ஹீப்ரு எண் 19 ம் எண்ணின் பலன்கள் :
சூரியனின் ஆதிக்க எண்ணும் செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
மந்திர சாஸ்திர நூல்களில் திரிலோக வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . " ஆகாய அரசகுமாரன்" "கருத்தொருமித்த காதலர் எனவும் போற்றப்படுகின்ற இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் .
அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும் . பெண்களாலும் அரசாங்கத்தாலும் முன்னேற்றம் உண்டாகும் . இவர்களின் சொல்லுக்கு ஒருவிதமான வசிய சக்தி ஏற்பட்டு உலக மாந்தர்கள் அனைவரும் இவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் .
கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைத்து ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் . ஸர்வ ஸதம்பன வித்தைகளும் மிருக வசியமும் மந்திர சித்தியும் இந்த எண்ணிற்கு உண்டு நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும் இந்த எண்ணிற்கு விலகி விடும் . எப்பொழுதும் திறமையுடனும் கட்டுப்பாடான வாழ்க்கையில் பிரியாத சக்தியாக இவர்கள் விளங்குவார்கள் .
உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள் . பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே இந்த 19 எண்ணில் அமைந்தால் மிகுந்த மேன்மை ஏற்படும் .
பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 8 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் ஆபத்துக்கள் உண்டாகும் .
பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 8 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் ஆபத்துக்கள் உண்டாகும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டதிசை - கிழக்கு
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள்
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம்
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள்
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு .
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை
பரிகாரம் : 1
சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் .
பரிகாரம் : 2
செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் .
பரிகாரம் : 3
பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் .
பரிகார தலம் :
இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment