Home » »


ஹீப்ரு எண் 75 ன் பலன்கள் :  

கேதுபகவானின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 75 ம் தனுசு ராசியில் வரக்கூடிய குருபகவானின் ஆட்சி எண்ணாகும் . 

3 ம் எண் வரிசையில் அற்புதங்கள் நிறைந்த எண்ணாகும் . எதிர்பாராத புகழையும் விரைவான நண்பர்களின் தொடர்பையும் தரக்கூடியது . பல நூல்கள் எழுதும் திறனையும் சுகம் சந்தோஷம் கவிதா சக்தி கலைத்திறன் பேச்சுத்திறன் மொத்தத்தில் சரசுவதி கடாட்சம் பெற்ற அதிர்ஷ்டகரமான எண்

கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் காணப்படும் . பணம் புழங்கும் தொழில்களில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும் . திரவம் சம்பந்தப்பட்ட உணவு பொருள்களில் ஒப்பற்ற உயர்வும் வரவும் ஏற்படும் . பால் பண்ணை குளிர்பானங்கள் பால் தரும் பசுக்களாலும் சந்தோஷம் உண்டு. 

சொற்களில் சந்தேகம் இல்லாமல் பளிச்சென்று வார்த்தைகள் வெளிவரும் . நல்ல மனத்துடன் கடவுளை தியானித்து வருபவர்கள் அதிலும் அன்னையை வணங்கி வருபவர்கள் அமிர்தம் போன்ற இனிக்கும் அதிர்ஷ்டத்தை அடைவார்கள் .6 - 15 - 24 ஐ பிறந்த  தேதியாக கொண்டவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த எண்ணில் பெயர் வைத்து கொள்ளவேண்டாம் .  

3 - 8 - 9 - ம் தேதியில் பிறந்தவர்களுக்கு கவிதா சக்தியும் கலைத்துறையில் உயர்வும் அரசனை போன்ற வாழ்வும் தரும். 

ஹீப்ரு எண் 76 ன் பலன்கள் :

கேது பகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் சுக்ரனை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் இணைந்து ராகு கிரகத்தின் ஆதிக்கத்தை இந்த 76 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

புது புது வழிகளில் பணம் பொருளாதாரம் வந்து சேரக்கூடிய பாக்கியத்தை கொடுக்கக்கூடியது இந்த எண் .எகிப்திய பிரமிடுகளில் நாணயங்களில் நட்சத்திர குறி பொறிக்கும் மனிதனோடு கூடிய சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

இவர்கள் மூலமாக கஷ்டப்படுபவர்களுக்கு நன்மையும் பலனும் உண்டாகும் . மற்றவர்களுக்கு உதவும் செயல்களில் ஈடுபடுவதால் கடவுளின் ஆசியுடன் இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும் . 


சமுதாய நலனில் அக்கறை கொண்டு பொது காரியங்களில் அந்தஸ்தும் புகழும் உயரும் . மற்றவர்கள் பார்த்து வியப்படையும் அளவுக்கு மற்றவர்கள் கண்டு பிடிக்கமுடியாத புது புது வழிகளில் பண வரவு இவர்களிடம் இருக்கும் . இவ்வளவு சிறப்பான பலன்கள் இவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றாலும் சில நேரங்களில் திடீரென எல்லா செல்வங்களையும் இழக்க நேரிடும் சூழ்நிலையும் உண்டாகும் . 
தொழில் நிறுவங்களுக்கு இந்த எண்களில் பெயர் அமைவது லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் .     

வட்டிக்கடை நிதி நிறுவனம் மூலமாக லாபம் உண்டாகும் . ஓவியம் பிரிண்டிங் தொழில் சிற்பம் போன்ற தொழில்களால் மேன்மை உண்டாகும் . 

கலை துறையில் நிலையான வெற்றி உண்டாகும் . 

பெயரின் எண் இந்த 76 வந்து  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 19 - 46 - 37 ஜக வந்தால் நிலைத்த வெற்றிகளை தரும் . 

ஹீப்ரு எண் 77 ன் பலன்கள் : 

கிரகங்களில் கேதுபகவானின் 7 என்ற இரண்டு ஆதிக்க எண்கள் இணைந்து புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 77 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாகும் . கம்பீரமான தோற்றத்தையும் புகழையும் தரும் வலிமை கொண்டது . சாதனைகளை உருவாக்கி புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டது . ஸர்வ ஜன வசியம் என்று மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . சொந்த தன்முனைப்பும் நிலையான ஐஸ்வரியத்தையும் தரும் . 

நிலையான புகழையும் வசீகரமான வாழ்க்கையும் இந்த எண்ணிற்க்கு உண்டு . வெளிநாட்டு பிரயாண யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து யோகங்களை வழங்கும் . 

கேதுபகவானை குறிக்க கூடிய 7 ம் எண் இரண்டு முறைவருவதால் தெய்வ பக்தியில் தீவிரமாக மனதை செலுத்தி வந்தால் முன்னேற்றமாக இருப்பார்கள் சாமர யோகம் என்ற  ஒருவகையான யோகம் இந்த 77 ம் எண்ணிற்கு இருப்பதால் உயர் பதவி  - புகழ்  - எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும் . வெளி நாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தையும் பொது காரியங்களில் பிரசித்தியையும் உண்டாக்கும் .

அரசாங்க துறையிலும் - அரசியலிலும் சட்ட நிபுணத்துவம் போன்ற துறைகளிலும் புகழை உண்டாக்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 41 - 23 க வந்து பெயரின் நியூமராலஜி கூட்டு எண் 77 க வருமானால் ஆனந்தமான வாழ்க்கை அமையும் .

ஹீப்ரு எண் 78 ன் பலன்கள் :

கிரகங்களில் கேதுவை குறிக்க கூடிய 7 ம் எண்ணும் சனி பகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 78 என்று புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

பல விதமான பொருள் வரவும் வீடு வாகனம் போன்ற சுபயோகமும் தரும் வலிமை கொண்டது . ஆன்மீக பலம் கொண்டது இந்த எண் . கேட்போரை பிரமிக்க வைக்கும் சக்தியும் மயங்க வைக்கும் சொல்லும் இவர்களுக்கு உண்டு . தர்ம ஸ்தாபிதம் செய்வதிலும் சமூக சேவை செய்வதிலும் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும் .பிறர் வாழ்க்கையை உயர்த்த பாடுபடுவதில் இவர்கள் தீவிரமாக இருப்பர்கள் . 

எப்பொழுதும் அன்பும் அருளும் கொண்ட இவர்கள் அமானுஷ்ய சக்தியைகளை பெற்று திகழ்வார்கள் . செல்வ வளமும் தெய்வீக சக்தியும் இணைந்து பெற்ற இவர்கள் அஷ்ட லட்சுமிகளின் அனுகூலத்தை பெற்றவர்கள் ஆவார்கள் . மேலோரால் நன்மை பெறுவார்கள் . 

பிறந்த தேதி 6 - 15 - 24 - 9 - 18 - 29 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  - 6 - 9 - க வருபவர்களும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 78 வருமாறு பெயரை அமைத்து கொண்டால் சகல மேன்மைகளும் உண்டாகும் . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க உடையவர்கள் இந்த 78 ம் எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் தீமையான பலன்கள் உண்டாகும் .

ஹீப்ரு எண் 79 ன் பலன்கள் : 

கேது பகவானும் செவ்வாய் பகவானும் இணைந்து மறுபடியும் கேதுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண்ணாகும் . மாயாஜாலங்களை கொண்ட எண்ணாகும் .  

இந்திர ஜால வித்தை சர்ச ஜன மோஹனம் ஞானம் என்றெல்லாம் மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

வாழ்நாளில் அனைத்து செயலிலும் சாமர்த்தியமும் அதிகப்படியான வீர தீரமும் தன் முனைப்பும் தளராத முயற்சியும் தொடர்ந்த வைராக்கியமும் வெற்றியையும் மேன்மையான பதவிகளையும் தரும் . 

திருப்தியான வாழ்வையும் எதிரிகளிடமிருந்து வெற்றி பெறுதலையும்  இந்த எண் காட்டுகிறது . 

ஜன வஸ்யம் பலதரப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் . 

ஷேமமான நிலையும் திடமான வெற்றியும் அற்புதமான மனிதர் என்ற வித்யா விந்தைகளும் உண்டாகும் . 

உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவரும் பெரும் பதவியில் உள்ளவரும் ஆரம்பத்தில் கீழ்நிலையை அடைந்து பிறகு மேன்மையான பலன்களை அடைவார்கள் . 

குடும்ப வாழ்க்கையில் குழப்பமும் சரியான முறையில் அமையாமல் போவதும் உண்டு . 

அபிராமி பட்டர் 79 பாடல் பாடியவுடன் பராசக்தியின் அருளை பெற்றது போல் தொடர்ந்து சரியான முயற்சியாலும் தீவிர தெய்வ வழிபாட்டாலும் பரம்பொருளின் அருளை பெறுவார் . 

ஹீப்ரு எண் 80 ன் பலன்கள்  விடுபட்டுள்ளது . குறித்து வைத்துக்கொள்ளவும் . 

ஹீப்ரு எண் 81 ன் பலன்கள் :  

சனி பகவானை குறிக்க கூடிய 8 ம் எண்ணும் சூரியனை  குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மதிப்பு வாய்ந்த பதவிகள் உண்டு அரசியல் பதவியும் உண்டு. வாதபிரதிவாதம் செய்யும்  தொழில்கள் வங்கிகள் கலை முதலிய துறைகளில் இருப்போர் இந்த எண்ணின் மூலம் வெற்றி காணலாம். 

அதிர்ஷ்டமான வாழ்வையும் முன்னேற்றம் புகழ்  பொருள் வரவையும் இவ்வெண் அள்ளி தரும். இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் பலருக்கு போதிக்கும் குருவாகவும் . ஆலோசனை நிறுவனங்களை நடத்துபவராகவும் இருப்பார்கள் .             

தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பவும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை இந்த எண் அமைத்து கொடுக்கும். தேவதைகளை வசியபடுத்தும் திறனும் , சூட்சுமமான வித்தைகளும் இவர்களுக்கு உண்டு . பத்திரிக்கை ஜோதிடம் அரசியல் நெருப்பு சம்பந்தமான தொழில்களில் பிரசித்தி ஏற்படும் .

உத்திரம் 1 ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி பகவான் என்ற 8 ம் எண்ணும் , சூரியன் என்ற 1 ம் எண்ணும் , சேர்ந்து 9 என்ற செவ்வாய் பகவானின் எண்ணை தருவதால் இந்த 81 ம் எண்  அக்கினி தேவனின் அருளை பெற்றதாகும் . சிலருக்கு அக்னி , மின்சாரம், வைசூரி , காய்ச்சல் தொந்திரவுகளும் வந்து நீங்கும். உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் ஆணவமில்லாமல் இருக்க வேண்டும். மற்றவர்களை பகைத்து கொள்ளும்போது அவர்களால் தீய சக்திகளுக்கு ஏவப்பட்டு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். 

2 11 29 20 , போன்ற தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண், பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , 2 ,க வருபவர்கள் இந்த 81 ம் எண்ணில் தங்களுக்கோ தங்களின் நிறுவனங்களுக்கோ , பெயரை சூட்டினால் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும். 

ஹீப்ரு எண் 82 ன் பலன்கள் :

ராசி கட்டத்தில் மகர ராசியில் சனிபகவானின் ஆதிக்க எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து பிரகாசமான சூரியனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய எண்ணாகும் .  

புத்திசாலி தனமும் அறிவும் இந்த எண்ணில் அடங்கி உள்ளது . சொந்த அறிவாலும் விடா முயற்சியாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம் . இந்திர பதவியை ஒத்த பதவி இந்த எண்ணிற்கு உண்டு என சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி எண்ணும் நூல் விளக்குகிறது . 

வீரமும் பலமும் வெற்றியும் தருகிற எண்ணாக இந்த எண் போற்றப்படுகிறது . மகர ராசியில் ஆட்சி நிலை பெரும் சனிபகவானின் 8 ம் எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்ணும் இணைந்து சூரிய பலத்தை தெளிவுபடுத்துவதால் சக்தி வாய்ந்த இந்த 82 ம் எண் சாதாரண மனிதனையும் சக்கரவர்த்தியாக்கும் . குன்றாத உழைப்பும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு பூலோகத்தில் இந்திரனுக்கு நிகரான பதவியை இந்த 82 ம் பெற்று தரும் . 

வண்டி வாகன யோகங்களில் இருசக்கர வாகன யோகம் - நான்கு சக்கர வாகன யோகம் - ஆறுசக்கர வாகன யோகங்களை வழங்கக்கூடியது . நவரத்தினங்கள் யோகங்களையும் பொன் விளையும் பூமி பாக்கியத்தையும் இந்த எண் வழங்கக்கூடியது . அதிஷ்டத்தையும் - தன்னம்பிக்கையும் - நாடாளும் யோகத்தையும் இந்த எண் வழங்கக்கூடியது . பணம் பல வழிகளில் வரும் பாக்கியத்தையும் இந்த எண்ணை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவருக்கு உண்டாகும் . 

பஞ்ச பூதங்களால் வெற்றிகொள்ள தக்க வலிமை உள்ளபோதும் பணியும் பக்தியும் உடனிருக்க வாழ்க்கையில் என்றும் வீழ்ச்சி இல்லை .

ஹீப்ரு எண் 83 ன் பலன்கள் :

சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் குரு பகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணாகும் . உத்திராடம் எண்ணும் சூரியனின் நட்சத்திரத்தில் 2 ம் பாதத்தில் இந்த 83 ம் எண் அமைகிறது . மிகவும் மேன்மையான பதவிகளும் எல்லோரும் வணங்கும்படியான அந்தஸ்தும் உண்டாகும் . ராஜயோகமான வாழ்க்கையும் அனைவரையும் ஜெயிக்கும் ஆற்றலும் இந்த எண்ணிற்கு உண்டு . வெற்றி வீரராக வாழ்தலும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் .  

பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 83 ம் எண் வருமானால் அரசாங்கத்தில் மந்திரி போன்ற அதிகார பதவிகளும் அரசியலில் மேன்மையும் உண்டாகும் . மகா சக்தியின் பேரருளை பெறுவார்கள் . கலைகளில் மிகுந்த ஆர்வமும் புகழும் உண்டாகும் . காந்த கண்களும் மிக அழகான முக அமைப்பும் - மேன்மையான எல்லாவற்றையும் வென்று நீடித்து நின்று நிலை பெற செய்யும் ஆற்றல் உண்டாகும் . 

எல்லோரையும் மதிக்கும் மாண்பு பெற்ற இவர்களுக்கு பலரும் வணங்கத்தக்க பதவிகளும் உயர் வாழ்வும் நிச்சயம் உண்டாகும் . பலருக்கும் உதவி புரிந்து தெய்வீக மனிதராக நீடித்த செல்வமும் நிரந்தர பதவியும் எப்பொழுதும் சந்தோஷம் பெற்று வாழ்வார்கள் . பெரும் பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் .  

ஹீப்ரு எண் 84 :

சனி பகவானின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . 8 என்ற சனிபகவானின் ஆதிக்கம் வருவதால் ஆரம்ப வாழ்க்கை துக்கம் துயரம் கலந்ததாக அமைகிறது .  

ராசி கட்டத்தில் மகரம் எண்ணும் கடல் குதிரையின் உருவம் குறிக்கும் ராசியில் அமைவதால் போக்குவரத்து துறையில் மேன்மையும் நன்மையையும் கடல் வழி பயணங்களும் உண்டாகும் . வீண் விரோதங்களும் கவலைகளும் முயற்சிக்கும் உழைப்புக்கும் தகுந்த ஊதியமும் உழைப்பும் கிடைக்காமல் போவதும் உண்டு . 
அடிக்கடி தன்னம்பிக்கை குறைதலும் ஆன்மீக ஈடுபாடும்  கொஞ்சம் உண்டாகும் . 84 ம் எண்ணின் இறுதியில் 4 ம் எண் வருவதால் எதிர்பாராத திருப்பங்களும் தீவிரவாதிக்கான எண்ணங்களும் தோன்றும் . 3 - 12 - 21 - 30 இந்த தேதியில் பிறந்தவர்களும் , 

பிறந்த தேதி - மாதம் - வருடம் - மூன்றையும் கூட்டி வரும் எண் 3 க வருபவர்கள் இந்த 84 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் பெரிய மனிதர்களின் உதவியும் முகத்தில் தெய்வீக தேஜஸும் ஞானமும் அஷ்டமாசித்துக்களும் நினைத்த காரியத்தில்  வெற்றியும் உண்டாகும் தூரதேச பயணங்களால் ஆதாயமும் ஐஸ்வர்யமும் உண்டாகும் 

தெய்வ துணையுடன் செயல்பட காரியங்களும் வெற்றியும் விருத்தியும் உண்டாகும் . 

ஹீப்ரு எண் 85 ன் பலன்கள் :

சனிபகவானின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் மகரராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சனி பகவானின் ஆதிக்க எண் 8 முதலில் வருவதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டு முன்னேற்றம் உண்டாகும் என்பதையும் இறுதியில் புதனை குறிக்கக்கூடிய 5 எண் வருவதால் விதியையும் தீய சக்திகளை வெற்றி கொள்ளும் சக்தி பெறுவர் . மற்றவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கும் சேவை மனப்பான்மை உண்டாகும் .

பூமி ஆகாயம் நதி மலர்கள் என இயற்கையின் படைப்புகளை பற்றிய ஆராய்ச்சியும் இயற்கை வைத்தியம் சம்பந்தமான அறிவும் திறமையும் மேலோங்கி பிரசித்து பெறுவர் . மற்றவர் போற்றதக்கவும் வணங்கத்தக்கவுமான பதவிகளும் உண்டாகும் .

பழமையையும் புதுமையையும் விரும்பும் இவர்கள் மனித வள மேம்பாட்டு சிந்தனையை உலகிற்கு வழங்குவர் . கலைத்துறை வாகனம் சம்பந்தப்பட்ட துறைகள் சினிமா இசை விளையாட்டு கட்டடம் காண்ட்ராக்ட் போன்ற நிறுவனங்களுக்கு இவ்வெண்ணில் ஹீப்ரு பிரமிடு எண் வருவது சிறப்பும் செல்வமும் தரும் . பத்திரிக்கை துறை மிக மிக ஏற்றது . பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 க வருபவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களுக்கு இந்த எண் வெற்றிமேல் வெற்றியும் வீர ஜெயமும் தரும் .

ஹீப்ரு எண் 86 :

சனிபகவானின் 8 ம் எண்ணும்  சுக்ரனின் 6 ம் எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

அனைத்து விதத்திலும் மேன்மையான நிலையில் உள்ளவர்களது ஆதரவும் உதவியும் பொருளும் வந்து  சேரும் . நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர்களின் ஆதரவும் சுக வாழ்வும் சந்தோஷகரமான சூழ்நிலைகளும் உண்டாகும் . 

பொருளாதாரமும்  வீடு வாகன சுகமும் உண்டாகி சுகமான வாழ்வை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் உண்டு . இந்த எண் பெயரில் வந்தாலும் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வந்தாலும் ஆரம்ப வாழ்க்கையில் நூதனமான மனிதர்களின் ஆதரவை பெரும் அமைப்பும் உண்டு . பிறரால் வெற்றி நினைத்தது நிறைவேறும் என்று பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன .


இந்த எண்ணில் சுக்ரனாகிய 6 ம் எண்ணின் பலம் இருப்பதால் சந்தோஷமான வாழ்க்கையும் ஆண் பெண் சுகமும் சிறப்படையும் . 

ஊடலில் பரம சிவன் பார்வதியை வணங்குவதும் மன்மதன் வெற்றிபெறுவதும் பிசாச பய நிவர்த்தியும் சத்ரு ஜெயமும் இந்த எண்ணிற்கு உண்டு . 

ஹீப்ரு எண் 87 ன் பலன்கள் :

இது சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் கேது பகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 87 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மிக சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . வைராக்கியம் என்றும்  பக்தியால் செல்வம் என்றும் நமது புராதன நூல்கள் கூறுகின்றன .   

சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த 87 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் நீதி நேர்மை உடையவராக இருந்தால் மட்டுமே செல்வம் சேரும் . மற்றவர்களுக்கு இந்த எண் மிகவும் ஆபத்தானது .


மகா சக்தியின் திருவடிகளை சரணம் அடைபவர்களுக்கு மகா லக்ஷ்மியின் கடாட்சம் உண்டாகி செல்வ வளம் சிறக்கும் . இல்லை எனில் பில்லி சூனியம் விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் . 8 என்ற சனியும் 7 என்ற கேதுவும் இணைந்து சுக்கிரனின் ஆதிக்கம் வெளிப்படுவதால் எட்டு துஷ்ட காரியங்களையும் 7 விஷ விபரீதங்களையும் வழங்கக்கூடும் . 

இரவு நேர தொழில்களாலும் - நடுநிசி திருட்டுகளாலும் மனம் தீய வழியில் செல்வதையும் இந்த எண் காட்டுகிறது . பாம்புகளையும் விஷ ஜந்துக்கலையும் வசியம் செய்து மனமானது மிருக நிலையை அடைவதையும் இந்த எண் காட்டுகிறது . காடு மலைகளில் அலைந்து மனம் சங்கடப்படுதலையும் இந்த 87 ம் எண்ணின் பலன்களாகும் . 

பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  8 க வருபவர்களுக்கும் இந்த 87 ம் மிக கொடிய பலன்களையும் மற்றவர்களுக்கு இந்த எண் சிரமங்களையும் தரக்கூடியது .

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment