ஓம் சிவசக்தி
ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சனி வாசம் செய்யும் காலம் அஷ்டமத்து சனி என்று பெயர் பெறுகிறது .
பொதுவாக ஒரு ஜாதகத்தில் சுப கிரகங்களை விட பாபகிரகங்களே அதிக யோக பலன்களை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . அதாவது கெடுதல் செய்யும் போதும் , அதிகமாக கெடுதல் செய்பவர்களாவார்கள் , நன்மை செய்யவேண்டும் என்று ஆரம்பித்தால் இவர்களை போல் நன்மை செய்ய சுப கிரகங்களால் கூட முடியாது
குறிப்பாக இந்த சனி பகவான் நாம் மேலே சொல்லப்பட்டவைக்கு உகந்தவராவார் . இவர் ஒரு ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் அமர்ந்து தன் தசையை நடத்தும்பொழுது பெரும் ராஜ யோகத்தையே செய்து இருக்கிறார் என்பது நாம் அனுபவரீதியாக கண்ட உண்மை .
இனி அஷ்டமத்து சனி யார் யாருக்கு நன்மை - யார் யாருக்கு தீமை செய்யும் என்பதை நாம் காணலாம் .
மேஷ ராசி
இந்த ராசிநேயருக்கு சனி பகவான் பத்து - பதினொன்றுக்கு உடையவர் என்றாலும் - செவ்வாய் க்கும் சனிக்கும் ஒற்றுமை இல்லாததால் அஷ்டமத்து சனி காலத்தில் இவர்களுக்கு சொல்ல கூடாத துன்பம் அடையக்கூடும் . எனவே எதிலும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது .
அதாவது நல்ல படியாக நடந்து வரும் தொழிலை மற்றவர்களின் சொல்லை கேட்டு மாற்றி அமைத்து அதன் மூலம் தன விரயம் ஏற்படுதல் - யாரோ செய்த தவறுக்காக தான் பொறுப்பேற்று நடத்தல் - இதனால் கெட்ட பெயரும் வீண் மனஸ்தாபமும் ஏற்படுதல் - தாய் தந்தை உடன் பிறந்தோருடன் மனஸ்தாபமும் - குடும்பத்தை விட்டு பிரிந்திருத்தலும் - கடன் அதிகப்படியாக வாங்கிவிட்டு அதை அடைப்பதற்கு சொத்துக்களை விற்பது போன்ற தீமைகள் அஷ்டமத்து சனியால் ஏற்படக்கூடியவற்றில் ஒரு பகுதியாகும் .
ரிஷபம்
இந்த ராசி காரர்களுக்கு சனி பகவான்தான் யோககாரனாவார் . இவர் சஞ்சரிக்கும் பொழுது எட்டாவது வீடு குரு வீடாகையால் இங்கு சனி இருக்கும்பொழுது கெடுதலுக்கு பதில் நன்மையான பலன்களே அதிகம் . நடைபெறும்
அதாவது உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், புதிய தலைமை பதவியை வகிப்பதும் - தொழில் சம்பந்தமான இடமாற்றமும் - கல்யாண மாகாத வயதினர்களாய் இருந்தால் கல்யான் நடைபெறுதலும் - புத்திர பேரு இல்லாதவர்களுக்கு புத்திர பேரு ஏற்படுத்தலும் - சுப நிகழ்சிகள் நடைபெருதலும் போன்ற நன்மையான பலன்கள் நடைபெறும் .
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு சனி எட்டு - ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதியாகிறார் . எட்டாம் வீடானது சனி பகவானுக்கு தனது சொந்த வீடாக அமைவதால் கெடுதலான பலன்களையும் - நன்மையான பலன்களையும் செய்ய மாட்டார் . தான் உண்டு தான் வேலையுண்டு என்றிருப்பார் .
கடகம்
இந்த ராசிக்கார்களுக்கு சனி பகவான் ஏழு - எட்டுக்கு உரியவர் ஆகிறார் . மேலும் சந்திரன் இவருக்கு பகை கிரகமாகிறார் . ஆகவே இவர்கள் சொந்த வீட்டில் அமர்ந்தாலும் கெடுதலான பலன்களையே செய்யக்கூடும் . எனவே கவனத்துடன் செயல்படுவது நல்லது .
சிம்மம்
இந்த ராசிக்கு சனி பகவான் ஆறு - ஏழுக்கு உடையவர் ஆகிறார் . மேலும் சூரியனுக்கு இவர் பகை கிரகம் . எனவே இவர்களுக்கு அஷ்டமத்து சனியினால் கெடுதலான பலன்களே நடைபெறும் என்று சொல்ல இடமளித்து விட்டார் சனி பகவான்
கன்னி
இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் - ஐந்து - ஆறுக்கு உடையவர் ஆகிறார் சனி பகவான் . இவர் ராசினாதனுக்கு நட்பானாலும் எட்டாமிடம் செவ்வாயின் வீடாகும் . மேலும் அங்கு நீச்சமும் அடைகிறார் . எனவே புத்திரர்கள் மூலமாகவும் - கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாலும் மன கவலையை உண்டாக்குவார் .
துலாம்
இந்த ராசிக்காரர்களுக்கு இவர்தான் யோகக்காரர் . மேலும் எட்டாம் வீடு தன் நண்பனான சுக்கிரனின் வீடு . ஆகவே இவர்களுக்கு அஷ்டமத்து சனியின் காலத்தில் இவர்களுக்கு நன்மையே ஏற்படும் என்று சொல்ல இடமுண்டு .
சுப செலவுகள் அதிகப்பட்டு காணும் . உத்தியோகம் - தொழில் சம்பந்தமாக இவர்கள் அயல் நாட்டு பயணம் ,மேற்கொள்ள நேரிடும் . புதிய பூமி - வீடு - வாகனம் - வாங்குதல் - வியாபாரத்தின் மூலமும் நல்ல லாபமும் ஏற்படும் .
விருச்சிகம்:
இந்த ராசி அன்பர்களுக்கு மூன்று - நான்காம் - வீட்டிற்கு அதிபதியானாலும் செவ்வாய்க்கு ஆகாதவர் ஆகிறார் . ஆகவே இவர்களுக்கு சனி எட்டில் சஞ்சரிக்கும் காலம் - குடும்பத்தை விட்டு பிரிதல் - வீண் கடன் தொல்லைகள் மனஸ்தாபம் - வீண் பண விரயம் -விபத்துக்கள் - அடிக்கடி நோய்நொடிகள் தோன்றி மறைதல் கெட்ட பலன்களையே சொல்ல இடமுண்டு .
தனுசு
இந்த ராசிக்காரரகளுக்கு சனி பகவான் இரண்டு - மூன்றாம் இடத்துக்கு அதிபதியாகிறார் . மேலும் இவர் குருபகவானுக்கு பகை கிரகமாவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியின் மூலம் அவ்வளவு நன்மை இல்லை .
மகரம்
இவர்களுக்கு ராசியாதிபதியாகவும் - தன அதிபதியாகவும் இவரேயாவார் . மேற்கொண்டு எட்டாம் வீடு தன் தந்தையான சூரியனின் வீடாகும் . இவர்களுக்கும் அஷ்டமத்து சனியின் காலத்தில் கெடுதலும் இல்லை, நன்மையுமில்லை என்றே சொல்ல வேண்டும் .
கும்பம்
லக்ன விரயாதிபதியான இவர் தன் நண்பனான புதன் வீட்டில் அமர்ந்தாலும் விரயாதிபதி விரயாதிபதிதானே , எனவே வீண் விரயங்களும் - வீண் அலைச்சலும் - மனசஞ்சலமும் ஏற்படுத்த தவறமாட்டார் . சிறிது காலம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும்படியும் செய்துவிடுவார் .
மீனம்
இவர்களுக்கு லாப விரயஸ்தானத்திர்க்கு அதிபதியாகிறார் . மேலும் எட்டாம் வீடு இவர்க்கு உச்ச வீடாகும் . எனவே தீர்க்க ஆயுளையும் - நன்மையான பலன்களையுமே சனி பகவான் வாரி வழங்குவார் . அதாவது நியாயமான சுப செலவுகள் ஏற்படும் . அடிக்கடி வெளியூர் பயணமும் அதன் மூலம் நன்மையையும் ஏற்படும் .
புதிய தொழில் ஆரம்பிப்பார் . இரும்பு சம்பந்தமான வியாபாரத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்கும் .
உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு நன்கு காணப்படும் . பிள்ளைகளின் மூலமும் நன்மையுண்டு . இந்த நற்பலன்கள் மீன ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய அஷ்டமத்து சனியால் ஏற்படக்கூடிய ஒரு சிறு பகுதியாகும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment