Home » » ஜோதிட பாடம் 36

ஜோதிட பாடம் 36


ஹீப்ரு பிரமிடு எண்  11 ன் பலன்கள் 

இது ரிஷப ராசியில் வரக்கூடிய சந்திரனின் உச்ச பலம் பெற்ற எண்ணாகும் .

 எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை  என்றும் இந்த எண் பற்றி  கூறப்பட்டுள்ளது .  

இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . 

சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த எண் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . 

நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஏற்படக்கூடும் . 

தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .   
வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .  

தலைமை பதவி மிருக வசிய வித்தை  மலட்டு தன்மை நீங்கி புத்திர பாக்கியம் பெற வைத்தால் இவை எல்லாம் 11 ம் எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு இந்த எண்  முழுமையான நல்ல பலனையும் தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு சுமாரான பலனையும் இந்த எண் வழங்கும் 

பிறந்த தேதி 9  18  27 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  9 க வருபவர்களுக்கு இந்த 11 ம் எண் கொடுமையான பலனை கொடுக்கும் 

பெண் தேவதைகளின் வழிபாடு இவர்களுக்கு மேன்மையை அளிக்கும் 

தொடரும் 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment