தாயே பூமாதேவி
இன்று பிறந்தவர்களின்
பிறந்த தேதி - 30 - 9 - 2021 - குருவின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் 17 - சனியின் ஆதிக்க எண்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 74 - சந்திரனின் ஆதிக்க எண்
பிறந்த கிழமை - வியாழன்
இன்று 30 - 9 - 2021 - வியாழக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 74. கேது பலமும் ராகு பலமும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த 74 ம் எண் .
எகிப்திய பிரமிடுகளில் நீதி தேவனையும் நாணயங்களும் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது. கவி பாடும் திறமை - அமுதம் என மந்திர நூல்களில் காணப்படுகிறது .
ஒரு விதமான மனசோர்வு சஞ்சலமான மனம் போன்றவற்றை இந்த எண் காட்டுகிறது . தீவிரமான மத இன தேச சீர்திருத்த கருத்துக்களும் , பற்றுதலும் கொள்கைகளை பரப்பும் நாவன்மையும் தனது சமுதாய நலனில் அக்கறையும் அதை உயர்த்த பாடுபடுதலும் இந்த எண்ணிற்கு உண்டு .
உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டால் ஜீரண உறுப்புகளில் பலஹீனம் உண்டாக கூடும் . கேது 7 . ராகு 4. என கால சர்ப்ப தோஷம் உடைய இந்த எண் சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் செல்வம் படைத்தவர்களின் ஆதரவும் அதிகார பதவி மனிதர்களால் ஆதரவும் பிற்கால வாழ்வில் சிறப்புமிகு க்ஷேமமும் உண்டாகும்.
நீதி தேவனை குறிப்பதால் மனிதனின் செயல்களுக்கு ஏற்ப பொருளும் அருளும் கொடுக்கப்படும் . மனிதாபிமானம் கருணை ஈவு இரக்கம் போன்ற குணங்களுடன் வள்ளல் தன்மை உண்டு .
இன்று பிறந்தவர்களுக்கு பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை ஆராய்ந்து அதிர்ஷ்ட முறையில் பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )
இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 74 ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் .
பரிகாரம் : 1
பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் .
பரிகாரம் : 2
நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் .
பரிகாரம் : 3
ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும் .
இன்று செப்டம்பர் 30 ல் பிறந்தவர்கள் :
எம். ஏ . எம் . ராமசாமி செட்டியார் - இந்திய தொழில் அதிபர் - அண்ணாமலை பல்கலை கழகத்தின் இணை வேந்தர் . பிறப்பு 30 - 9 -1931
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328










He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment