Home » »



ஹீப்ரு எண் 93 ன் பலன்கள் :

இது குருபகவானின் ஆதிக்க எண்ணாகும் . செவ்வாயை குறிக்கும் 9 ம் எண்ணும் - குருவை குறிக்கும் 3 ம் எண்ணும் இணைந்து குருவின் ஆதிக்க தன்மையை உணர்த்துகிறது . 

மனோரத சித்திகளை வழங்கும் எண் ஆகும் . " உலகை ரட்சித்தல் "  வருவதால் மக்களை ஆளும் பதவிகள் உண்டு . தெய்வகருணை  பெற்ற எண் என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகளை உண்டாகி வரும் . 

செவ்வாயும் குருவும் இணைந்து 93 ம் எண்ணாக வருவதால் கற்பனை வளம் மிகுந்திருக்கும் . யாரும் சாதிக்க முடியாத காரியங்களை சாதித்து வெற்றி கொள்ளும் வெற்றிமானாக விளங்குவார்கள் . 

அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த  மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள் . சதயம் எண்ணும் ராகு நட்சத்திரம் முதற்பாதம் 93 ம் எண்ணாக வருவதால் உலக அறிவு மிகுதியாக  உண்டாகும் . 

மனதில் மலரும் ஆசைகள் நிறைவேறும் . காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவுகளும் புகழும் பொருளும் வழங்கி கலைஞர் என்ற பெயரும் தரும் . பல தொழில்களில் லாப மேன்மை உண்டு . கும்ப ராசி 310 டிகிரி பாகையில் இடம்பெறும் இவ்வெண் நவாம்சத்தில் தனுசு ராசியின் முழு தன்மையை பிரதி பலிப்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வரும் குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு எண் 93 க வரும்பொழுது மிகுந்த அதிர்ஷ்ட மேன்மையை உண்டாக்கும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வரும் குழந்தைகளுக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்தால்  எதிர்காலத்தில் வீண் சிக்கல்கள் உண்டாகும் . 

ஹீப்ரு எண் 94 ன் பலன்கள் :

இது செவ்வாய் ராகுவின் ஆதிக்கம் கலந்து மறுபடியும் ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . இவர்கள் நாளும் தெரிந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் . எந்த துறையில் இறங்கினாலும் அதில் வெற்றியும் அறிவும் பெறுவார்கள் . உலகத்தினருக்கு அநேக நன்மைகளை வழங்குவார்கள் 

பொதுவான சமூக சீர்திருத்தங்களையம் இவர்கள் செய்வார்கள் . வாழும்பொழுது இவர்கள் செய்யும் செயல்கள் இவர்கள் மறைவிற்கு பிறகும் நன்மை சேர்க்கும் . செல்வம் புகழ் வெற்றி கற்பனைத்திறன் மனோவலிமை நிர்வாக திறன் அரசியல் சிறப்பு திரவ சம்பந்தமான தொழில்களால் மேன்மை உண்டாகும் . 

பிறந்த தேதி 7 - 4 - 8 - லும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 7 - 4 - 8 - வருபவர்களும் இந்த 94 ம் எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருமாறு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து பயன்படுத்தினால் நன்மைகள் உண்டாகும் .

ஹீப்ரு எண் 95 ன் பலன்கள் :

செவ்வாயின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கும்பராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இந்த அதிர்ஷ்டகரமான எண் பெண்களுக்கு உகந்த அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . உயர் பதவி செல்வம் புகழ் செல்வம் தொழில் திறமை  மருத்துவ துறையில் மேன்மை வெளிநாட்டு யோகம் பொதுமக்களை மகிழ்விக்கும் தொழில்கள் அந்நிய நாட்டு பொருள்களை விற்கும் அங்காடிகள் ஆகியவைகளுக்கு இந்த எண் சிறப்பை தரும் .

இந்திரிய விக்கிரகம் செய்து காமத்தை வென்றவர்களுக்குத்தான் பராசக்தியை நெருங்கி பூஜை செய்யும் பாக்கியம் உண்டு என வரும் மந்திர நூலின் கருத்துக்கு ஏற்ப இந்த 95 ம் எண்ணினாருக்கு இயல்பாகவே கட்டுப்பாடான வாழ்க்கையும் மன ஒருங்கிணைப்பு சக்தியும் ஏற்படும் .

வீர தீர செயல்களையும் புகழையும் பெற்று பெருமையான வாழ்வை பெரும் யோகம் உள்ளவர்கள் .

நூதனமான சாமான்களாலும் வியாபார துறைகளாலும் மிகுந்த லாபங்கள் ஏற்படும் . நாவன்மையும் சொற்பொழிவு திறந்தாலும் ஒரு விஷயத்தை எடுத்து சொல்லும் பாங்கினாலும் விருத்தி ஏற்படும் .

புகழ் பரவும் விளம்பரம் ஏற்படும் . சனி நவாம்சமும் கும்ப வர்கோத்தமம்  பெற்று ஆயுள் காரனின் பலம் கிட்டுவதால் ஆயுள் விருத்தி உண்டு . வலிமையான தொழில்கள் மேன்மையான வளமும் உண்டு 

ஹீப்ரு எண் 96 ன் பலன்கள் :

சகோதரகாரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயும் சுபயோககாரகன் என்று சொல்ல கூடிய சுக்ரனும் இணைந்து 96 என்று வரும் இந்த அதிர்ஷ்டகரமான எண் கும்பராசியில் வரக்கூடிய அதிர்ஷ்டகரமான சுக்ரனின் ஆதிக்க எண்ணாகும் .  
நிலையான ஐஸ்வர்யமும் கல்வி துறையில் பிரமாண்டமான முன்னேற்றமும் சாதனைகளும் இந்த எண்ணிற்கு உண்டு . மனதில் நினைக்கும் எண்ணிய எண்ணங்களில் எல்லாம் நிறைவான வெற்றிகளும் ஆதர்ஷன சக்திகளும் உண்டாகும் . 

ஆயகலைகள் 64 ல் ஒன்று கைவரப்பெற்று கலைத்துறையில் முன்னேற்றமும் புகழும் உண்டாகும் . 

மங்கையர்கள் மனதில் நீங்காத இடம் பெரும் நிலை உண்டாகும் . மிக்க அதிர்ஷ்டகரமான இந்த எண் கும்பராசியில் சதயம் நட்சத்திரத்தில் 360 டிகிரியில் மீன நவாம்சமும் மிதுன திரேக்காணமும் பெற்று நிற்பதால் , கலைமகளும் திரு மகளும் இந்த எண்ணில் வாசம் செய்கின்றனர் . 

செவ்வாய் + சுக்ரன் இணைந்து 96 என்று வெளிப்படுத்துவதால் பிருகு மங்கள யோகம் என்ற ஒருவகையான அதிர்ஷ்டகரமான யோகம் ஏற்பட்டு வாழ்க்கை துணை மூலம் வளமும் நலமும் உண்டாகும் 

வீடு நிலம் ரியல் எஸ்டேட் சிகப்பு பச்சை நிற பொருள்களால் லாபம் ஏற்படும் . " ஸரஸ்வதி வல்லபர்கள் , லஷ்மீபதிகள் எனவும் கல்வியையும் செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்தி கொள்ளலாம் எனவும் மந்திர நூல்களில் காணப்படுவதால் தனம் தானியம் குதிரை யானை மந்திரம் ஜெபம் கல்வியறிவை இவ்வெண் தரும் . 

பிறந்த தேதி - 3 - 12 - 21 - 30 வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கும் இந்த எண்  நன்மை தராது . 

 ஹீப்ரு எண் 97 ன் பலன்கள்  விடுபட்டுள்ளது . குறித்து வைத்துக்கொள்ளவும் 

ஹீப்ரு எண் 98 ன் பலன்கள் :

நவகிரகங்களில் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 17 என்று வந்து மறுபடியும் சனிபகவான் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 98 ம் எண் கும்பராசியில் வரக்கூடிய எண்ணாகும் . ஏக்கமான மனநிலையை உணர்த்துவதை இந்த எண் குறிப்பிடுகிறது . வாக்கு சித்தி என்றும் - தேவியின் பாத தீர்த்தம் என்றும் கூறப்படுவதால் ஊமையையும் பேச வைக்கும் சக்தி கொண்டது இந்த எண் . 

98 ல் பெயர் கொண்டவர்கள் தீவிர தெய்வ பக்தியின் மூலம் கர்ப்ப ப்ராப்தியையும் பெற முடியும் . அதாவது குழந்தை பாக்கியம் உண்டாகும் . 

நாவில் சரஸ்வதி தேவி குடி இருப்பதால் சொல் பலிதம் உண்டு . ஆசிரியர்கள் பேச்சாளர்கள் வழக்கறிஞர்கள் இவர்களுக்கு ஏற்ற எண்ணாகும் . பிறந்த தேதி -  பிறந்த தேதியின் கூட்டு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த 98 ம் எண் உகந்ததாகும் . மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு அவ்வளவு சிறப்பான எண்ணாக இல்லை .  
தன்னுடைய அறிவு தனக்கு பயன்படவில்லையே என்ற வருத்தம் உண்டாகும்  கவலைகள் நிறைந்த வாழ்க்கையும் கஷ்டங்களும் தீராத வியாதிகளும் உண்டாகும் . வியாபார நிறுவனங்களின் பெயர்கள் இந்த 98ல் வந்தால் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம் . மனிதனின் பெயரில் இந்த எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது நெருப்பு மின்சாரத்தால் ஆபத்து உண்டு . 

திருமண தேதியில் திருமண தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 ல் வந்தால் மருமாங்கல்ய பூஜை செய்துகொள்வது நல்லது . 

ஹீப்ரு எண் 99 பலன்கள் விடுபட்டுள்ளது . குறித்து வைத்துக்கொள்ளவும் . 

மேலும்   100 - 101 - 102 - 103 - 104 - 105  - 106  - 107 - 108 - 109 - ன் பலன்கள் பெயரை அமைப்பதற்கும் நிறுவனத்தின் பெயரை அமைப்பதற்கும் தேவைப்படாது . அதனால் இந்த எண்களின் பலன்கள் வேண்டாம் 

இனி விடுபட்டுள்ள எண்களை மட்டும் எனக்கு  மெயிலில் அனுப்பவும் . அதற்குரிய பலன்களை உங்களுக்கு அனுப்புகிறேன் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment