Home » »

                                            

ஹீப்ரு எண் 55 ன் பலன்கள் :

புதனின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் இரண்டு முறை வந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 55 ம் துலாம் ராசியில் வரக்கூடிய சூரியனின் நீச்சமடைந்த  எண்ணாகும் . அதி சூக்ஷமான இந்த இந்த எண் வெகு அற்புதமான  அறிவை தரும் . சத்ரு ஜெயம் என்றும் ஆக்கல் அழித்தல் என்றும் மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . 

ஆறாவது அறிவு என்று கூறப்படும் பிரமிக்கும்படியான சக்தியும் இவர்களிடம் காணப்படும் . பேரறிவு உடல்பலம் மனபலம் நீதி நேர்மை இவை எல்லாம்  இருந்தும் கூட சரியான வாழ்வை அமைத்து கொள்ள தடுமாறுவார்கள் . உற்பத்தி செய்தல் ஆக்கல் அழித்தல் சத்ரு ஜெயம் சூட்சும அறிவு பிரமித்தக்க அறிவாற்றல் போன்றவையும் உண்டு. 

எதிரிகளை வெல்லும் மனபலமும் பேரறிஞர் என்ற புகழும் இந்த எண்ணின் சிறப்பம்சமாகும் . அறிவு கணிப்பொறியை போல வெளிப்படுதல் இந்த எண்ணை பெயராக உடையர்களுக்கு உண்டாகும் . கல்வி விதை கணிதம் விஞ்ஞானம் எழுத்து பேச்சு ஆகிய துறைகளில் சிறப்பும் காவல் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிரிகளை அழிக்கும் சக்தியும் உண்டாகும் . 


தங்களின் குடும்ப வாழ்வில் சிறு பிரச்சனைகளுக்கு பிறகு சந்தோசம் உண்டு . விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வன்மை இந்த எண்ணிற்கு உண்டு . பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்கள் இருந்தால் குணமாகும் . சூரியனின் நீச்சமடைந்த எண் என்பதால் பெயர் எண் இந்த 55 ம் எண்ணில் அமைந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்களில் வாழ்க்கை அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

 சூரியனின் ஆதிக்க எண் என்பதால் அனைத்து அதிர்ஷ்டங்களும்  இவர்களுக்கு உண்டாகும் . ஆனால் நிலைக்காது . இந்த எண் சூரியனின்  நீச்சமடைந்த எண்  அதாவது பலன் நிலைக்காத எண் என்பதால்  இந்த எண்ணில் பெயரை அமைப்பதை தவிர்க்கவும் . 

ஹீப்ரு எண் 56 ன் பலன்கள் : 

புதனின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் மனோதத்துவமான எண்ணாகும் . கண்கள் கட்டப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் இருப்பதை போன்ற படங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . மிக அற்புதமான இந்த எண் புகழ் லட்சுமி கடாட்சம் பெரும்செல்வம் ஆகியவற்றை தரும் வல்லமை கொண்டது . 

மாயாஜாலம் போன்ற கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் கைகள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்திருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த 56 ம் எண்ணோடு தொடர்பு பெற்றிருப்பதால் நிச்சயமற்ற தன்மையை இந்த எண் குறிக்கிறது . புதனாகிய 5 ம் சுக்ரனாகிய 6 ம் இணைந்து துலாம் சந்திரனை குறிப்பதால் தராசு ஏந்திய கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையை குறிப்பதால் மனைவி மக்களை விட்டுவிடுவதையும் குடும்பத்தில் விசனத்தையும் குழப்பத்தையும் தரும் .  2 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த எண் மேலே சொன்ன நல்ல பலனை வழங்கும் . மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த எண்ணில் பெயர் அமைப்பதை தவிர்க்கவும் . 

ஹீப்ரு எண் 57 :

கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து குரு பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண்  துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

3 ம் எண்ணை குறிக்கக்கூடிய வரிசையில் மிக்க அதிர்ஷ்டமான எண்ணாகும் . ஞானத்தையும் செல்வத்தையும் தரும் வலிமை கொண்டது . மனைவி மக்களால் செல்வத்தையும் புகழையும் தரும் . வாழ்க்கையின் முற்பகுதியும் பலவிதமான வெற்றியையும் வேகமான முன்னேற்றத்தையும் தரும் . 

சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் . புதன் ஆதிக்க எண்ணான 5 ம் எண்ணுடன் கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் சேருவதால் உலக வாழ்வில் உண்டாகும் அனைத்தும் மாயை என வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள் . புதனின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து வருவதால் இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியை தருவதில்லை . 

வாழ்க்கையில் வேகமான முன்னேறிய பிறகு தனது ஒழுங்கற்ற எண்ணங்களால் அனைத்தையும் பயன் பெறாமல் விட்டுவிடுவார்கள் . முன்னேற்றம் நின்று விடுவதால் மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவார்கள் . 

காதல் விவகாரங்களில் சோதனையும் தீமையும் உண்டு .

சந்தேக குணத்தை கொடுத்து குடும்பத்தில் நிம்மதி கெடுவதும் உண்டு . மனதில் பலவிதமான கவலைகளும் இதயம் சம்பந்தமான நோய்களும் உண்டு .

மிகவும் சிறப்பான எண் இல்லை என்றாலும் குடும்பம் மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் சமூகவாதிகள் அரசியல்வாதிகளுக்கு இந்த எண்  நற்பலன்கள் தரும் . 

ஹீப்ரு எண் 58 : 

புதனின் ஆதிக்க எண்ணும் சனிபகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . அபூர்வ சக்திகளை கொண்ட இந்த எண் மூலம் அபிலாஷைகள் பூர்த்தியாகும் . வெற்றி வாய்ப்புகள் கிட்டும் . நான்கு விதமான வாள்களை கொண்ட படங்கள் இந்த எண்ணோடு எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . மன்மதனின் வில் என மந்திர நூல்களில் உள்ளது . 

மிகவும் குறுகிய காலகட்டங்களில் அதிர்ஷ்டத்தையும் பிரபலத்தையும் வசீகரத்தையும் காரிய சித்தியையும் இந்த எண் உண்டாக்கும் . 5 ம் எண்ணை குறிக்கக்கூடிய புதனும் 8 ம் எண்ணை குறிக்கக்கூடிய சனியும் இணைந்து ராகுவின் ஆதிக்கம் ஓங்குவதால் தலைமை பதவியும் சீரும் சிறப்பும்  பலர் போற்றும் தலைவராகவும் மற்றவர்களை வாழ வைப்பவர்களாகவும் விளங்குவார்கள் . சீர்திருத்த நோக்கங்களுடன் புகழுடன் பொறுப்பு மிக்க பதவிகளும் ஏற்படும் . 

உள்ளத்தில் உறுதியும் தொழில் விருத்தி , சிற்றின்பத்தில் முழு வெற்றி நண்பர்களாலும் பெண்களாலும் வெற்றியும் ஏற்படும் . வீடு நிலம் சினிமா பணம் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவங்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது . பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 க வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த எண் நன்மைகள் புரியும் . மற்ற தேதி - எண்  காரர்களுக்கு தீமையான பலன்கள் உண்டாகும் . 

ஹீப்ரு எண் 59 :

நவ கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் இணைந்து 14 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஐந்து விதமான வாள்கள் கொண்ட சித்திரங்களோடு இந்த 59 எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பல விதமான வெற்றிகளை தரும் இந்த எண் . மந்திர நூல்களில் கூட மன்மத ரத போன்ற முகம் சர்வ ஜன வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . ஞானத்தையும் சிறந்த அறிவையும் தரும் இந்த எண் . பெரும் பதவி , பணம் ,நிலையான அதிர்ஷ்டத்தையும் தரும் . மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை உண்டு . உடல் அழகு , உலக பிரசித்தி பெரும் சூழ்நிலை எல்லாம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

வித்யாகாரகன் புதனும் தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து மேலும் மேலும் வித்தை தன்மையை பெருகுவதால் மிக சிறந்த அறிவாளியாக இவர்கள் விளங்குவார்கள் . வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்து விட்டால் ஜன கூட்டம் எப்பொழுதும் அலைமோதும் . 

அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை இன்று பிறந்த குழந்தைகள் பெறுவார்கள் . பித்த சம்பந்தமான நோய்கள் தீரும் . நரம்பு சம்பந்தமான பலஹீனங்களும் உண்டாக கூடும் . ஆகையால் பெயரிலும் - பெயரின் ஹீப்ரு எண்ணும் அதிர்ஷ்டமான முறையில் அமையவேண்டும் .  

ஹீப்ரு எண் 60 

சுக்கிரனின் ஆதிக்கத்தை அதிகபடுத்தி காட்டும் அற்புத எண்ணாக இந்த 60 ம் எண் காணப்படுகிறது . எதையும் சீர் தூக்கி பார்த்து இவர்கள் செயலில் இறங்குவார்கள் . சுக்கிரனின்  தேஜஸ் அதிகம் என்பதால் செல்வ வளம் அதிகரிக்கும் . 

இந்த 60 ம் எண்ணை பற்றி எகிப்திய பிரமிடுகளில் கடல் மேல் பயணம்  செய்வதை போன்ற சித்திரங்கள் காணபடுகின்றன . சகல கலா ஞானம் என்று மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . மேலும் சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் கொண்ட மிக சிறப்பான எண் என்பதால் திக்குவாய் குணமாகும் 

இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கவர்ச்சியான நடை -உடை - பாவனைகள் உடையவராகவும் - இல்லற இன்பம் - தன்னை சார்ந்தவர்களையும் அரவணைத்து கொள்ளும் போக்கு - பேச்சு - சுக வாழ்வு அனைத்தும் உண்டாகும் . ஆண்களுக்கு உயர்ந்த அந்தஸ்திலுள்ள பெண்மணியால் மிக பெரிய ராஜயோகம் உண்டாகும் . பெயர் எண்ணை விட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது 60 ம் எண் வரும்பொழுது அமைதியும் - செல்வவளமும் - வாக்கு வன்மையும் - வாதத்திறமையும்  மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் உண்டாகிறது . 

பெண்களை விட ஆண்களுக்கு இந்த 60 ம் மேன்மையான இவ்வெண் வழங்குகிறது 

கலை வாணியின் பேரருளை பெற்ற இந்த எண் கலை துறையினருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் . பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - க வருபவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 3 க வருபவர்களுக்கு இந்த 60 ம் எண் அதிர்ஷ்டம் தராது . 

ஹீப்ரு எண் 61 

சுக்கிரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்க எண்ணும் கலந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .எகிப்திய சித்திரங்களில் " வாள்களை ஏந்தி ஓடும் மனிதர்களை போன்ற சிற்பங்கள்    இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஸர்வ லோகம் முத்துக்கள் வாசம் செய்யும் இடம் என்று பழைய புராதன நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . 

கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் பிராண ஜெயத்தையும் மனோ ஜெயத்தையும் முக்தி சாம்ராஜ்யத்தையும் தரக்கூடியது . இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் தன்னிஷ்டப்படி செயல்படுவராக உள்ளனர். 

வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் எல்லா இன்பத்தையும் அனுபவித்த இவர்கள் பின்வாழ்வில் மிகவும் துன்பப்படுவார்கள் . குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இராது . மனம் சதா கவலைகளால் அரிக்கபடும் . உடல் நலத்தை பற்றி அதிக கவலைகள் இல்லாமல் சுகமாக அமைந்த சூழ்நிலைகளை விட்டுவிட்டு இவர்கள் வெளிப்பார்வைக்கு அதிர்ஷ்டசாலிகள் போல் தென்படுவார்கள் . 

கௌரவமான பெரிய அதிகார பதவியும் காரிய வெற்றிகள் பெருபுகழும் ஏற்பட்டாலும் குடும்ப வாழ்க்கை சுகப்படுவதில்லை . பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும் . நேர்மை தவறி நடக்கும்பொழுது இவர்கள் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறிவிடும் இவர்கள் அழிவை சந்திக்கிறார்கள் . நேர்வழி மனிதர்கள் முத்துக்களாலும் லட்சுமி கடாட்சத்தாலும் இசைத்துறை புகழாலும் மேன்மை பெறுகிறார்கள் . 

வியாபார நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இந்த 61 ம் எண்ணில் பெயர் வருமாறு வைத்துக்கொண்டால் அழிவை சந்திப்பதும் கொள்ளை போவதும் நிச்சயம் . 

ஹீப்ரு எண் 62 

சுக்ரனை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் இணைந்து சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 62 ம் எண் துலாம் ராசியில் ஆதிக்கம் வகிக்கும் எண்ணாகும் . எகிப்திய பிரமிடுகளில் எட்டு விதமான வாள்களின் நடுவில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒரு பெண் சித்திரம் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகி அனைத்தும் சரிய தொடங்கிவிடும் . பலருடைய விரோதத்தை வளர்த்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . மனக்கசப்பு முறைகேடான சூழ்நிலையால் மிகவும் கீழான சூழ்நிலையை அடைவார்கள் .


மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் உள்ள குடும்பத்தில் மனைவி குழாங்களிடத்தில் மகிழ்ச்சி இருக்காது . மற்றவர்கள் பார்வைக்கு நல்லவர்கள் போன்ற தோற்றம் கொண்டாலும் தனது மூளை பலத்தால் மற்றவர்களை வசீகரித்து ஏமாற்றும் சூழ்நிலை உண்டாகும் .

காவல் துறை உளவு துறை சிறை அதிகாரிகள் ராணுவ வீரர்கள் ஆகியோர்கள் இவ்வெண்ணில் பெயர் உடையவர்கள் ஆனால் எவ்வளவு வல்லமை பொருந்திய பகையாளியையும் பழிவாங்கி . விடும்

சிறைவாசம் சிக்கல் ஏமாற்று வழி இவர்களுக்கு அமையும் .

ஆரம்பத்தில் எவ்வளவுதான் சுகப்பட்டாலும் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் . கால புருஷனின் 7 ம் வீட்டில் 62 ம் எண் வருவதால் அந்தரங்க உறவுகள் மூலம் நோய்களும் ஆபத்துகளும் உண்டாகும் .

இந்த எண்ணில் பெயர் அமைப்பதை தவிர்க்கவும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment