Home » » இன்றைய ராசி பலன்கள் - வியாழக்கிழமை நவம்பர் 11- 2021 ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்றைய ராசி பலன்கள் - வியாழக்கிழமை நவம்பர் 11- 2021 ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                             

        இன்றைய ராசி பலன்கள் - புதன் கிழமை நவம்பர் 11- 2021 ? 

இன்று பிலவ வருடம் ஐப்பசி 25 ஆம் தேதி நவம்பர் 11,2021 வியாழக்கிழமை,சப்தமி திதி காலை 06.50 மணி வரை அதன் பின் அஷ்டமி திதி மறுநாள் காலை 06.50 மணிவரை. திருவோணம் நட்சத்திரம் பகல் 02.59மணி வரை அதன் பின் அவிட்டம் நட்சத்திரம். சந்திரன் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.  

மேஷம் 

சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்ல நேரிடும்.

சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. இன்று குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் வாங்குவதை தவிர்க்கலாம்.

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கடகம் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். குரு பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

கன்னி 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி வரும். 

துலாம் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சல் ஏற்படும். பயணங்களில் நிதானம் தேவை. வீடு பராமரிப்பு செலவு வரும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். 

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் விற்பனை மூலம் லாபம் கிடைக்கும். 

தனுசு 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவு வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்வீர்கள். 

மகரம் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று யோகமான மாதம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். 

கும்பம் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. 

மீனம் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும்.







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328




Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment