Home » »

ஹீப்ரு எண் 30 ன் பலன்கள் :

இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் சிந்தனை உலகிலேயே இருப்பவர்களாகவும் மிகுந்த புத்திசாலி தனம் உடையவர்களாகவும் யோசனைகள் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் . 

லாபம் நஷ்டம் என்பதை பற்றி கவலைப்படாமல் தனது மனது சந்தோஷத்துக்காக காரியங்கள் செய்பவர்கள் இவர்களே . மிகுந்த சக்திமானாக இருந்தும் பொருளாதர ஈட்டுவதில் ஈடுபாடு குறைவாகவே இவர்களுக்கு இருக்கும் . சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்த தவறி விடுவார்கள் . 

வீடு நிலம் மனை சொத்து இவைகள் இவர்கள் பெயரில் இருந்தாலும் அதில் பற்றுதல் இவர்களுக்கு குறைவாகவே இருக்கும் . 

இவர்களின் தீர்மானங்களும் முடிவெடுக்கும் திறமையும் மிக சரியாகவே இருக்கும் . 

வாழ்க்கையில்  நல்ல பலன்கள் இவர்களுக்கு கிடைத்தாலும் அதை பயன்படுத்தி கொள்ள தவறுவார்கள் . சுமாரான பலனை தரக்கூடிய எண்ணாகவே இதை கருதலாம் . 

ஹீப்ரு எண் 40 ன் பலன்கள் 

தனி மனிதன் ஒருவன் ஒரு கோப்பையை ஏந்தியபடி நிற்கிறான் . இது இந்த எண்ணோடு தொடர்புடைய எகிப்திய பிரமிடு சித்திரமாகும் 

ராகுவின் ஆதிக்கம் இந்த பெயரில்  மேலோங்கி நிற்பதால் தீய குணங்கள் இந்த எண்ணில் அதிகமாக காணப்படும் . பணம் விசேஷமான நகைகள் சொத்து வகைகள் இந்த எண்ணிற்கு உண்டு . எதிர்பாராத நண்பர்களையும் பெரிய  அந்தஸ்தையும் அதிகார பதவிகளையும் தரக்கூடியது இந்த எண் 

பேச்சு எழுத்து மூலம் இவர்கள் பிரபலமாவார்கள் . சுயநலம் மேலோங்கிய மனிதராகவும் இவர்கள் விளங்கக்கூடும் . ஆரம்பத்தில் புகழப்பட்டும் வாழ்த்தப்பட்டும் வந்த இந்த எண்ணினர் திடீரென எல்லாம் தலைக்கீழாக மாறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் .  சமூகம் உறவுகள் நண்பர்கள் யாருமே இவர்களை ஆதரிக்காமல் ஆபத்தில் விட்டு விடுவார்கள் . வாழ்க்கையின் முடிவு பிரயோஜனம் இல்லாததாக முடியும் . 

தீர்க்க தரிசனம் விஞ்ஞான அறிவு மருத்துவத்துறை ஞானம் லஷ்மி கடாட்சம் திரவம் சம்பந்தமான தொழிலில் மேன்மை அமானுஷ்ய சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் . ஆக்கம்  இப்படி நல்ல விஷயங்களும் இந்த எண்ணிற்கு உண்டு .

பிறந்த தேதி 1 - 10  -10  - 28 இந்த தேதியில் பிறந்திருந்தால் பெயரின் நியூமராலஜி எண் இந்த எண்ணில் அமைந்திருந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 46 - 37 - 19  - 73 - 82 - 91 - போன்ற எண்களில் அமைந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் .

ஹீப்ரு எண் 50 ன் பலன்கள் .

புதனின் ஆதிக்க எண்ணில் உச்சமடைந்த எண்ணாகும் . அதாவது புதனின் பலனை முழுமையாக கொடுக்கும் எண்ணாகும் . 

கணிதத்திலும் ஜோதிடத்திலும் ஆர்வம் அதிகம் காணப்படும் . அறிவும் நல்ல ஒழுக்கமும் இந்த எண்ணிற்கு உண்டு . எந்த ஒரு பிரிவிற்கும் நல்ல முடிவை இவர்கள் எடுப்பார்கள் . கன்னி ராசியில் ஆட்சியாகவும் உச்சம் பெறும் எண்ணாகவும் இருப்பதால்  வித்தை வளமும் கற்பனை வளமும் உண்டு . 

மித மிஞ்சின புத்திசாலி தனம்  தீவிரமான ஆராய்ச்சியை கல்வி கேள்விகளில் நிகரற்ற  திறன் போன்றவையும் இந்த எண்ணிற்கு உண்டு . சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது தனித்திறமையினால் மொழி வளமும் நுட்பமான புலமையும் கூர்மையான அறிவை பெறுகிற யோகமும் இந்த எண்ணிற்கு உண்டு .

பேச்சாற்றல் பிரயாணத்தில் பிரியம் வாழ்க்கை துணைவரால் வளம் நலம் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு . சிறந்த வைத்திய நிபுணத்துவம்  தீர்க்க தரிசனமும் இவர்களுக்கு உண்டு . 

கை கால் போன்ற உறுப்புகளில் நோய்களை குணமாக்கும் தன்மை இந்த எண்ணிற்கு உண்டு . ஆயுள் விருத்தியை இந்த எண் வழங்கும் . 

ஹீப்ரு எண் 70 ன் பலன்கள் :

கேதுவின் பூரண ஆற்றல் இந்த எண்ணிற்கு உண்டு . உலக சுகங்களில் வெறுப்பையும் தீவிரவாத தன்மையையும் தோல்விகள் ஏமாற்றங்கள் சுகமற்ற வாழ்க்கை என இளம் வயதில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி முதிர்ந்த வயதில் மிகுந்த வெற்றியும் புண்ணிய வாழ்வு பெறுதலையும் இந்த எண் குறிக்கிறது. . 

7 சக்கரங்கள் மேலும் கீழும் ஏறி இறங்குதலையும்  7 லோகங்களையும் குறிப்பிடுவதால் பணம் சம்பந்தப்பட்ட தொழில்களில் நிலையான வெற்றி இராது . வழக்கு விவகாரங்கள் இல்லற வாழ்வு இவற்றில் பிரச்சனைகளை தரும் .

ஆத்ம ஞானம் இவர்களுக்கு கூடும் . திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களும்  கப்பல் படகு ஏற்றுமதி இறக்குமதில் போன்ற தொழில்களுக்கு இந்த எண் ஹீப்ரு எண்ணாக அமையும்பொழுது அதிர்ஷ்டத்தை தரும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328






 

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment