ஹாய் சிவராம் 2026 புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீங்கள் குறிப்பிட்டது போல் 50 ம் என்பது 5 ம் எண்ணுக்குரிய பலனை அதிகப்படுத்தி தரும் அமைப்பாகும்
ஒவ்வொரு கிரகங்களும் என்னென்ன பலன்கள் தரும் என்பதை இன்று உங்களுக்கு சொல்கிறேன் .
அதேபோல் 11 ம் என்பது 2 ம் எண்ணின் உச்சகட்ட பலனை தரும் என்று சொல்லியிருக்கிறேன் .
அதே சமயம் இந்த 11 ம் எண்ணில் இரண்டு சூரியனின் ஆதிக்கத்தை குறிக்க கூடிய இரண்டு எண்கள் ( 11 ) சேர்ந்து இருப்பதால் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் முன் கோபத்தினால் வாழ்க்கையை கெடுத்து கொள்வார்கள். அதனால் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைத்தாலும் அந்த நல்ல பலனை தக்க வைத்து கொள்ள தடுமாறுவார்கள் . 11 ம் எண் பெயரில் வருவதை தடுப்பது நல்லது
மேலும் சூரியனை குறிக்க கூடிய உச்சகட்ட பலனை அளிக்க கூடிய இரட்டை படை எண்கள் இல்லை என்றாலும் அவர்களின் பிறந்த ஜாதகத்தில் சூரியன் உச்சம் அடைந்திருந்தால் அவர்களின் பெயரில் சூரியனின் அதிர்ஷ்ட எண்களில் பெயரை வருமாறு அமைக்கலாம் .
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் மேஷ ராசியில் இருந்தால் அவர்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளில் சூரியனின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் வருமாறு பெயரை அமைக்கலாம் .
சூரியனின் ஆதிக்க எண்களில் நன்மை தரக்கூடிய எண்களும் இருக்கிறது . அதே சமயம் தீமை தரக்கூடிய எண்களும் இருக்கிறது . அதை உங்களுக்கு பிறகு சொல்கிறேன் .
அடுத்து சனியின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் வரிசையில் 62 ம் எண் உச்சகட்ட பலனை அளிக்கும் எண் என்று சொல்லி இருக்கிறேன் .
மேஷ ராசி முதல் மீன ராசி வரை ஒவ்வொரு ராசியிலும் எந்தெந்த எண்கள் எந்தெந்த ராசி கட்டத்தில் அடங்கி உள்ளது என்பதையும் உங்களுக்கு சொல்கிறேன்
இனி சூரியன் உச்சம் அடையும் ராசி அதாவது உச்சகட்ட பலனை அளிக்க கூடிய ராசி மேஷ ராசி இந்த ராசியில் இடம் சூரியனின் ஆதிக்க எண் 1
சந்திரன் உச்சம் அடையும் ராசி ரிஷபம் . இந்த ராசியில் இடம்பெறும் சந்திரனின் உச்சகட்ட பலனை அளிக்க கூடிய எண் 11
குரு உச்சம் அடையும் ராசி கடகம் . இந்த ராசியில் இடம் பெறும் குறுவின் உச்ச கட்ட பலனை அளிக்க கூடிய எண் 30.
ராகு உச்ச மடையும் ராசி ரிஷபம் . இந்த ராசியில் இடம் பெறும் ராகுவின் உச்ச கட்ட பலனை அளிக்க கூடிய எண் 13. இந்த ரிஷப ராசி சந்திரன் ராகு இரண்டு கிரகங்களும் உச்ச மடையும் ராசி .
புதன் உச்சமடையும் ராசி கன்னி . இந்த ராசியில் இடம் பெறும் உச்ச கட்ட பலனை அளிக்க கூடிய புதனின் எண் 50.
சுக்ரன் உச்சமடையும் ராசி மீனம் . இந்த ராசியில் இடம் பெறும் உச்ச கட்ட பலனை அளிக்க சுக்ரனின் எண் 105. இந்த 105 எண் மனிதனின் பெயரிலோ அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரிலோ வருவது சிரமம் . வேறு ஒரு சுக்ரனின் ஆதிக்க எண்களில் பெயரை அமைக்கலாம் .
சனி உச்சமடையும் ராசி துலாம் . இந்த ராசியில் இடம் பெறும் உச்ச கட்ட பலனை அளிக்க கூடிய சனியின் எண் 62.
செவ்வாய் உச்சமடையும் ராசி மகரம் . இந்த ராசியில் இடம் பெரும் உச்ச கட்ட பலனை கொடுக்க கூடிய செவ்வாயின் எண் 90.
இந்த உச்ச கட்ட பலனை அளிக்க கூடிய எண்கள் எப்படி வருகிறது என்பதை பார்ப்போம் .
மேஷம் முதல் மீனம் வரை மொத்தம் 12 ராசிகள் உள்ளது .
ஒவ்வொரு ராசியிலும் 9 எண்கள் பெறும்
உதாரணத்துக்கு மேஷ ராசி இதில்
1 2 3
4 5 6
7 8 9
இந்த 9 எண்களும் மேஷ ராசியில் வரும் . மேஷ ராசியில் சூரியன் உச்சமடையும் எண் 1 என்று சொல்லி இருக்கிறேன் .
அடுத்து ரிஷப ராசியில் 9 எண்கள் இடம் பெறும்
10 11 12
13 14 15
16 17 18
ரிஷப ராசியில் சந்திரன் உச்ச மடையும் எண் 11 .
மிதுன ராசியில் இடம் பெறும் 9 எண்கள்
19 20 21
22 23 24
25 26 27
இந்த மிதுன ராசியில் எந்த ஒரு கிரகமும் உச்சம் அடையாது .
அடுத்து கடக ராசியில் இடம் பெறும் 9 எண்கள்
28 29 30
31 32 33
34 35 36
இதில் குரு உச்சமடையும் எண் 30
அடுத்து சிம்ம ராசியில் இடம் பெறும் 9 எண்கள் .
37 38 39
40 41 42
43 44 45
இதில் எந்த ஒரு கிரகமும் உச்சம் அடையாது .
கன்னி ராசியில் இடம் பெறும் 9 எண்கள்
46 47 48
49 50 51
52 53 54
இதில் உச்சமடையும் எண் 50.
மீதமுள்ள ராசிகளில் எண்கள் எப்படி அமைகிறது என்பதை நாளை பார்ப்போம் .
ஜோதிடர் ஆர். இராவணன் BSC


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment