இந்திய புராண நவ கிரக கதைகளின் படி 2 ம் எண்ணுக்குரிய சந்திரனும் 7 ம் எண்ணுக்கு உரிய கேதுவும் பகை கிரகங்கள் . இருந்தாலும் இங்கே இந்தியாவில் தமிழ் நாட்டில் அதிக எண் கணித ஜோதிடர்கள் 2 ம் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 7 ம் எண்ணின் அதிர்ஷ்ட எண்களிலும் 7 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 2 ம் எண்ணுக்குரிய அதிர்ஷ்ட எண்களிலும் பெயரை அமைக்கிறார்கள் .
என்னுடைய ஜோதிட அனுபவத்தில் பெயரின் நியூமராலஜி எண்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் 4 - 7 - போன்ற எண்களில் அமையக்கூடாது . நானும் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறேன் .
ஏனென்றால் இந்த எண்களின் அதிர்ஷ்ட எண்களில் பெயரின் ஹீப்ரு எண்கள் அமைந்து பலனை தந்தாலும் அந்த பலன் நிலைக்காது .
வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு 2 ம் எண்ணுக்குரிய அதிர்ஷ்ட எண்களிலும் பெயரை அமைப்பது நன்மை தரும் . சுருக்கமாக சொல்லப்போனால் 2 ம் எண்ணும் 7 ம் எண்ணும் பகை கிரகங்கள் ஆகும் .
சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 6 ம் எண் ஆதிக்க எண்கள் முதல் தர பலனையும் 5 ம் எண் ஆதிக்க எண்கள் இரண்டாம் தர பலனையும் 1 ம் எண் ஆதிக்க எண்கள் 3 ம் தர பலனையும் கொடுக்கும் .
பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளில் எந்த கிரகம் அவருடைய ஜாதகத்தில் வலிமையாக இருக்கிறதோ அந்த கிரகம் அவர் வாழ்க்கையில் நடக்கும் பலன்களை தீர்மானிக்கிறது . ஒருவரின் பிறந்த தேதிக்குரிய கிரகமோ அல்லது பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகமோ அல்லது பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகமோ சூரியனாய் இருந்து அவரின் ஜாதகத்தில் சூரியன் மேஷ ராசியில் இருந்தால் அந்த சூரியனுக்குரிய பலன்கள் அவரின் வாழ்க்கையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் .
ஒருவரின் பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ஹீப்ரு எண்ணும் ஒன்றுக்கொன்று நட்பான எண்களில் அமையவேண்டும் . உதாரணத்திற்கு பெயர் எண் 1 ம் ஆதிக்கத்தில் அமைந்தால் ஹீப்ரு எண் 3 ம் எண்ணின் அதிர்ஷ்ட எண்களிலும் அமைக்கலாம் .
அதே சமயம் நியூமராலஜி எண்ணும் ஹீப்ரு எண்ணும் ஒரே கிரகத்தின் அதிர்ஷ்ட ஆதிக்க எண்களிலும் வரலாம் .
பெயரை அரசாங்க ஆவணத்தில் மாற்றவில்லை என்றாலும் திருத்தம் செய்து கொடுக்கும் அதிர்ஷ்ட பெயரை தினமும் 32 தடவை எழுதி பார்ப்பது நல்லது . பெயரை அரசாங்க ஆவணத்தில் மாற்றவேண்டும் என்ற கட்டாயம் இல்லை .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment