ஹாய் சிவராம்
செவ்வாய் ( எண் 9 )
ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஆங்கில தேதிகள் 9 18 27 ம் தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்கள் . இவர்கள் செவ்வாய் கிரகத்தின் குணத்தை பெற்றிருப்பார்கள்
செவ்வாய் கிரக மந்திரம்
தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் சம ப்ரபம்
குமாரம் சக்திகஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாயஹம்
இதன் பொருள்
பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் மின்னலை போன்ற ஒளியை உடையவர் . சக்தி ஆயுதம் தரித்தவர் . மங்களன் என்னும் பெயரை உடைய செவ்வாயை வணங்குகிறேன்
சாகசம் தந்திரம் சூழ்ச்சி அனைத்தையும் அறிந்தவர்கள் . சமாதானங்களில் நம்பிக்கை இல்லாதவர் . தன்னை யாரும் தடுத்த நிறுத்த கூடாது என்ற எண்ணம் உடையவர் . எதிரியின் பலத்தை கணிப்பவர் . ராஜ தந்திரி . பதுங்கி பாயும் குணத்தை உடையவர் . கோபம் நிறைந்தவர் .
முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற ராணுவ தளபதிகள் காவல் அதிகாரிகள் நீதிபதிகள் பொறியியல் வல்லுநர்கள் நிலஜமீன்தார்கள் ஆகியோர்கள் 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே .
மாவீரம் படைத்த புரட்சியாளர்கள் ஒன்பதாம் எண்ணின் பலம் ஓங்கி இருப்பதால் உருவாகிறார்கள்
செந்நிறம் கொண்டவன் அழகன் கடும் கோபத்தை உடையவன் தற்பெருமை பிரியன் பொறுமையற்றவன் வேட்டை பிரியன் என்றெல்லாம் இவர்களை கூறலாம்
ஓயாத போராட்ட வாழ்க்கையும் பல்வேறு ஆபத்துகளில் அகப்படுத்தலும் இவர்களுக்கு உண்டாகும்
நல்ல செயல்களில் ஈடுபடும்பொழுதெல்லாம் புகழும் பெருமையும் மேலோங்கும்
வஞ்சக மனிதர்கள் ஏமாற்றுக்காரர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் இவர்கள் வாழக்கையில் அடிக்கடி குறிக்கிடுவார்கள்
செவ்வாயின் ஆதிக்க பலம் குறைந்த 9 ம் எண்ணினர் தீராத காம வெறியும் போதை பொருள்களில் ஈடுபாடும் மிருக சுபாவமும் சண்டை குணம் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள் .
இவர்களின் வாழ்க்கையில் 9 18 27 36 45 54 வயதுகளில் விபத்து கண்டம் ரத்தம் வெளிப்படும் சம்பவங்கள் ஏற்படும்
வாஸ்து நிபுணர்கள் கட்டட காண்ட்ராக்டர்கள் பொறியியல் துறையினர் இரும்பு இருக்கு உற்பத்தி அரசியல் பதவி விளையாட்டு வீரர் . போன்ற துறைகள் மற்ற எண்களை அனுசரித்து இவர்களுக்கு ஜீவனங்கள் உண்டாகிறது
5 14 23 6 15 24 3 12 21 30 9 18 27 ஆகிய கூட்டு எண் 3 5 6 9 வரும் நாட்களும் தேதி ஹீப்ருவின் 9 ம் எண் நாட்களும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும்
DATE OF HEEPRU 19 28 37 46 மற்றும் 27 க வரும் நாட்கள் இவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டம் தரும்
2 11 29 20 மற்றும் 2 க வரும் நாட்கள் இவர்களுக்கு மிகவும் ஆபத்தானது . இந்த தேதிகளில் இந்த எண்களில் எந்த ஒரு முக்கிய வேலைகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது
வெள்ளை நிற ஆடைகள் இவர்களுக்கு தீமையான பலனை கொடுக்கும் .
ஒவ்வொரு தேதியில் பிறந்த அனைவருக்கும் சொல்லப்பட்ட பலன்கள் அனைத்தும் பொருந்தும் . எண்கணித ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் பிறந்த தேதியை வைத்து மேலே சொன்ன அனைத்து கிரகங்களுக்கான பலன்களை சொல்லும் பொழுது அது அவர்களுக்கு மிக சரியாக பொருந்தும் . சோதித்து பாருங்கள்
தொடரும்


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment