Home » »

 


ஹாய் ஹீப்ரு எண் ஹீப்ரு எண் 40 .ன் பலன்கள் உங்களுக்கு அனுப்பவில்லை  குறித்து வைத்துக்கொள்ளவும் . 

பெயருக்கான எண்ணை தேர்ந்தெடுக்கும்பொழுது பிறந்த நேரத்தை நாம் கவனத்தில் கொள்ள தேவை இல்லை .  பிறந்த குழந்தைக்கோ அல்லது ஒரு நபருக்கோ அவரின் ஜாதகத்தை கணிக்கும்பொழுது  மட்டும் பிறந்த நேரம் முக்கியம் . 

அதேபோல் போல் உதாரணத்துக்கு ஒருவர் 3 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்திருந்தால் அவருக்கு  3 - 9  - 5  -  1 - ம் எண் ஆதிக்கத்தில் பெயரை வைக்கலாம் . ஆனால் இந்த 4 எண்களில் எந்த எண்களில் பெயரை அமைக்கலாம்  என்ற குழப்பம்  வரும்பொழுது அவரின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணித்து பார்க்கும்பொழுது  3 க்கு உரிய குரு 9 க்கு உரிய செவ்வாய் 5 க்கு உரிய புதன் 1 க்கு உரிய சூரியன் இவர்களில் யார் அதிக வலிமை பெற்றிருக்கிறார்கள் என்பதை கவனித்து அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில்  பெயரை அமைக்கவேண்டும் . 

ஜாதகம் கணிக்கும் விபரத்தையம் ஜாதகத்தில் எந்த கிரகம் எந்த இடத்தில இருந்தால் வலிமை என்பதையும்  உங்களுக்கு கடைசியில்  சொல்கிறேன் . எனக்கு நினைவு படுத்தவும் . 

ஹீப்ரு எண் 41ன் பலன்கள் : 

4 என்ற ராகுவும் 1 என்ற சூரியனும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை வெளிபடுத்தும் இந்த 41 ம் எண் சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . ஒரு தேவதையின் கையில் கோப்பை போன்ற   எகிப்திய சித்திரங்கள் இந்த 41 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணபடுகின்றன. 

"சிருங்கார தாண்டவம் " என்ற மந்திர வார்த்தைகளும் - " தேவியின் ஆனந்த தாண்டவம் என தேவியின் புகழ் கூறும் சௌந்தர்ய லஹரி நூல் கூறுகிறது . 


5 ம் எண் வரிசையில் மிகவும் அற்புதமான இந்த எண் . சிம்ம ராசியில் புதனின் பலனை குறிக்கும் எண்ணாக இந்த எண் விளங்குகிறது . சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த எண் வழங்கும் . பராசக்தியின் அருள் பூரணமாக  கிடைப்பதை இந்த எண் உணர்த்துகிறது . பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வல்லமை இந்த 41 ம் எண்ணிற்கு உண்டு . ஆன்மிகம் தத்துவம் - அரசியல் - விஞ்ஞானம் - திரவம் சம்பந்தப்பட்ட பொருள்கள் ஆகிய அனைத்திலும் மேன்மை உண்டாகும் . 

நண்பர்கள் - பெண்களால் உதவி - பசியின்மை - அல்சர் போன்ற நோய்கள் நீங்குதல் இப்படி எண்ணற்ற நற்பலன்களை கொண்டது இந்த 41 ம் எண் . மனிதருள் மாணிக்கமாகவும் - சாதனை செம்மலராகவும் - எவ்வழியிலும் உயர்ந்த பதவியை பெறுபவர்களாகவும் இந்த 41 ம் காரர்கள் விளங்குவார்கள் . 

வெற்றி வீரராகவும் - இவர்களின் சொல்லுக்கு  அனைவரும் அடங்குதலும் இந்த எண்ணின் அற்புத பலன்களாக கருதலாம் . முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 

பிறந்த தேதி - 5 - 14 - 23 - 8 - 17 - 26 - 9 - 27 - 18- க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - 5- 8 - 9-  க வருபவர்களுக்கும் - இந்த 41 ம் எண் மிகுந்த நற்பலன்கள் தரும் . மற்ற எண் காரர்களும் இந்த 41 ம் எண்ணில் பெயர் அமைத்து வெற்றி காணலாம் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 41 எண் வந்தால் மட்டுமே மேலே சொன்ன பலன்கள் நூற்றுக்கு நூறு நடக்கும் 

ஹீப்ரு எண்  42 ன் பலன்கள் :

ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண்ணும் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும்  இந்த 42 ம் எண் சிம்ம ராசியில் ஆதிக்கம் வகிக்கிறது .   

மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் - பதவி - பொருள் வரவு - பல ஜன தொடர்பு சமூகத்தில் நற்பலன் போன்றவற்றை தர வலிமை கொண்டது . இரண்டு கோப்பைகள் கொண்டஎகிப்திய  சித்திரங்கள் இந்த 42 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

"ரத்னகிரீடம் - ஸகல வசியம் என மந்திர  நூல்கள் இந்த எண்ணை பற்றி விவரிக்கின்றன . அரசியல் தத்துவம் - சினிமா - இசைத்துறையில் கிரீடம்அணியும் அளவுக்கு நிகரற்ற மேன்மையும் தர வலிமை கொண்டது இந்த எண் . ஆண்டவன் அருளும் - திடமான மன நிலையும் - நிலையான பொருளாதார மேன்மையையும் இந்த எண் தரும் . தானாகவே நல்ல பதவிகளும் இந்த எண்ணுக்கு தேடி வரும் . நோய்களை குணமாக்கும் சக்தியும் இணைந்து சுக்கிர பலத்தை இந்த எண் தருவதால் ஆகாய மார்க்கமான நற்பலன்களும் - திரவ வகையான கெமிக்கல் பொருள்களால்  லாபம் உண்டாகும் . 

" ஸகல வசியம் " ஜல ரோக நிவாரணம் " என் சக்தி தேவியின் தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி குறிப்பிடுகிறது . 42 ல் பெயர் உள்ளவர்கள் ஏழ்மையான  நிலையில் ஜனித்திருந்தாலும் பெரிய அதிகார பதவியை அடையும் பாக்கியம் பெறுவார்கள் . மனோ பலம் மிகுந்தவர்கள் என்று இவர்களை கூறலாம் . இந்த எண்ணிற்கு நீரிழிவு நோயை குணப்படுத்தும் வல்லமை உண்டு  என மிக பழமையான நூல்களில் காணப்படுகிறது . 

3 - 12 - 21 - 30 - போன்ற தேதியில் பிறந்தவர்களும் - தேதி - மாதம் - வருடம் இவற்றை கூட்ட வரும்பொழுது 3 ம் எண்ணாக வருபவர்களும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3- க வருபவர்களும் - கண்டிப்பாக 42 ம் எண்ணில் பெயர் வைக்க கூடாது . இந்த 42 ம் எண்  6 ம் எண் காரர்களுக்கு மேன்மை வரும் . பெயரில் இந்த 42 ம் எண் வருவதை விட பெயரின் ஹீப்ரு எண்ணாக 42 ம் எண் வருமானால் அரசனுக்கு நிகரான வாழ்வு உண்டு . 

ஹீப்ரு எண் 43 ன் பலன்கள் :

ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் குருவை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .

நன்மை தீமை ஆகிய இருவகை குணங்களை கொண்டது இந்த எண்  . பதவி - அறிவு - கம்பீரமான தோற்றம் - புத்திசாலித்தனம் ஆகியவற்றை தரும் . ஆனால் மறுபக்கம் பொருள் நாசம் - பதவியில் சிக்கல் குறுகிய மனம் போன்றவற்றை தரும் . 

இந்த எண்ணை பற்றி எகிப்திய பிரமிடுகளில் " மூன்று கோப்பைகள் மூன்று பெண்கள் " தொடர்பு பெற்று காணபடுகின்றன . இந்த 43 ம் எண்ணைப்பற்றி மந்திர நூல்களில் கற்பக தருமலர் வாசம் செய்யும் இடம் என்று  காணப்படுகிறது . மந்திர சக்தி வாய்ந்த இந்த 43 ம் எண்ணுக்கு இரு  பக்கங்கள் உண்டு . ஒன்று ராகு பலம் . மற்றொன்று குரு பலன் எனலாம் . மிகவும் ஆபத்தான இந்த 43 ம் எண் உயிர் ஆபத்துகளையும் - திடீர் சரிவையும் - சிறை வாழ்வையும் தரும்  தன்மையும்  இந்த எண்ணுக்கு உண்டு . 


புரட்சிகரமான வாழ்வையும் - விரோதிகள் பெருகிக்கொண்டே போவதையும் இந்த எண் குறிக்கிறது . தீவிர அபிப்ராயங்களை பிரசவித்தலும் - கற்பனை எழுத்துவளம் - பேசும் திறன் - ஆகியவைகளும் இந்த ஞானகாரனான கேதுவின் பலம் பெற்ற 43 ம் எண்ணிற்கு உண்டு . போராட்டம் பெரும் தடைகள் - புரட்சிகரமான மாற்றங்கள் - பொது வாழ்க்கையை பிரதானமாக எடுத்து கொள்ளுதல் - பொறாமை குணம் கொண்ட சிலர் மூலம் பிரச்சனைகளை சந்தித்தல் போன்றவையும் இந்த எண்ணிற்கு உண்டு . மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துவதால் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலைகளையும் இந்த எண் உண்டாக்கும் . 


இவர்களின் இலட்சியங்கள் ஈடேறினாலும் சுயமாக சுகம் காணும் சூழ் நிலை உண்டாகாது . புத்தி கூர்மையும் - திறமையும் பெற்ற இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்களெல்லாம் தூர விலகி நிற்கும் . இவர்களது கருத்துகளுக்கு எதிர்ப்பு உண்டாகும் . நிம்மதியற்ற வாழ்வும் - உயிர் ஆபத்துகளும் இந்த எண்ணிற்கு நிச்சயம் உண்டு . " ஸர்வஜயம் என்பதால் இந்த 43 ம் காரர்கள் வெற்றி பெறுவார்கள் . ஆனாலும் பிரயோஜனம் இல்லை 

ஹீப்ரு எண் 44 ன் பலன்கள் : 

எட்டு எண் வரிசையில் இந்த 44 ம் எண் முக்கிய அங்கத்தை வகிக்கிறது . இந்த எண்ணில் பெயர் கொண்டவர்களுக்கு பல லட்சம் மதிப்புக்கு சொத்தும் காணப்படுகிறது. அடிப்படை தேவை கூட  கிடைக்காமல் அவதிப்படுவோரையும்  காணலாம் .  எகிப்திய சித்திரங்களில் ஓய்ந்து போன ஒரு இளைஞனோடு நான்கு கோப்பைகளும் போன்ற சித்திரங்கள்   இந்த 44 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . சிவந்த இளம் சூரியன் என மந்திர நூல்களில் இந்த எண்ணைப்பற்றி காணப்படுகிறது . 

4 என்ற ராகுவும் 4 என்ற ராகுவும் இணைந்து 8 என்ற சனி பகவானின் பலத்தை தருவதால் இந்த எண் வசீகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் . ஸ்ரீ  சக்கரத்தின் தத்துவங்கள் 44. ஸ்ரீ விஷ்ணுவின் சஹஸ்ரநாமம் 44 என்பதை இவ்வெண் குறிக்கிறது . போக காரனின் இரு மடங்கு சக்தியை குறிப்பதால் உயர் பதவி மனிதர்கள் தொடர்பு - செல்வந்தர்கள் தொடர்பு ஆகியவற்றை இவ்வெண் உருவாக்கும் .

4 என்பது நான்கு மூலைகளை  குறிக்கும் - இரு நான்கு எட்டு பாகங்களை குறிப்பதால் திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கை உண்டாகும் . நிறுவனங்களோ - தனி மனித பெயரோ இந்த எண்ணில் அமையும்பொழுது மேஜை - நாற்காலி - பஸ் - லாரி - வாடகை மோட்டார் - முதலியவற்றால் லாபம் உண்டாகும் . 

கட்டிடம் கட்டுதல் - இரும்பு சம்பந்தமான தொழில் - காண்ட்ராக்ட் - கமிஷன் - பிறரை மகிழ்விக்கும் தொழில்கள் - சினிமா தியேட்டர் - நிலக்கரி - இரும்பு தொழிற்சாலை - அச்சாபீஸ் - இவைகள் மூலம் லாபம் பெருகி பொது ஜன ஆதரவால் தொழில் சிறக்கும் . இந்த 44 ம் எண் சுலபமாக செல்வம் சேர்க்க துணை நிற்கும் . நல்ல சிந்தனை - பக்தி படைத்த இவர்களுடைய எண்ணங்கள் பொருள் சேர்ப்பதிலேயே இருக்கும் . 

இத்தனை அனைத்து விதமான சிறப்புகளை ஆரம்ப வாழ்வில் வழங்கினாலும் தொழில் ஒரு நாள் நின்று விடும் . நெருப்பு மூலம் ஆபத்து - கட்டிடங்கள் இடிந்து விழுதல் - அகால மரணங்கள் - விபத்து - தீராத நோய்கள் - தீய வழியில் செல்லும் மனபோக்குகளால் இடையூறு - சிறைவாசம் - அரசாங்க விரோதம் - இவைகள் எல்லாம் இந்த 44 ம் எண்ணிற்கு உண்டு . 

எந்த எண் தேதியில் பிறந்திருந்தாலும் கண்டிப்பாக பெயர் எண்ணிலும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணிலும் இந்த ஆபத்தான 44 ம் எண் வராமல் பார்த்து கொள்ளவேண்டும் .

பொதுவாக பெயரிலும் பெயரின் ஹீப்ரு எண்ணிலும் 8 ம் எண் ஆதிக்கம் வராமல் இருப்பது நன்மை தரும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment