Home » »

 


ஹீப்ரு எண் 88 ன் பலன்கள் : 

சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண் இரண்டு முறை வந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 88 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

அறிவு சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த எண் வழங்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 88 க வருபவர்கள் ஆன்மீக உணர்வு பெறுவார்கள் . மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் . 

சகலவிதமான உயிர்களிடத்தும் கருணை காட்டும் நல்ல மனம் படைத்தவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . மிகுந்த கீர்த்தி உண்டாகும் , சாத்வீகமான தன்மைகள் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும் .  தான் உயர் நிலையில் உள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளோரையும் சமமாக மதிப்பார்கள் . 

நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . அரசியல் துறையில் மிகவும் பிரபலமாகவும் - சினிமா இசை விளையாட்டு துறைகளில் இவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள் . 


பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த 88 ம் எண் சகல  வித சௌபாக்கியங்களையும் வழங்கி சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி காட்டும் . 

மேலும் பிறந்த தேதியில் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணில் - பிறந்த தேதியினுடைய கூட்டு எண்ணில்  1 - 5 - 6 க உள்ளவர்களுக்கு இந்த 88 ம் எண்  அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் .

ஹீப்ரு எண் 89 ன் பலன்கள் : 

சனிபகவானின் ஆதிக்க எண்ணும் செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 89 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய சனிபகவானின் ஆட்சி எண்ணாகும் . 

வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சோதனைகளை தந்தாலும் அபாரமான வெற்றிகளையும் செல்வப்பெருக்கையும் தரும் வலிமை கொண்டது . மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்றும் , செல்வம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டு பின் விலகி போகும் . 

கணக்கில் அடங்காத ஏராளமான சொத்துக்களும் வண்டி வாகனங்கள் பூமி கட்டடங்கள் ஆபரணங்கள் போன்றவை இந்த 89 ம் எண்ணிற்கு அதிகம்   சேரும் . ஆண்கள் தங்களின் பெயரை இந்த எண்ணில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருமாறு வைத்துக்கொண்டால் பெண்களால் மிகவும் விரும்பப்படுவார்கள் . 

பெண்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் சொந்த பந்தங்களாலும் தனது இனத்தவர்களால் மிகவும் நேசிக்கவும் மதிக்கவும் போற்றவும் படுவார்கள் . அழகும் ஐசுவர்யமும் சேர்ந்து காணப்படுவதோடு அல்லாமல் இந்த எண்ணிக்கையில் பெயர் உள்ளவருக்கு தீவிரமான சொல்லும் செயலும் உண்டாகி வெற்றியை பெற்று தரும் . துடுக்கான பேச்சும் கம்பீரமான குரலும் நடை உடை பாவனைகளில் கவர்ச்சியும் இருக்கும். 

வாழ்க்கையில் அச்சமற்ற வாழ்வும் இவர்கள் பேச்சை  அச்சம் அடைய கூடியதுமான மிடுக்கும் உண்டு .  தனக்கு வரும் ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளும் புத்தி யுக்தி சாதுர்யம் பெற்றவர்கள்

ஹீப்ரு எண் 90 ன் பலன்கள்  விடுபட்டுள்ளது குறித்து வைத்து கொள்ளவும் 

ஹீப்ரு எண் 91 ன் பலன்கள் :

இது சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள அதிர்ஷ்ட எண்ணாகும் . நிலையான வெற்றிகளும் - அபரிதமான பொருள் வரவும் இந்த எண்ணிற்கு உண்டு . சங்கீதத்தில் ஆர்வத்தை காட்டுகிறது இந்த எண் . தெய்வ பக்தி மிகும் 

பல புண்ணிய ஷேத்திரங்ளை போய் தரிசனம் செய்யும் பாக்கியம் உண்டு . ஜோதிடத்தில் அவிட்டம் நட்சத்திரம் 3 ம் பாதத்தில் இந்த 91 ம் எண் அமைகிறது . முடிவு எண்ணாகிய 9 ம் எண்ணுக்கு அடுத்து ஆரம்ப எண்ணாகிய 1 ம் எண் வருவது முடிவல்ல ஆரம்பம் என்று உணர்த்துகிறது . அன்னநடை - பூமி லாபம் என்றெல்லாம் இந்த 91 ம் எண் பற்றி மந்திர நூலில் உள்ளது . 

வாழ்க்கையில் எப்பொழுதும் பயணங்கள் முடிவதில்லை என்பது போல் 91 கே பெயர் உடையவர்களுக்கு சஞ்சாரம் அநேக யாத்திரைகள் படகு - கப்பல் - பஸ் - லாரி - விமானம் மூலமாக செய்யும் வியாபாரங்களால் பெரும் செல்வம் கூடி கொண்டே போகும் . பிரயாணத்தால் வரக்கூடிய லாபத்தை இந்த 91 ம் எண் குறிக்கிறது . செய்யும் தொழிலில் ஏற்றுமதி இறக்குமதி கம்பெனிகளுக்கு இந்த எண்ணில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெயர் அமைந்தால் செல்வ வளம் தரும்

சகல சௌபாக்கியங்களுடன் சுகமான வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு . அசையாத சொத்துக்கள் பல மாடி கட்டிடங்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ரியல் எஸ்டேட் போன்ற வகைகளில் சொத்து சுகம் செல்வம் எப்பொழுதும் நிறையும் . பூமி வகை தொழில் வாஸ்து காண்ட்ராக்ட் சிவில் பொறியாளர் ஆகியோருக்கு அற்புதமான எண்ணாகும் . விற்பனை பிரதிநிதி விற்பனை அதிகாரி மருத்துவ துறையினருக்கு மகத்தான எண்ணாகும் . பல ஊர்களுக்கும் , நாடுகளுக்கும் சென்று செல்வ செழிப்போடு திரும்பும் பாக்கியம் பெற்றவர்கள் இந்த எண் காரர்கள் . நாட்டியம் , விளையாட்டு துறைகளில் ஆர்வம் உண்டாகும் . 

ஸ்ரீ மீனாட்சி கலிவெண்பா 91 பாடல்களை கொண்டது என்பதால் அன்னையின் அருள் நிச்சயம் உண்டு . 

ஹீப்ரு எண் 92. ன் பலன்கள் :

செவ்வாயின் ஆதிக்க இன்னும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் 92 என்று சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் கும்பராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இரண்டாம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும் . 

பொன் பொருள் பூமி அனைத்தையும் தரும் வலிமை கொண்டது. சந்திர மங்கள யோகம் என்ற ஒரு வகையான யோகத்தை ஏற்படுத்தும் எண்ணாகும் . மந்திர  நூல்களில் ராஜ்ய பரிபாலனம் தெய்வீக சேவகம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . சுகமான மங்களகரமான வாழ்வும் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் இந்த எண்ணிற்கு உண்டு . 

தங்கம் வைரம் நவரத்ன ஆபரணங்களும் பூமி வீடு மில் பேக்டரி போன்ற பாக்கியங்களும் உண்டு . அரச பதவிகளும் நிர்வாக பொறுப்புகளும் உண்டு . 

மன உறுதி கற்பனை வளம் திரவ வகையான தொழில்களால் லாபம் கடல் வாணிபம் ஏற்றுமதி இறக்குமதி குளிர்பானங்கள் பால் மீன் வகை தொழில்கள் சிகப்பு நிறமுள்ள பொருள்களால் அதிக லாபம் உண்டு . 

படுக்கை விரிப்பு கட்டில் நாற்காலிகள் விற்பனை நிலையங்களும் இந்த 92 ல் பெயர் அமைத்து கொண்டால் அதிக லாபம் காணலாம் .   2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2  வருபவர்களும் இந்த எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் உடல் ஆரோக்யம் கெடும். குடும்ப வாழ்வில் சிக்கல்கள் உண்டாகும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment