Home » » பல் மருத்துவர் ஆகி சாதனை படைக்கும் யோகம் யாருக்கு? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

பல் மருத்துவர் ஆகி சாதனை படைக்கும் யோகம் யாருக்கு? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 ஓம் நம சிவாய


 
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருக்கு அமையும்  தொழிலை  பற்றி, அறிய லக்னத்துக்கு பத்தாம் இடம் அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடத்தை கொண்டு அறியலாம்.   

ஒருவர் பல் மருத்துவர் ஆவதற்கு என்ன கிரக நிலை அமைய வேண்டும் என்பதை பார்ப்பதற்கு முன்பு , கேது பகவானை மருத்துவ கிரகம் என்று கூறுவர். 

அதேபோல், மருத்துவர், மருத்துவமனை, என்றால் ரத்தம் கூர்மையான ஆயுதம், போன்றவை தொடர்பு கொண்டிருப்பதால் ரத்தம் கூர்மையான ஆயுதம், போன்றவற்றை ஆட்சி செய்யும் கிரகமான செவ்வாய் பகவானும், மருத்துவதுரையோடு சம்பந்தப்பட்ட கிரகங்களாகும் .

மேலே சொல்லப்பட்ட இரண்டு கிரகங்களும். மருத்துவ துறையோடு, சம்பந்தப்பட்ட கிரகங்கள் என்றாலும். மருத்துவ துறையில் பல பிரிவுகள் உள்ளன. 

அதில் , கண், காது, பல்,  போன்ற பிரிவுகள் அடங்கும். அந்த  பிரிவுகளில், பல் சம்பந்தப்பட்ட  துறையோடு சம்பந்தமுடைய கிரகம், சூரியன், ஆகும். 

நமது உடல் உறுப்பில் பல்லை ஆட்சி செய்யும் கிரகம் சூரியன் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனும், இரண்டாம் இடமும் பாதிக்கப்பட்டால், அவருக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகிய,சொத்தை பல்,  பல்லில் சீழ்  வடிதல் , பல் விரைவில்  கொட்டி போகுதல்  ஒழுங்கற்ற  பல் வரிசை, சுருக்கமாக  சொல்லப்போனால் பல்லிலே குறைபாடு என்று சொல்லக்கூடிய பிரச்சனைகள் இருக்கும்.



லக்னத்துக்கு இரண்டாம் இடம், சந்திரனுக்கு இரண்டாம் இடம், வாக்கு ஸ்தானம், அதாவது வாய் சம்பந்தப்பட்ட இடம் என்பதால் இரண்டாம் இடம், பல்லை குறிக்கும் இடமாகிறது.

எனவே பல் மருத்துவர் ஆவதற்கும் கீழ் கண்ட கிரக நிலை வழி வகுக்கிறது.

பல்லுக்கு காரகமான சூரியன், நீசம் அடையாமலும், அல்லது மறைவு ஸ்தானங்களில் இல்லாமலும் இருக்க வேண்டும். அதாவது சூரியன் நல்ல இடங்களான  உச்சம், ஒன்று, நான்கு, ஏழு, பத்து, ஐந்து, ஒன்பது, போன்ற இடங்களில் இருக்க வேண்டும். 

சூரியனுக்கு இரண்டாம் இடம்  அல்லது இரண்டாம் இடத்து அதிபதியோடு தொட ர்பு பெற்றிருக்க வேண்டும். 

லக்னத்துக்கு பத்தாம் இடம் அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடம் , அல்லது பத்தாம் இடத்து அதிபதியோடு சூரியன் , இரண்டாம் இடத்து அதிபதி தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

மேலே சொன்ன கிரக அமைப்புகளோடும், மேலே சொன்ன இடங்களோடும் , கேதுவும், செவ்வாயும், சம்பந்தம் பெற்றிருக்கும் கிரக அமைப்புகள் இருந்தால் அவர் பல் மருத்துவர் ஆகும் வாய்ப்புகள் உண்டு. 

                                                   

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328









Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment