Home » » ஜோதிட பாடம் 16

ஜோதிட பாடம் 16

 


ஜோதிட பாடம் 16 

ஹாய் சிவராம் 

ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் தசா புக்திகள்  அதாவது ஒவ்வொரு கிரகமும் பலன் தரக்கூடிய கால அளவுகள் நட்சத்திரங்களின்  அடிப்படையில் ஆரம்பிக்கின்றது . 

ஒருவரின் பிறந்த ஜாதகப்படி கிருத்திகை உத்திரம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  சூரிய தசை ஆரம்பிக்கும் . இந்த தசை  6 வருடம் நடக்கும் 

ரோகிணி அஸ்தம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  சந்திர தசை ஆரம்பிக்கும் . இந்த தசை 10 வருடம் நடக்கும் 

மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை ஆரம்பிக்கும் . இந்த தசை  7 வருடம் நடக்கும் 

திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  ராகு தசை  ஆரம்பிக்கும் . இந்த தசை  18 வருடங்கள் நடக்கும் .

புனர்வசு விசாகம் பூரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை ஆரம்பிக்கும் . 

பூசம் அனுஷம் உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை ஆரம்பிக்கும் . இது 19 வருடங்கள் நடக்கும் 

ஆயில்யம்  கேட்டை ரேவதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  புதன் தசை ஆரம்பிக்கும்  இந்த தசை 17 வருடங்கள் நடைபெறும் . 

ஒருவர் பிறந்தவுடன் அவரின் பிறந்த ஜாதகத்தை கணித்து  பார்த்தால் அவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம் . அவர் பிறந்த நாள் முதல்  அவரின் நட்சத்திரத்தை வைத்து கிரகங்கள் பலன் தரும் கால அளவுகளை தெரிந்து கொள்ளலாம் . 

கிருத்திகை உத்திரம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவர் பிறந்த நாளில் இருந்து  சூரியனின் தசை அதாவது அந்த கிரகங்கள் அந்த ஜாதகருக்கு பலன் தரும் கால அளவுகள் 7 வருடம் என்பதை தெரிந்து கொள்ளலாம் .

இந்த  கிரகங்களின் கால அளவுகளில் அந்த கிரகங்கள் ஜாதகத்தில் பலன் தரும் இடங்களில் இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் . 

தீமை தரக்கூடிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகருக்கு கிரகங்கள் பலன் தரும் கால அளவுகளில் தீமையான பலன்கள் உண்டாகும் . 

பெயர் திருத்தம் செய்து கொள்ள வருபவர்களுக்கு  முதலில் அவர்களின் ஜாதகப்படி எந்த கிரகத்தின் தசை அதவாது கிரகத்தின் கால அளவுகளில் அவர் இருக்கிறார் என்பதை முதலில் கவனிக்க வேண்டும் . 

இவைகள் அனைத்தும் ஒருவருக்கு பெயர் திருத்தம் செய்து கொடுக்கும்பொழுது இதையும் கவனத்தில் கொண்டு பெயர்  திருத்தம் செய்து கொடுத்தால் அவருக்கு முழுமையான பலன்கள் உடனடியாக கிடைக்கும் . 

ஒருவருக்கு  பெயர் திருத்தம் செய்து கொடுக்கும்பொழுது திருத்தம் செய்யப்பட்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கும் 

அந்த ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு உரிய கிரகங்களுக்கும்  குரு கிரகத்தின் பார்வை இருந்தால் அந்த பெயர் திருத்தம்  ஆச்சரியபடும் வகையில் பிரமாண்டமான பலனை கொடுக்கும் . 

இவைகளை நாளை பார்க்கலாம் 

ஜோதிடர்  ஆர். இராவணன் BSC 


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment