கிரகங்களில் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் :
பிறந்த தேதி 8-17- 26- இந்த தேதியில் பிறந்தவர்கள் சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் . பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகள் 8 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்தாலும் சனி கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள் .
இரண்டு பூஜ்யங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமையும்பொழுது அது எட்டாக மாறுகிறது . ஜோதிடத்தில் மகரம் கும்பம் இந்த இரண்டு ராசிகளுக்கும் அதிபதியாக சனி திகழ்கிறார் .
சனி ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார் . தேர்ந்த நிர்வாகிகளையும் புதிய கண்டுபிடிப்பாளர்களையும் யோகிகள் ஞானிகள் கடவுளின் சீடர்கள் எழுத்தாளர்கள் பணக்காரர்கள் இவர்களை உருவாக்கம் சக்தி சனிக்கு உண்டு .
இருந்தாலும் களவு விபசாரம் மோசடிகள் கொலை கொள்ளை பேராசை சுயநலம் போக வெறி இப்படிப்பட்ட தீய சக்திகள் இந்த சனிக்கு உண்டு . இவர்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு இவைகள் மூன்றிலும் அல்லது இரண்டில் சனி கிரகத்தின் ஆதிக்க எண்கள் இருந்தால் பார்வைக்கு நல்ல மனிதர் போல் தோன்றினாலும் மேலே சொன்ன கெட்ட பலன்கள் அவரிடம் நிறைந்து இருக்கும் .
சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இரண்டு வகையினர் உள்ளனர். மேன்மையான கருணை அன்பு பாசம் நேர்மை நீதி கலை ஞானம் கடவுளின் தீர்க்க தரிசனம் இவைகளை கொண்டவர்கள் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்கள் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்கள் இவைகளில் குரு சுக்ரன் புதன் கிரகங்களின் ஆதிக்க எண்கள் இருந்தால் மேலே சொன்ன நல்ல பலன்கள் இவர்களிடம் இருக்கும் .
பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிட் எண்கள் இவைகளில் சனியின் ஆதிக்கம் அதிகம் இருந்தால் தாழ்மையான சுபாவங்களால் நிலை தடுமாறிய செயல்கள் புரிபவர்களாக இவர்கள் விளங்குவார்கள் .
பொதுவாக எத்தனை சுகங்கள் இவர்களுக்கு உண்டானாலும் மனம் திருப்தி நிலையில் இருக்காது . இளம் வயதிலேயே தாய் அல்லது தந்தை ஆதரவை இழக்கும் நிலை உண்டாகும் .
பெருத்த கடுமையான உழைப்புக்கும் முயற்சிக்கு பின்னரே இவர்களுக்கு வெற்றியும் சுகமும் உண்டாகும் .
போதிக்கும் தொழில்கள் வாகன வகை தொழில்கள் மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்படும் தொழில்கள் இரும்பு தாது எண்ணெய் வகை தொழில்கள் அச்சு தொழில் அழுக்கு நீக்கிகள் ஜெயில் அதிகாரிகள் போன்ற வழிகளில் இவர்களுக்கு தொழில்கள் அமையும் .
பொதுவாக இவர்களுக்கு 1 ம் எண் 5 ம் எண் போன்ற எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் .
இவர்களுக்கு 9 ம் எண் ஆதிக்க பெயர் நல்ல பலன்களை அவ்வளவாக தராது .
இவர்கள் 8 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்திருந்தாலும் 8 - 17 - 26 போன்ற தேதிகள் அவ்வளவாக நல்ல பலனை தராது .
புது முயற்சிகள் மேற்கண்ட தேதிகளில் எடுக்காமல் இருப்பது நல்லது . மஞ்சள் நிறமும் நீல நிறங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் .
சிகப்பு நிறத்தை தவிர்ப்பது நல்லது .
இவர்களுக்கு குலதெய்வ வழிபாடு தாய் ஸ்ரீ மூகாம்பிகை கடவுள் வழிபாடு சிறப்பான பலனை தரும் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com



He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment