அதே நேரம் இந்த இரண்டு கிரகங்களும் 8 1/2 எட்டரை பாகைக்குல் இருந்தாலும் அல்லது இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டாலும் அந்த ஜாதகர் அரசியலில் தலைமை பதவியில் இருக்க இயலாது .
பதவியில் இருந்து விலக்கப்படுவார் . அல்லது அந்த பதவியில் இருந்து தானாகவே விலகி விடுவார் .
அதே அந்த ஜாதகரின் அம்ச கட்டடத்தில் சூரியன் சனி ராகு ஒன்றரக இணைந்திருந்தாலும் அந்த ஜாதகர் அரசியலில் தலைமை பதவியில் நிலைத்திருக்க முடியாது .
இதற்க்கு இந்தியாவின் முந்நாளைய பிரதமர் திரு விபி. சிங் . அவர்களின் ஜாதகத்தை உதாரணமாக கொள்ளலாம் .
கடக லக்கினத்தை சேர்ந்த 6 9 ம் இடத்துக்கு உடைய குரு ராசி கட்டத்தில உச்சம் . . அதே குரு அம்ச கட்டத்திலும் உச்சம் . இதனால் வர்கோத்தமம் என்ற ராஜயோக அமைப்பு உருவாகி உள்ளது .
5 10 இடத்துக்கு உடைய கிரகம் செவ்வாய் ராசி கட்டத்திலும் அமசத்திலும் சிம்ம ராசியில் ஒரே இடத்தில இருந்து வர்கோத்தமம் என்ற அமைப்பை பெற்றுள்ளது .
7 8 ம் இடத்துக்குடிய கிரகம் சனி . இந்த சனி ராசி கட்டத்தில் தனுசு ராசியிலும் அம்ச கட்டத்தில் தனுசு ராசியிலும் இருந்து வர்கோத்தமம் என்ற ராஜா யோகம் அமைப்பை பெற்றுள்ளது . அரசியலில் பிரகாசிக்க இந்த வர்கோத்தமம் என்ற அமைப்பு மிக முக்கியம் .
இவருடைய ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்ரன் ரிஷப ராசியில் ஆச்சு . புதன் மிதுன ராசியில் ஆட்சி .
இவரின் ஜாதத்தில் குரு உச்சம் . மூன்று கிரகங்கள் வர்கோத்தமம் . இரண்டு கிரகங்கள் ஆட்சி என்ற என்ற ராஜயோக அமைப்பில் இவரது ஜாதகத்தில் இருந்ததினால் இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்றாலும் சூரியன் மிதுனத்தில் சனி தனுசு ராசியில் இருந்து ஒருவரை ஒருவர் 7 ம் பார்வையாக பார்த்து கொள்கிறார்கள் . .
அம்ஸத்தில் சூரியன் சனி ராகு இந்த மூன்றும் ஒன்றாக இணைந்துள்ளது . .
இந்த அமைப்பு அரசியலில் இருந்து தனது பதவியை தானாகவே ராஜினாமா செய்யும் சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது .
உங்களது ஜாதகத்தில் அரசியலில் பிரகாசிக்கும் அமைப்பு உள்ளதா தெரிந்து கொள்ளுங்கள் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com



He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment