Home » »



பெயர் எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 10 பலன்கள் :

அதிர்ஷ்ட சக்கரமாக இந்த எண் பற்றி எகிப்திய பிரமிடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது .  

சூரிய சக்தியின் வலிமையையும் - தனித்தன்மையையும் - தன்னம்பிக்கை - துணிவு - தடைகளை - உடைக்கும் தைரியம் ஆகியவற்றையும் இவ்வெண் வழங்கும் . 

இரும்பு வாகன தொழில்களுக்கு இந்த 10 ம் எண்  செல்வசெழிப்பை தரும் .  திரைப்பட துறையில் பிரகாசிக்க இந்த எண் துணை புரியும் . 

பெயரில் இந்த எண்ணை பெற்றவர்கள் நேர்மையும் - நியாயமும் நிறைந்தவர்களாக திகழ்கிறார்கள் . வாழ்க்கையில் நிதானமும் சுய பலமும் உண்டாகும் . சுலபமாக புகழ் - பெயர் - அந்தஸ்து பெற வைக்கிறது . பண தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் .  

ஆனால் இது கால சக்கரத்தை குறிப்பிடுவதால் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி அடிக்கடி உண்டாகி வரும் . குண்டலியின் மூலாதாரம் முதல் ஸகஸ்ராரம் வரையிலான ஓட்டத்தை குறிப்பதால் நோய்கள் குணமாகும் . திருமாலின் அவதாரம் 10 . தசமஹா விதியை 10 . திசைகள் 10 . மானசீக புத்திரர்கள் 10 . மணி பூரக கமலம் 10 . பிரகடன யோகிகள் 10.  என்பதை இந்த எண் உணர்த்துகிறது .

ஹீப்ரு எண்  11 ன் பலன்கள் :

இது ரிஷப ராசியில் வரக்கூடிய சந்திரனின் உச்ச பலம் பெற்ற எண்ணாகும் . எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை என்றும் இந்த எண் பற்றி  கூறப்பட்டுள்ளது .  இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த எண் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஏற்படக்கூடும் . தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .

வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக
அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது . 

ஹீப்ரு எண் 12 ன் பலன்கள் : 

ரிஷப ராசியில் வரக்கூடிய குருவின் ஆதிக்கம் பெற்ற எண்ணாகும் .1 என்ற சூரியனும் 2 என்ற சந்திரனும் இணைந்து அமாவாசையை குறிக்கிறது . இந்த யோகம் சிவ சக்தி யோகம் எனப்படுகிறது . அடுத்தவருக்காக தியாகம் என்பதை குறிக்கும் வகையில் எகிப்திய ஓவியங்களில் இந்த 12 ம் எண்ணை குறிக்கும் பொருளாகிறது . சிறந்த அறிவாளி பேச்சாளன் என் பெயர் கிட்டும் . கௌரவம் - அந்தஸ்து ஏற்படும் . தியாக சீலராகவும் விளங்குவர் . ஆக்க பூர்வமான செயல்களை செய்து முடிப்பார் . 

அறிவையும் நளினத்தையும் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் நினைவூட்டுகின்றன . சொல்வாக்கால் செல்வாக்கு உண்டாகும் . இசை துறையில் ஞானத்தை தரும் . 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்  போன்று அரிதான விஷயங்கள் நிரம்பிய மனிதர்கள் ஆவார்கள் . பொருள் பாக்கியம் அருள் செல்வம் நினைத்ததை முடிக்கும் அதிர்ஷ்டம் எல்லாம் உண்டு . 

சுதர்ஷன எந்திரம் 12 கோணம் உடையதாகவும் - அன்னபூர்ணா ஸ்தோத்திரம் 12 பாடல்களை கொண்டதாகவும் - திருமுறைகள் 12 கவும் - ராசிகள் 12 ஆகவும் - மணி கடிகார அமைப்பு 12 என் - 1 + 2 எனும் விந்தையை குறிப்பிடும் இந்த எண் குருவை குறிக்கிறது . குரு தேவ குருவாக இருந்து பிரம்மச்சாரியம் பூண்டதை போன்று தனக்கு எதுவும் அமையாமல் - அடுத்தவர் நலத்திலும் - வளர்ச்சியிலும் ஆர்வத்தை உண்டாக்கி - தனக்கு என்று எதையும் இவர்கள் வைத்திருக்க மாட்டார்கள் . 

பிறர் பிரயோஜனம் கருதியும் - அடுத்தவர்க்காகவும் , பிரசங்க சக்தியால் பிரபஞ்ச நலம் கொடுத்து வரும் இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களுக்கு திடீரென ஆபத்துகளும் - சூழ்ச்சிகளும் வந்து விடும் .


நான் குறிப்பிடும் 10 லிருந்து 18 வரையிலான எண்கள் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்களாகும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment