Home » »


கிரகங்களுக்குரிய மந்திரங்கள் :

ஒருவருக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை வைக்கும்பொழுதும் அல்லது பெயரை திருத்தம் செய்து கொடுத்து அந்த கிரகங்களுக்கு உரிய மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மனதிற்குள் உச்சரித்தால் அதன் பலன்கள் அதிகரிக்கும் .

கிரகங்களுக்குரிய இந்திய முறையிலான மந்திரங்கள் : 

சூரியன் மந்திரம் 

ஜாபா குஸூம ஸங்காசம் 

காஸ்ய பேயம் மஹா யுதிம் 

தமோரியம் ஸர்வ பாபக் நம் 

ப் ரண தோஸமி திவாகரம் 

இதன் பொருள் : செம்பருத்தி பூவின் நிறம் உடையவரும் கச்யப முனிவரின் மகனும் மிகவும் பிரகாசம் உடையவரும் இருளின் எதிரியும் எல்லா பாவங்களையும் அழிப்பவருமான சூரியனை வணங்குகிறேன் . 

சந்திரன் மந்திரம் :

ததிஸங்க துஷாராபம் 

கூஷு மதார்ணவ ஸம்பவம் 

நமாமி சசி நம் ஸோமம் 

சம்போர் மகுட பூஷணம் 

இதன் பொருள் : தயிர் சங்கு பனி போன்று வெண்மை நிறமுடையவன் பாத கடலில் இருந்து தோன்றியவன் முயல் சின்னம் உடையவன். சோமம் என்று வேதத்தில் அழைக்கப்படுபவன் . சிவன் கடவுளின்  தலை முடியில் அணிகலனாக அலங்கரிப்பவன் . இவ்வாறான அம்புலி என்று அழைக்கப்படும் சந்திரனை வணங்குகிறேன் . 

வியாழன் மந்திரம் :

தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் 

காஞ்சன சந்நிபம் புத்திபூதம் திரிலோக வசியம் 

தம் நமாமி ப்ருஹஸ்பதிம் 

இதன் பொருள் : தேவர்களுக்கு முனிவர்களுக்கும் குருவான பொன்னிறமுடையவன் . மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன் . அந்த பிரகஸ்திபதியை வணங்குகிறேன் . 

ராகு மந்திரம் :

அர்த்த கார்யம் மஹாவீர்யம் 

சந்திராதித்ய விமர்தனம் 

ஸிம்ஹிஹா கர்ப்பஸம்பூதம் 

தமரா ஹூம் ப்ரண மாம்யஹம் 

இதன் பொருள் :

பாதி உடல் கொண்டவன் . பெரும் வீரன் . சந்திர சூரியர்களை பிடிப்பவன் . அசுர பெண்ணின் கர்ப்பத்தில் தோன்றியவன் . அந்த ராகுவை வணங்குகிறேன் . 

புதன் கிரகம் :

ஓம் உத் புத்யத் வம்ச மனச சகாய சமக்கினி மித்வம் 

பஹவ ஸ்னீவா ததிக் ராமக்கினி முஷஷம் ச தேவீம் 

இந்த் ராவதோ வஸேனி ஹ்வ  ஏவ 

இதன் பொருள் : பொன் நிறமானவன் கோங்கு என்ற மலரின் நிறமுடையவன் . மஞ்சள் நிற ஆடையை அணிந்தவன் மஞ்சள் சந்தனம் தரிப்பவன் சிங்க வாகனமுடையவனை புதனை வணங்குகிறேன் . 

இந்த கிரக மந்திரங்கள் இந்தியாவில் சமஸ்கிருதம் என்ற மொழியில் உள்ளது . இதன் பொருளையும் கொடுத்திருக்கிறேன். இந்த மந்திரங்களை உச்சரித்து அதிர்ஷ்ட பெயரை எழுதி பார்க்கும்பொழுது கிரகங்கள் மகிழ்ச்சி அடைந்து நன்மைகளை செய்யும் என்பது நம்பிக்கை .

மற்ற கிரகங்களின் மந்திரங்களை நாளை பார்ப்போம் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328





 

 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment