Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 14 - 9 - 2024

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 14 - 9 - 2024



ஹீப்ரு பிரமிடு எண்  12  ன் பலன்கள் :

ரிஷப ராசியில் வரக்கூடிய குருவின் ஆதிக்கம் பெற்ற எண்ணாகும் .1 என்ற சூரியனும் 2 என்ற சந்திரனும் இணைந்து அமாவாசையை குறிக்கிறது . 

இந்த யோகம் சிவ சக்தி யோகம் எனப்படுகிறது . அடுத்தவருக்காக தியாகம் என்பதை குறிக்கும் வகையில் எகிப்திய ஓவியங்களில் இந்த 12 ம் எண்ணை குறிக்கும் பொருளாகிறது . 

சிறந்த அறிவாளி பேச்சாளன் என் பெயர் கிட்டும் . கௌரவம் - அந்தஸ்து ஏற்படும் . தியாக சீலராகவும் விளங்குவர் . ஆக்க பூர்வமான செயல்களை செய்து முடிப்பார் . 

அறிவையும் நளினத்தையும் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் நினைவூட்டுகின்றன . சொல்வாக்கால் செல்வாக்கு உண்டாகும் . 

இசை துறையில் ஞானத்தை தரும் . 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்  போன்று அரிதான விஷயங்கள் நிரம்பிய மனிதர்கள் ஆவார்கள் . 

பொருள் பாக்கியம் அருள் செல்வம் நினைத்ததை முடிக்கும் அதிர்ஷ்டம் எல்லாம் உண்டு . 

சுதர்ஷன எந்திரம் 12 கோணம் உடையதாகவும் - அன்னபூர்ணா ஸ்தோத்திரம் 12 பாடல்களை கொண்டதாகவும் - திருமுறைகள் 12 கவும் - ராசிகள் 12 ஆகவும் - மணி கடிகார அமைப்பு 12 என் - 1 + 2 எனும் விந்தையை குறிப்பிடும் இந்த எண் குருவை குறிக்கிறது . 

குரு தேவ குருவாக இருந்து பிரம்மச்சாரியம் பூண்டதை போன்று தனக்கு எதுவும் அமையாமல் - அடுத்தவர் நலத்திலும் - வளர்ச்சியிலும் ஆர்வத்தை உண்டாக்கி - தனக்கு என்று எதையும் இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள் . 

பிறர் பிரயோஜனம் கருதியும் - அடுத்தவர்க்காகவும் , பிரசங்க சக்தியால் பிரபஞ்ச நலம் கொடுத்து வரும் இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களுக்கு திடீரென ஆபத்துகளும் - சூழ்ச்சிகளும் வந்து விடும் . 

இவர்களின் வாழ்க்கை முடிவும் யாருக்கும் விளங்காத ரகசியமாகவே இருக்கும் . 

6 -15 - 24 - இந்த தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் இந்த 12 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் வாழ்க்கை வீணாகி விடும் 


அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C  G  L  S  B  K  R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 



ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment