சூரியன் எண் 1
ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரிக்கலாம் .
சூரியனார் கோயில் சென்று கோதுமை பொங்கல் படைத்தது வழிபடலாம் .
கோதுமை தானம் செய்யலாம் .
சிகப்பு நிற பசுவை கோயிலுக்கு தானம் செய்யலாம்
சந்திரன் எண் 2.
பவுர்ணமி பூஜை சத்யநாராயண பூஜை செய்யலாம்
திருப்பதி சென்று வழிபடலாம்
வெட்டிவேர் சிவந்த சந்தனம் குங்குமம் இவைகளை ஒரு கலசத்தில் போட்டு சந்திர காயத்ரி மந்திரத்தால் அர்ச்சித்து அந்த கலச நீரை கொண்டு ஸ்தானம் செய்யலாம்
அரிசி வெள்ளை நிற வஸ்திரம் பசு நெய் வெண்மை நிற பூக்கள் இவைகளை திங்கள் கிழமைகளில் தானம் செய்யலாம் .
குரு எண் 3 .
ஆலம் விழுது ஆலம் பழங்கள் ஒரு குடத்தில் தண்ணீருடன் வைத்து குரு காயத்ரியால் மந்திரித்து ஸ்நானம் செய்யலாம்
புஷ்பராக மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்
மஞ்சள் நிற வஸ்திரம் அணியலாம் . அல்லது தானம் செய்யலாம் . மஞ்சள் பொடியை பெண்களுக்கு தானம் செய்யலாம்
செவ்வாய் வியாழன் கிழமைகளில் குரு பகவானை பொன் நிற மலர்களால் அர்ச்சனை செய்யலாம்
திரு ஆலங்குடி சென்று வழிபட நன்மைகள் உண்டாகும் .
வியாழ கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும் .
ராகு புதன் 4 ம் எண்ணிற்கும் 5 ம் எண்ணிற்கும்
பச்சை நிற வஸ்திரம் பச்சை பயிறு பித்தளையிலான பொருள் இவற்றை புதன் கிழமையன்று தானம் செய்யலாம்
பச்சை நிற மரிக்கொழுந்து கொண்டு புதன் கிழமையன்று புதனுக்கு அர்ச்சனை செய்ய நன்மைகள் உண்டாகும்
புதன் பகவானை பூஜித்து பாசிப்பருப்பாலான பாயாசம் பாசிப்பயிறு சுண்டல் கேசரி இவைகளை நெய்வேதனம் செய்து தானம் செய்ய நன்மைகள் உண்டாகும்
சுக்ரன் எண் 6
வெள்ளை ஆடை வெண்பட்டு வெள்ளி சந்தனம் அரிசி இவைகளை வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய நன்மைகள் உண்டாகும்
திருநாவலூர் கஞ்சனூர் ஸ்ரீரங்கம் சென்று வழிபட நன்மைகள் உண்டாகும்
கேது சனி 7 ம் எண் 8 ம் எண் இரண்டிற்கும்
உளுந்து வால் மிளகு நவதானியம் நீல நிற பூக்கள் இவைகளை பித்தளை பாத்திர நீரில் வைத்து சனி காயத்ரி மந்திரம் உச்சரித்து ஸ்நானம் செய்ய நன்மைகள் உண்டாகும்
எள்ளு தானம் செய்ய நன்மைகள் உண்டாகும்
ஆஞ்சநேயர் வழிபாடு தயிர் சாதம் தானம் நன்மைகள் தரும்
சுமங்கலி பெண்ணுக்கு மாங்கல்ய தானம் செய்ய நன்மைகள் உண்டாகும் .
செவ்வாய் எண் 9
கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்
அகில் கட்டை தேவதாரு பட்டைகள் சந்தனம் இவற்றை வெள்ளி பாத்திரத்தில் வைத்து ஜபித்து ஸ்நானம் செய்ய நன்மைகள் உண்டாகும்
வைத்தீஸ்வரன் கோயில் சென்று வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும்
பவழம் சிகப்பு நிற வஸ்திரம் மாம்பழம் இவைகளை தானம் செய்ய நன்மைகள் உண்டாகும்
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
0 comments:
Post a Comment