6- 15 - 24 - தேதிகளில் பிறந்தவர்கள் சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் . இவர்களுக்கு 15 - 24 - 33 - 42 - 51 - 60 - 6 - 78 - 96 - போன்ற எதாவது ஒரு எண்களில் பெயரை அமைத்துக்கொள்வது சிறப்பை தரும் . இதில் 51 எண் சுக்ரனின் ஆதிக்க எண்களில் நீச்சம் அடைந்த எண் என்பதால் இதில் பெயரை அமைப்பது அவ்வளவாக சிறப்பான பலனை தராது .
இந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஏதாவது கலையில் பிரசித்தி பெற வாய்ப்புகள் உண்டு . எல்லோரையும் வசியப்படுத்தி ஆட்சி புரியும் திறமை பெற்றவர்கள் இவர்கள் . சுகமான வாழ்க்கைக்கும் வழிமுறைகளை இயற்கையாகவே கற்றவர்கள் எனலாம் .
கண்களில் காந்த சக்தி மிகுந்திருக்கும் . அழகான அனைத்து பொருள்களிலும் கலை காவிய துறையிலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டாகும் . நாடாளும் வசிய திறமைகளும் இவர்களுக்கு உண்டு .
காம இச்சைகளில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கும் . மந்திர தந்திர வித்தைகளை தன்னுடைய சுயநலத்திற்க்காக பயன்படுத்துபவர்கள் இவர்களே .
சிந்தித்து செயலில் இறங்குவார்கள் . அதிர்ஷ்டமும் சுய முன்னேற்றத்தில் அதிக கவனமும் கொண்டவர்கள் இவர்கள் .
வசீகரமான சொல் நடை உடை பாவனைகளால் யாவரையும் எப்பொழுதும் மயக்கும் ஆற்றலுடையவர்கள்
இவர்களுக்கு நவரத்தினம் ஜவுளி அதாவது துணி வியாபாரம் பட்டு வியாபாரம் உல்லச பொருட்களை விற்பனை செய்வது பெண்களுக்கான பொருள்கள் நறுமண பொருள்கள் தயாரிப்பு வைர வியாபாரம் வெள்ளி வியாபாரம் ஏஜென்சி திரவ வகை பொருள்கள் போன்ற வியாபாரங்கள் இவர்களுக்கு லாபம் தரும் .
இவர்களுக்கு 3 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நன்மையை தராது . இந்த கிரகத்துக்கு உரிய தேவதை லட்சுமி . இந்த கிரகத்துக்குரிய திசை தென்கிழக்கு . அதிர்ஷ்ட உலோகம் வெள்ளி .
இவர்களுக்கு ஆழ்ந்த நீலம் பச்சை சிகப்பு கலந்த வர்ணங்கள் அதிர்ஷ்டத்தை தரும் . வெள்ளை மஞ்சள் ரோஸ் நிறங்கள் அதிர்ஷ்டத்தை தராது .
மேலும் இவர்களுக்கு 5 ம் எண்ணில் பெயரை அமைப்பது சுமாரான பலனையே தரும் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
91 + 8122733328


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment