ஜோதிட பாடம் 17
ஹாய் சிவராம்
ஒருவருக்கு பெயர் திருத்தம் செய்து கொடுக்கும்பொழுது அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கும் அந்த எண்களுக்கு உரிய கிரகத்துக்கும் குரு கிரகத்தின் பார்வை இருந்தால் அந்த நபருக்கு நாம் செய்து கொடுக்கும் பெயர் திருத்தம் மிகவும் பிரமாண்டமான பலனை கொடுக்கும் . இந்திய ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழியும் உண்டு .
ஒவ்வொரு கிரகத்துக்கும் உள்ள பார்வைகளை இப்பொழுது பார்க்கலாம்
பொதுவாக ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது இடத்தை பார்க்கும் . உதாரணத்துக்கு ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் அந்த ரிஷப ராசியில் இருந்து எண்ணி வர விருச்சிக ராசி 7 ம் இடமாக வருகிறது . ஆக சூரியனின் பார்வை விருச்சிக ராசிக்கு இருக்கிறது .
இதே போல் சூரியன் முதல் கொண்டு 9 கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது வீட்டை பார்க்கும் அதாவது 7 வது ராசியை பார்க்கும்
இதில்
இதில் குரு செவ்வாய் சனி கிரகங்கள் மட்டும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 ம் வீட்டை பார்ப்பதோடு மட்டுமல்லாமல்
குரு 5 9 ம் வீட்டையும்
செவ்வாய் 4 8 வீட்டையும்
சனி 3 10 வீட்டையும் பார்ப்பார்கள் .
ஒருவருக்கு பெயர் திருத்தம் செய்து கொடுக்கும்பொழுது அந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கும் அந்த பிரமிடு எண்களுக்கு உரிய கிரகத்துக்கும் குருவின் பார்வை இருந்தால் அது மிகவும் சிறப்பான பலனை தரும்
உதாரணத்துக்கு ஒருவருக்கு பிறந்த தேதியின் அடிப்படையில் 5 ம் ஆதிக்கத்தில் பெயர் அமைக்கவேண்டும் .
5 ம் எண்ணுக்குரிய புதன் தனுசு ராசியில் இருக்கிறார் . அவருடைய ஜாதகத்தில் குரு மிதுன ராசியில் இருக்கிறார் .
குரு இருக்கும் மிதுன ராசியில் இருந்து தனுசு ராசி வரை எண்ணி வர 7 ம் இடமாகிறது . குரு 7 ம் பார்வையாக தனுசு ராசியில் இருக்கும் புதனை பார்ப்பதால் அந்த நபருக்கு புதனின் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நல்ல பலனை தரும் .
மற்றுமொரு உதாரணம் ஒருவருக்கு பிறந்த தேதியின் அடிப்படையில் 1 ம் எண் ஆதிக்கத்தில் அதாவது சூரியனின் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கவேண்டும் .
அவருடைய பிறந்த ஜாதகத்தில் குரு தனுசு ராசியில் இருக்கிறார் . அந்த நபருக்கு சூரியனின் ஆதிக்க எண்ணான 37 ம் எண்ணில் பெயரை அமைப்பது சிறப்பான பலனை தரும் . காரணம் இந்த 37 ம் எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் .
குரு இருக்கும் தனுசு ராசியில் இருந்து எண்ணிவர சிம்ம ராசி 9 ம் இடமாகும் . குருவின் பார்வை 9 பார்வையாக சிம்ம ராசியில் இருக்கும் 37 ம் எண்ணுக்கு விழுகிறது . இந்த எண்ணுக்கு குரு பார்வை இருப்பதால் இது சிறப்பான பலனை தரும் .
அதாவது எல்லா கிரகங்களும் பொதுவாக தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது வீட்டை பார்க்கும் .
இதில் குரு சனி செவ்வாய் இந்த மூன்று கிரகங்களும் 7 பார்வையோடு மட்டுமல்லாமல் வேறு சில பார்வைகளோடு மற்ற வீடுகளை அதாவது மற்ற ராசிகளை பார்க்கும் . இதில் குரு பார்வை விசேஷ பலனாகும் .
நாளை மற்ற கிரகங்களுக்கு உள்ள பார்வையால் ஒரு நபருக்கு எண்கணித அடிப்படையில் பெயர் திருத்தம்பலன்களை உண்டாக்குமா ?
தொடரும் .
.ஜோதிடர் இராவணன் .


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment