Home » »



ஹீப்ரு எண் 45 ன் பலன்கள் :

ராகு என்ற 4 ம் எண்ணும் புதன் என்ற 5 ம் எண்ணும் இணைந்து 9 என்ற செவ்வாயின் ஆதிக்கத்தை இந்த 45 ம் எண் உணர்த்துகிறது . சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . பெரியோர்களிடத்தில் மிக்க பணிவுடன் நடந்து கொள்வார்கள் . எந்த பிரச்சனைகளிலும் சுயமான அபிப்பிராயமும் கருத்தும் இருக்கும் .  

மதுவுடன் கோப்பையும் - கொட்டிய மது கோப்பைகள் போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 45 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன 

வாக்கு பலிதம் எனவும் - எதிர்காலத்தை உணர்தல் எனவும் மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . " லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ராகுவும் - புதனும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க சக்தியை இந்த எண் தருவதால் இந்த 45 ம் எண மிக்க அதிர்ஷ்ட எண்ணாகவும் விளங்குகிறது . 

மிக சாமானிய மனிதரும் மிக மேலான நிலையை அடையலாம் . பெரிய பதவிகளையும் - நிகரற்ற மேன்மைகளையும் அடையலாம் . தீவிர உழைப்பும் - தனது காரியத்தை சாதித்து கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும் இந்த எண்ணினருக்கு சுலபமாக அமைந்து விடும் . 

வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் . மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும் - பொது ஜன மகிழ்ச்சியை பணமாக்கும் தொழில்களிலும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும் எதிர்காலத்தை உணர்தலும் - வாக்கு பலிதமும் - தடைபட்ட திருமணம் நடக்கவும் - உலக பிரசித்தி அடையவும் இந்த 45 ம் எண் துணை புரியும் .  

வியாபார விலாசமோ - தனி மனிதனின் பெயரோ இந்த 45 ம் எண்ணில் வருவது அதிர்ஷ்டம் தரும் . 9 மற்றும் 5 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவருக்கு இந்த எண்  பதவி உயர்வு - தலைமை தாங்குதல் - ஆகிய அந்தஸ்தை இந்த எண் தரும் . தீராத குறைகள் - குடும்ப சிக்கல்கள் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் புன்னகை தவழும் முகத்துடனே இவர்கள் வாழ்ந்து காட்டுவார்கள் 

9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 1 - 3 - 6 - போன்ற ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைக்கலாம் . 5 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் . 2 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கவே கூடாது . 

ஹீப்ரு எண் 46 

இது ராகுவின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான 46 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது . கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இவ்வெண் ஒருங்கே குறிப்பதால் இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .

புத்திர பிராப்தி என்ன சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்யலஹரி நூல் கூறுவதால் புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் இந்த எண்ணை பயன்படுத்தினால் புத்திர பாக்கியம் பெறலாம் . சந்திர பகவானின் அருளும் இந்த எண்ணுக்கு இருப்பதால் புதுப்புது கற்பனை வளமும் மேலான சிந்தனைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெற்றிக்கோப்பைகளும் அரச சன்மானமும் கிடைத்துவிடும் .

சொந்தம் பந்தம் நட்பு இவற்றினால் ஆதாயமும் அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனைகளை புரியவைக்கும் . அபூர்வ செயல்களால் சாதனைகள் புரிய வைக்கும் இந்த 46 ம் எண் . கன்னி ராசியில் சூரியனின் பிரவேசம் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் உண்டாகி இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் சிறப்பை தரும் .

4 ம் எண்ணை குறிக்கக்கூடிய ராகுவின் ஆதிக்கமும் 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரனின் ஆதிக்கமும் சேர்ந்து 46 என்று வருவதால் ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும்

9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இந்த 46 ம் எண்ணில்  பெயர் அமைவதை தவிர்க்கவும் . 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இந்த 46 ம் எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டு பண்ணும் . 

ஹீப்ரு எண் 47 ன் பலன்கள் : 

ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து 11 என்று வந்து சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த 47 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

இந்த எண்ணில் ராகுவும் கேதுவும் இணைந்திருப்பது விசித்திரமானதாகும் . கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் ஏற்படும் . சாஸ்திர நூல்களில் கூட தேவதைகள் வசியம் மன்மதனின் வில் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . ராகு என்று 4 ம் எண்ணும் கேது என்ற 7 ம் எண்ணும் இணைந்து கால சர்ப்ப தோஷத்தை உணர்த்தும் எண்ணாக இந்த 47 ம் எண் . விளங்குகிறது . மனோ பலத்தையும் கற்பனை சக்தியையும் முக வசியத்தையும் இந்த எண் தரக்கூடியது .

தேவதைகளை வசியம் செய்யும் தந்திரமும் மற்றவர் சொத்தை அபகரிக்கும் துர்குணமும் இந்த எண்ணால் உண்டாகலாம் . திரவ சம்பந்தமான தொழில்களிலும் மிக வேகமான முன்னேற்றத்திலும் இவர்கள் இருப்பார்கள் . 

தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கண்ணாய் இருந்து காரியத்தை சாதித்து கொள்வார்கள் . பணம் சம்பந்தப்பட்ட வகையில் நல்ல புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு பார்வை கோளாறுகள் ஏற்படலாம் . ஆராய்ச்சி மனப்பான்மை பெற்ற இவர்கள் பல பேருக்கு அறிவுரை கூறுவதில் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள் . 

இந்த ராகு கேது ஆதிக்கம் இணைந்த எண்ணில் உமாதேவியின் அருள்கடாட்சம் உள்ளதால் பழி செயல்களில் ஈடுபடாத வரை முன்னேற்றமும் உடல் நலமும் பாதிக்காது .

7  ம் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 6  - 5  -  3 - போன்ற அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது அண்மைய தரும் .  1 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் . 9 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்க கூடாது . 

ஹீப்ரு எண் 48 ன் பலன்கள் :

மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த எண் காட்டுகிறது . எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதனோடு தொடர்பெற்று இந்த 48 ம் எண் காணப்படுகிறது . மந்திர நூல்களில் மூன்றாவது கண் என இந்த 48 ம் எண்ணைப்பற்றி கூறப்பட்டுள்ளது . 

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த எண்ணின் தன்மைகள் ஆகும் . 

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இந்த 48 எண்ணை பெயரில் உடையவர்களின் செயல்பாடாக இருக்கும் . 

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த எண்ணின் பலன்களாகும் . 

விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க உடையவர்கள் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது . மற்றவர்களுக்கு இந்த எண் சிறப்பானது அல்ல . குறிப்பாக 6 - 15 - 24 - தேதியில் பிறந்தவர்கள் - பிறந்த தேதியின் கூட்டு எண ஹீப்ரு எண் 6 க வருபவர்கள் இந்த 48 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

பெயரின் ஹீப்ரு எண் அதிர்ஷ்டகரமான பலமான எண்ணில் அமைந்து இந்த எண் பெயரில் வந்தால் பாதிப்பு இல்லை .

ஹீப்ரு எண் 49 ன் பலன்கள் : 

இந்த எண்ணின் அர்த்தம் மிகவும் சூஷ்மமானதாகவே காணப்படுகிறது . ஸர்வ ஜெயம் எனவும் - நிதி தர்சனம் - எட்டுவிதமான கண்ணோட்டம் என்றெல்லாம் மந்திர நூல்கள் இந்த 49 ம் எண்ணை பற்றி கூறுகிறது . கருணை புதையலை அறியும் பார்வை என சாஸ்திரம் கூறுகிறது . 

ராகு என்ற 4 ம் எண்ணும் 9 என்ற செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்த இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் அஷ்ட திருஷ்டியும் - சுப மங்களமும் - ஆழமான கருணை பேராற்றலும் நிறைந்த இவர்கள் கருணா மூர்த்தியாகவும் - வெற்றி பார்வையாளர்களாகவும் - தான லாபம் - கூட்டு முயற்சிகளில் வெற்றி - சிறந்த ஆன்மீக தன்மை - புதையல் யோகம் - திரவ பொருள்கள் அல்லது கடல் கடந்த வாணிபத்தால் செல்வ செழிப்பு - உயர்ந்த மனிதர்களின் ஆதரவு - இவைகள் அனைத்தும் இந்த 49 ம் எண்ணிற்கு உள்ள நற்பலன்கள் ஆகும் . 

மனோ பலமும் அடுத்தவர் யோசிப்பதை யூகிக்கும் திறனும் உள்ள இவர்கள் பொறுமையுடன் விடா முயற்சி கொண்டால் வெற்றி காணலாம் . 

பல மக்களுக்கு தலைவனாகவும் - வழிகாட்டியாகவும் - வீர தீர செயல்களால் புகழும் தன்னுடைய பேச்சாற்றலால் செல்வாக்கும் உண்டாகும் . அருவி நீர்போல் செல்வ பேருக்கு 49 எண்ணில் பெயர் கொண்ட வியாபார நிறுவனங்களுக்கு உண்டாகும் . பல இடங்களை சுற்றி பார்க்கும் பாக்கியமும் - அபூர்வ அனுபவங்களும் - நிலையான சொத்துக்களும் இந்த எண்ணினருக்கு உண்டாகும் . 
  
இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 5 - 6 - 3 - போன்ற அதிர்ஷ்ட எண்களின் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment