெல்லாம் இந்த எண் பற்றி மந்திர நூல்களில் உள்ளது .
நேர்மைக்கு புறம்பாக செயல்படும்பொழுது வீழ்ச்சி உறுதி என்பதை இந்த எண் பறை சாற்றுகிறது . புதிய ஜெனனம் என்பதை இந்த எண் எடுத்து காட்டுகிறது .
இந்த 13 - ம் எண் நல்லவர்களுக்கு தேசத்தையும் ஆட்சியையும் வழங்குகிறது சிவராஜ யோகமும் சதுர வடிவமும் கொண்ட இந்த எண் தனி மனிதனின் பெயரில் வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கி விடுகிறது . ஆனால் நிறுவனங்கள் - கம்பெனிகள் - கட்சி - மொழி - இப்படியாக பொதுவான பெயராக அமையும்பொழுது அதிர்ஷ்ட விருத்தியை வலுவாக வழங்கும் .
தனி மனித பெயரின் மொத்த கூட்டு எண்ணாக இந்த 13 ம் எண் வரும்பொழுது மனைவி - மக்கள் - சகோதரர் இவர்களிடம் சண்டைகளும் இருப்பிடம் விட்டு வேறு இடத்தில் வசிப்பதும் கூட ஏற்படலாம் . RAMAN இந்த பெயரின் எண்ணிக்கை 13 ம எண்ணிக்கையில் அமைவதை காணலாம் .
TVS - AMWAY - BPL - HMT - TAMIL - இவை பொதுவான பெயர்கள் . இவைகளின் மொத்த கூட்டு எண்கள் 13 க வருகிறது .
நிறுவனங்களின் உயிர் நாடியான ஒருவரை தாழ்த்தி பிறகு உச்ச நிலைக்கே கொண்டு செல்கிறது . இந்த 13 ம எண்ணை பெயரில் உடையவர்களுக்கு விஞ்ஞான ஆராய்ச்சி - நீதித்துறை - சீருடை அணியும் துறைகளில் புகழ் உண்டாகும் .
1 என்ற சூரியனும் 3 என்ற குருவும் ஒன்று இணைந்து ராகு ஆதிக்க சக்தியை இந்த எண் வெளிபடுத்துவதால் சுக்கிரன் மனையில் 13 என்ற ராகு உச்சம் என்பதை உணர்த்துவதால் பெண்களால் பிரச்சனைகளையும் - சிரமங்களையும் இந்த எண் உண்டாக்கும் . தான் விரும்பா விட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
தவறு என்று தெரிந்தாலும் மன சாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த 13 ம் எண்ணுக்கு ஏற்படுவதால் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்தாலும் மனம் முழுவதும் சஞ்சலமும் சங்கடமுமாகவே இருக்கும் . இவர்களுக்கு 1 - 10 - 19 - 28 - தேதிகளும் கூட்டு எண் 1 க வரும் தினங்களும் மிக்க அதிர்ஷ்டமான எண்களாகும் .
அதிர்ஷ்டமானவைகள் :
திசை - கிழக்கு
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம்
கல் - மஞ்சள் புஷ்பராகம்
கிழமை - ஞாயிறு திங்கள்
ஆரம்ப எழுத்து - M - T- A - I - J
ஆரம்ப எழுத்து - M - T- A - I - J
தேதி - 4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம்
பரிகாரம் : 1
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் .
பரிகாரம் : 2
நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் .
பரிகார தலம் :
இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment