Home » »


எல்லா கிரகங்களுக்கும் நட்பு  சமம் எதிரி  இருக்கிறது . 

இவைகள் இப்படி இருந்தாலும் கிரகங்களுக்கு பரம எதிரியான கிரகங்கள் எவை என்பதை பார்ப்போம் . 

எண் 1 க்கு - 8

எண் 2 க்கு - 9

எண் 3 க்கு - 6

எண் 4 க்கு  - 8 

எண் 5 க்கு - 9

எண் 6 க்கு - 3

எண் 7 க்கு - 2

எண் 8 க்கு  - 1

மேலே சொன்னவைகள் இந்திய ஜோதிடத்தில் கிரகங்களுக்கு பகையான கிரகங்களாகும் . 

இருந்தாலும் எண் 3 க்கு 6 கடுமையான பகையும் எண் 9 க்கு 2 கடுமையான பகையையும் உண்டுபண்ணும் . 

மற்ற கிரகங்களுக்கு பகையான கிரகங்கள் இருந்தாலும் பிறந்த தேதியின் கூட்டு எண்கள் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்கள் இவைகளை அனுசரித்து பெயரை அமைக்கலாம் . அது   பற்றி கடைசியில் உங்களுக்கு சொல்கிறேன் . 

குழப்பம் வேண்டாம் . 

கிரகங்களுக்கு உரிய பரிகாரங்கள் :

சூரியன் 

சிகப்பு நிற பசுவை தானம் செய்யலாம் 

கோதுமையை ஏழைகளுக்கு தானம் செய்யலாம் . 

சந்திரன் 

அரிசி வெள்ளை நிற ஆடைகள் பசுவின் நெய் வெள்ளை நிற மலர்கள் இனிப்பு பண்டங்களை திங்கள் கிழமையில் தானம் செய்யலாம் . 

வெட்டிவேர் சிவந்த சந்தானம் குங்குமம் இவைகளை ஒரு குடத்தில் போட்டு சந்திர காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அந்த நீரால் ஸ்நானம் செய்யவேண்டும் . 

குரு 

மஞ்சள் நிற ஆடையை தானம் செய்யலாம் . முகத்திற்கு பூசும் மஞ்சள் பொடியை பெண்களுக்கு தானம் செய்யலாம் . இதை வியாழக்கிழமையில் செய்யவேண்டும் .செவ்வாய் வியாழன் கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யலாம் . 

ராகு புதன் இரண்டு கிரகங்களுக்கும் 

பச்சை நிற துணி பச்சை பயிறு இவைகளை புதன் கிழமை அன்று தானம் செய்யலாம் . 

பச்சை நிற மரிக்கொழுந்தை வைத்து பாசிப்பருப்பு பாயாசம் சுண்டல் இவற்றை செய்து புதன் கிழமை அன்று ஏழைகளுக்கு தானம் செய்ய நன்மைகள் உண்டாகும் . 

சுக்ரன் 

வெள்ளை நிற ஆடை வெண்பட்டு அரிசி ஆகியவைகளை வெள்ளி கிழமைகளில் தானம் செய்ய நன்மைகள் உண்டாகும் . 

கேது  சனி கிரகங்களுக்கு இரண்டும் .

உளுந்து வால்மிளகு நவதானியம் நீல நிற பூக்கள் இவைகளை ஒரு பித்தளை பாத்திர நீரில் வைத்து கேது சனி காயத்திரி மந்திரத்தை உச்சரித்து  ஸ்நானம் செய்ய நன்மைகள் உண்டாகும் .  எள்ளு தானம் செய்யலாம் 

நல்லெண்ணெய் நெய் இலுப்பை என்ணெய் இவற்றை கலந்து விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாக்கும் .

செவ்வாய் 

சிகப்பு நிற ஆடைகள் மாம்பழம் ஆடு மாடுகள் தானம் செய்யலாம் . 

மேலே சொன்னவைகள் ஒருவருக்கு அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் அதிர்ஷ்ட பெயரை அமைத்து  இந்த முறைகளை செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும் . 

பெயர் அமைக்கும் விதம்  பிறந்த தேதி பிறந்ததேதியின் கூட்டு எண்கள் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்கள் இவர்களை அனுசரித்து பெயரை எப்படி அமைப்பது எப்படி என்பது பற்றி விரிவாக நான் உங்களுக்கு பிற்பகுதியில் விளக்குகிறேன் . 

குழப்பம் வேண்டாம் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328







Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment