Home » »


கேது கிரகத்தின் ஆதிக்க தேதிகள் 

பிறந்த தேதி - 7 - 16 - 25 - இந்த தேதியில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் . பிறந்த தேதியின் கூட்டு எண்களிலும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்களிலும் 9 ம் எண் வராமல் இருந்தால் 20 - 47 - 56- 65- 74 - 83 - 92 - போன்ற எண்களில் பெயரை அமைப்பது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் . 

பொதுவாக பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவர்களில் 7 ம் எண் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் இவர்கள் மருத்துவ துறை ஆன்மீக சம்பந்தப்பட்ட துறையில் இவர்கள் இருப்பார்கள் . 

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு . மருத்துவத்துறையில் சாதனைகள் மந்திரம் தந்திரம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இவர்களுக்கு உண்டாகும் .

கண்ணியமான மனிதராகவும் அலங்காரமற்ற தூய ஆடைகளை அணிபவராகவும் இவர்கள் விளங்குவார்கள் . இவர்களுக்கு அவ்வப்பொழுது மன நிலையில் மாற்றம் ஏற்படுவதும் உண்டு . இவர்களிடம் மௌனமும் பேச்சாற்றலும் மாறி மாறி காணப்படும் . 

உடல் பலம் குறைவாகவும் மன பலம் நிறைவாக இருந்தாலும் வீண் கற்பனைகளால் கலக்கங்களை உண்டாக்கிக்கொள்வார்கள் . 

பொதுவாக 1 ம் எண்ணும் இவர்களுக்கு அதிர்ஷ்டமானதே . 7 எண்ணில் பிறந்தவர்களுக்கு எண் 25 மேன்மையான பலனை தரும் . இவர்களுக்கு 16  ம் அதிர்ஷ்டத்தை தராது . 

இவர்கள் 8 - 17 - 26 - போன்ற தேதிகளிலும் கூட்டு எண் 8 க வரும் நாட்களிலும் புது முயற்சிகளை தொடங்காமல் இருப்பது நல்லது  

இந்த கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு அதாவது 7 - 16 - 25 தேதியில் பிறந்தவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளையும் கணக்கில் வைத்துக்கொண்டு பெயரை அமைக்க வேண்டும்.  மற்ற எண்களில் 3 ம் எண் வராவிட்டால் இவர்களுக்கு 6 ம் எண் மிகுந்த நன்மையை தரும் 

இவர்களுக்கு சிகப்பு கருப்பு இந்த நிறங்கள் நன்மையை தராது . மற்ற நிறங்கள் இவர்களுக்கு நன்மையை தரும் . 

இவர்களுக்கு விநாயகர் கடவுள் வழிபாடு மிகுந்த நன்மையை அளிக்கும் . 

இவர்களுக்கு பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 7 க அமைந்துவிட்டால் இசை ஆர்வம்  கவிதை இயற்றுதல் அறிவியல் அதிசயங்களை நிகழ்த்துதல் எழுத்தாற்றல் நடிகராதல் ஆகிய துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள் . 

மேலும் கடல் கடந்த வியாபாரங்கள் கேமரா கம்பியூட்டர் செல்போன் ஆகிய துறைகளும் இவர்களுக்கு நன்மையை தரும் . . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment