Home » »



ஹீப்ரு எண் 50 பலன்கள் விடுபட்டுள்ளது . குறித்து வைத்து கொள்ளவும் . 

ஹீப்ரு எண் 51 ன் பலன்கள் :

கிரகங்களில் புதனை குறிக்க கூடிய 5 ம் எண்ணும் - சூரியனை குறிக்க கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் கன்னிராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் நீதி தேவனாக கிரீடம் அணைந்த அரசன் வாழ் ஏந்தி அமர்த்துள்ளவாறு உள்ளது . சர்வ ஜன வசியம் என்றும் . சிருங்காரம் ரௌத்ரம் - அற்புதம் -  பயனாகம் - வீரம் - ஹாஸ்யம் - கருணை - ஆகிய எட்டுவகையான உணர்ச்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக மந்திர நூல் தெரிவிக்கிறது .

மிகவும் சக்தி வாய்ந்த இந்த எண் சூரிய + புதன் காணியாராசியில் பெரும் பலமும் சுக்கிரனின் தன்மையையும் தெரிவிக்கிறது . மிக சாமான்ய மனிதனாக இன்று  திடீரென பிரமுகராவான் . மிக பெரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும் . உடல் பலம் உள்ள பலம் இரண்டும் மேலோங்கி இருக்கும் . கட்டுகடங்காத உணர்ச்சியும் கற்பனைகளும் சலிப்பறியாத உழைப்பும் உண்டாகும் . தேகத்திலும் அகத்திலும் மாபெரும் சக்தி புகுந்து கொண்டது போல மனோ பலமும் சரீர பலமும் உண்டாகும் . 

இந்த எண்ணிக்கையில் பெயருடைவர்கள் கோபத்திலும் வேகத்திலும் தீவிரமாக இருப்பது போலவே தாபத்திலும் முகத்திலும் அதே மோகம் இருக்கும் . வியாபாரம் பொருள் பதவி புகழ் அனைத்தும் வந்து சேரும்  ஒரு பக்கம் மிக அற்புதமான பலன்கள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் தீவிரமான எதிர்ப்புகளும் மறைமுகமான தீய சக்திகள் இவர்களுக்கு பிராண பயத்தை உருவாக்கும் . 

ஏராளமான பொன் பொருள் பூமி லாபங்கள் வருமாகையால் அதிர்ஷ்டமான எண்ணாக கருதலாம் .  

ஹீப்ரு எண் 52 ன் பலன்கள் :

5 என்ற புதனும் 2 என்ற சந்திரனும் இணைந்து கேதுவின் ஆத்க்கதை வெளிப்படுத்துகிறது இந்த எண் . பெரிய பேச்சாளர் என பெயர் வரும் . அறிவு மிகும் . தெய்வீக வாழ்வும் - தொடர்ந்த வழிபாடுகளும் உண்டு . இருபுறமும் கூரான வாளை செங்குத்தாக பிடித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அரசியோடு தொடர்புடைய சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 52 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன .  

"காம ஜெயம் - காது கண்களில் ரோக நிவாரணம் " என்றும் - " மன்மத பானங்களை போன்ற கண்கள் " என்றும் மந்திர நூல்களில் உள்ளது . கன்னி கேதுவின் தன்மைகளை இந்த எண் உணர்த்துகிறது . அமைதியான உள்ளத்தை கெடுத்து - தீமையான எண்ணங்களையும் புரட்சியை தூண்டும் இவ்வெண் - ஆன்மீகத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்களை மிகவும் பிரபலபடுத்தி - சாதிக்க முடியாத சாதனைகளை உறவாகக வைக்கும் . புதனின் 5 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்ப வாழ்க்கை ஏற்றமாகவும் - இனியதாகவும் அமையும் . நிறைய மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க இவர்களை நாடுவார்கள் . 

கவர்ச்சியான நடை - உடை - பாவனைகளும் - தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் புத்திசாலி தனமும் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும் . இவர்களை நாடி வருவோர்க்கு வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கி கொடுக்கும் உயரிய மனிதராக இருப்பார் .  

2 என்ற சந்திரன் கடைசியில் வருவதால் 5 ம் 2 ம் சேர்ந்து " விரக்தி " எனும் கேதுவின் தன்மையை பிரதிபலிப்பதால் எதிபாராத திடீர் பிரச்சனைகளால் சூழப்பட்டு குழப்பமும் - அல்லல் களும் நிறையும் . 

ஹீப்ரு எண் 53 ன் பலன்கள் :

புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் குருவை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் குதிரை மீது கையில் வாளை ஏந்தியபடி சவாரி செய்யும் ஒரு  இளவரசனின் படத்தோடு இந்த எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது .  

பிறந்தது முதல் சிறுவயதிலேயே எல்லா சுக துக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் அனுபவித்து முதியோர் போன்ற அனுபவ முதிர்ச்சியை பெற்றுவிடுவார்கள் . நிம்மதியான வாழ்க்கை என்பது இவர்களுக்கு கிடைப்பது அபூர்வமே .பொது மக்களிடத்தில் பிரசித்தியும் சாதிப்பதில் வல்லமையும் இவர்களுக்கு உண்டு . 

தனக்கு மிஞ்சிய பெரிய காரியங்களில் ஈடுபட்டு மாட்டி கொள்வார்கள் . எதிலும் போராடும் குணம் இவர்களுக்கு அதிகமாக உண்டு . காவல் துறை முப்படை தளபதிகள் உளவு துறை போன்ற துறைகளில் இவர்களுக்கு புகழ் உண்டு . பத்திரிக்கை துறைகளில் இவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு . இரும்பு நிலக்கரி போன்ற தொழில்களில் இவர்களுக்கு மேன்மை உண்டு . 

கருப்பு சிகப்பு வெண்மை நிறம் சம்பந்தப்பட்ட நிறங்களால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு . ரஜோகுணம் சத்துவக்குணம் தமோ குணம் என மூன்று வகையான குணங்களை குறிப்பதால் 53 ம் எண் கொண்டவர்களுக்கு மூன்று வகையான குணங்கள் உண்டு . 

மற்றவரால் பார்த்து பொறாமை படும் தன்னிடம் இருக்கும் பதவியால் ஆபத்தும் பிறரால் வஞ்சகமான முறையில் தான் வீழ்ச்சி அடைவதையும் இந்த 53 ம் எண் குறிப்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய எண்ணாக இதை கருதலாம் . 

ஹீப்ரு எண் 54 ன் பலன்கள் :

இது புத்திக்கு அதிபதியான புதனும் யோககாரகன் என்று சொல்ல கூடிய ராகுவும் இணைந்து மறுபடியும் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

இந்த எண்ணின் உள் அர்த்தம் வியாதியை குணமாக்கும் வியாதியை குணமாக்கும் தன்மை கொண்டது என காணப்படுகிறது . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஒரு கையில் ஒற்றை வாளுடன் நிற்கும் மனிதனின் உருவம் கொண்ட மனிதனின் சித்திரம் காணப்படுகிறது . காரிய சித்தி கனவு பலித்தல் என்று இந்த எண் பற்றி மந்திர நூலில் காணப்படுகிறது . 

உயர்ந்த சிகரத்தை நோக்கிய படிக்கட்டுகளை போல் இவ்வெண் படிப்படியாக முன்னேற்றத்தை தரக்கூடியது . சிரமங்களும் சிறப்புகளும் போல சில தோல்விகளையும் தரும் . சுதந்திரமற்ற பிடிவாத குணமுள்ள முன்யோசனையற்ற பேராசை பெற்ற மனிதனையே இவ்வெண் குறிக்கிறது . 5 என்ற புதனின் 4 என்ற ராகுவும் இணைந்து கன்னி ராசியில் வரக்கூடிய செவ்வாயை இந்த எண் குறிக்கிறது . 

சுறுசுறுப்பு பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகள் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அனைத்தையும் இழக்க நேரிடும் . பின் இழந்ததை புதுப்பிக்க தோன்றும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் கூட்டு எண் 9 க வருபவர்களுக்கு மட்டும் இந்த எண் கொண்டவர்கள் ஸ்ரீ சக்ர உபாசனையில் தேவியின் சுலோகங்களை சொல்லி வணங்கி வந்தால் அரச பதவியும் - உயர் நிலையம் பெறலாம் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment