இந்த அசுவினி நட்சத்திரம் மேஷ ராசியின் முதல் நட்சத்திரமாகும் . இந்த நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் திருமணமான ஏழாவது நாள் விதவை ஆவாள் என்கிறது ஜோதிட நூல் .
அந்த அசுவினி நட்சத்திரத்தின் அதிபதி கேது . இந்த கேது எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராஸ்க்கதிபதியின் கிரகம் உச்சம் பெற்றால் இந்த கெட்ட பலன்கள் மாறுகின்றன .
எப்படி ?
நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் ஏறினால் நீச பங்க ராஜ யோகம் என்கிறது சர்வ சிந்தாமணி என்ற ஜோதிட நூல் . ராஜ யோகம் பெற்ற பெண் எப்படி விதவை ஆவாள் . ஒரு பெண்ணின் ஜாதகம் ராஜயோக அமைப்பை பெறுகிறது என்றால் அவள் மணவாழ்க்கையும் மாங்கல்ய பாக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டுமே
நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெறவில்லை என்றால் அந்த பெண்ணிற்கு விமோசனம் இல்லையா ?
இருக்கிறது
இந்த பெண் பிறந்த நட்சத்திரத்திலோ அல்லது இந்த பெண் ருதுவான லக்கணத்திலோ குரு இருந்தால் விதவை ஆக மாட்டாள் என்கிறது சாஸ்திரம் .
ருதுவான ஜாதகத்தில் துலாம் ராசியில் சுக்ரன் ஆட்சியாய் அமர்ந்து மேஷ ராசியை பார்த்தாலும் விதவை ஆகமாட்டாள் என்கிறது சாஸ்திரம் .
மேலும் கேதுவின் நட்சத்திரத்திற்கு அதிபதி - மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் மகர ராசியில் உச்சமானால் விதவை ஆகமாட்டாள் .
இப்படி எல்லாம் அமைந்துவிட்டால் சரி - கிரக நிலைகள் அந்த பெண்ணில் ருது ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் அதற்க்கு பரிகாரம் இருக்கிறதா ?
இருக்கிறது .
அசுவினி நட்சத்திரத்தின் அதிபதி கேது . இந்த கேது கிரகத்தின் அதிபதியான கடவுள் விநாயகர் . அசுவினி நட்சத்திரத்தில் ருதுவான பெண் விநாயகர் சதுர்த்தி விரதத்தை முறைப்படி இருந்து அன்றிலிருந்து தொடர்ந்து 108 நாட்கள் விநாயகர் கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டால் ருதுவான தோஷம் விலகி சிறந்த மணவாழ்க்கையும் மாங்கல்ய பாக்கியமும் கிட்டும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment