இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகியும் இன்றைக்கும் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் ஒரு உண்மை நிகழ்வை பற்றி பார்க்கலாம்.
இடம் : டோக்கியோ நகரம் ,ஜப்பான்
நாள் : டிசம்பர் 30,2000.
புத்தாண்டு வருவதையொட்டி ,மிக்கியோ (44) தனது மனைவி யசுக்கோ(41) மற்றும் குழந்தைகளான நீனா(8),ரே(6) வுடன் ஷாப்பிங் சென்று விட்டு,இரவு,செட்டகயா பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
மிக்கியோவின் வீடு, இரண்டு அடுக்கு மாடி மற்றும் இரண்டு பகுதிகளைக்கொண்டது.
வீட்டின் ஒரு பகுதியில் மிக்கியோவின் குடும்பமும்,மற்றொரு பகுதியில் யசுக்கோவின் தாய் மற்றும் அவரது தங்கை வசித்திருந்தனர்.இரவு நேரத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.
அன்றிரவும் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு, மிக்கியோவின் குடும்பம்,வீட்டின் அவர்களது பகுதிக்கு உறங்க சென்றுவிட்டனர்.
டிசம்பர் 31 அன்று காலை 10 மணி வரை,மிக்கியோவின் குடும்பம் கதவை திறக்கவில்லை.யசுக்கோவின் தாய் வீட்டில் இருந்த இன்டெர்காமில் அழைத்த போது லைன் கிடைக்கவில்லை.
காலையில் எப்போதும் சீக்கிரம் எழுவார்கள் இன்னும் வெளியே வரவில்லை,இன்டெர்காமிலும் லைன் கிடைக்கவில்லை,ஒரு அசாதாதாரணத்தை உணர்ந்த யசுக்கோவின் தாய், அவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு சென்று பார்த்த போது.கதவு உள் பக்கம் தாழிடப்பட்டு இருந்தது.
தன்னிடம் இருந்த மாற்று சாவியை எடுத்து கதவை திறந்த போது தான் அந்த கொடூர சம்பவத்தை அவர் கண்டார்.
மாடி படிக்கட்டின் கீழே மிக்கியோ கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.மேலே,மகள் யசுக்கோவும்,குழந்தைகளும் கொடூரமாக இறந்து கிடந்தனர்
இந்த கொடூர சம்பவத்தை பார்த்தத யசுக்கோவின் தாய் காவல்துறையை உடனடியாக அழைத்தார்.
உடனே விரைந்து வந்த,காவல்துறை தங்களது விசாரணையை தொடங்கினர்.அங்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து,கொலைகள் எப்படி,எப்போது நடந்திருக்க கூடும் என்ற டைம் லைனை கண்டுபிடித்தனர்.
கொலைகளின் டைம் லைன் :
- இரவு 10:38 மணிக்கு,மிக்கியோவின் பாஸ்வேர்ட் ப்ரொடெக்ட்டட் ஈமெயில் ஓபன் செய்யப்பட்டுள்ளது.ஆக அதுவரை அந்த குடும்பத்திற்கு எதுவும் நடக்கவில்லை.அதற்கு பின் தான் கொலையாளி வீட்டினுள் நுழைந்துள்ளான்.
- கொலையாளி ,மிக்கியோ வீட்டின் பின்புறத்தில் இருக்கும் பூங்கா வழியாக வந்து வீட்டின் வேலியில் ஏறி இரண்டாவது மாடியிலுள்ள பாத்ரூம் கதவு வழியாக வீட்டினுள் நுழைந்துள்ளான்.பாத்ரூம் அருகிலுள்ள சிறுவன் ரே அறைக்கு சென்று,ரேவின் கழுத்தை நெரித்துள்ளான்.
- ரே கூச்சலிடும் சத்தத்தை கேட்டு கீழே இருந்த மிக்கியோ மேலே வருவதற்குள்,ரே கழுத்தை நெரித்து கொன்றுள்ளான் கொலையாளி.
- மிக்கியோவிற்கும்,கொலையாளிக்கும் சண்டை நடந்திருக்கிறது.தன்னிடம் இருந்த சஷிமி கத்தியால் மிக்கியோவின் உடலில் சரமாரியாக தாக்கிவிட்டு,தலையை வெட்டிருக்கிறான்.வெட்டும்போது கத்தி தலையிலேயே உடைந்துள்ளது.
- இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியான யசுக்கோ தன் மகள் நீனாவுடன் தப்பிக்க நினைக்கும் அவர்களையும் அதே உடைந்த கத்தியால் கொடூரமாக வெட்டியுள்ளான்.பிறகு சமயலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து சரமாரியாக வெட்டியுள்ளான்.
கொலையாளி விட்டு சென்ற தடயங்கள் :
கொலைகளை செய்து முடித்து விட்டு உடனே அவன் வீட்டைவிட்டு செல்லவில்லை.சற்றும் பதற்றம் இல்லாமல் வீட்டிலேயே பல மணிநேரம் இருந்துள்ளான்.
- சமயலறைக்கு சென்று,குளிர்சாதனப்பெட்டியை திறந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளான்.
- இரவு 1:08 மணிக்கு அங்குள்ள கம்ப்யூட்டரை ஆன் செய்து ,மிக்கியோ புக்மார்க் செய்துவைத்திருந்த இணையதளங்களை ஐந்து நிமிடம் பார்த்துள்ளான்.
- சமயலறைக்கு சென்று பார்லே டீ போட்டு குடித்துள்ளான்
- வீட்டின் கழிவறையை பயன்படுத்தி தண்ணீர் ஊற்றி பிளஷ் செய்யாமல் விட்டுள்ளான்.
- மிக்கியோவுடன் சண்டைபோடும் போது காயம் ஏற்பட்டதால் வீட்டிலிருந்த இருந்த முதலுதவி பெட்டியை பயன்படுத்தியுள்ளான்.
- வீட்டின் சோஃபாவில் சற்று நேரம் தூங்கிருக்கிறான்.
- பின்பு அவன் அணிந்து வந்த ஸ்வெட்டர் ஷர்ட்,ஜெர்கின்,பேண்ட்,ஷூஸ்,muffler,ஹிப் பேக்,அவன் பயன்படுத்திய கத்தி என அனைத்தையும் அங்கேயே விட்டு சென்றிருக்கிறான்.
அவன் எந்த உடையை அணிந்து சென்றான் என்ற விவரம் தெரியவில்லை.இருப்பினும் மிக்கியோவின் ஜெர்கின் ஒன்று காணாமல் போனதை வைத்து அதை கொலையாளி அணிந்து சென்றிருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
மேலும் வீட்டிலிருந்த 1000 டாலர் மதிக்கத்தக்க ஜப்பான் கரன்சிஸ் எடுத்து சென்றுள்ளான்,இருப்பினும் கம்ப்யூட்டர் மேஜையில் இருந்த சில பணங்களை எடுக்கவில்லை.எனவே இந்த கொலைகளுக்க்கான மோட்டிவ் கண்டிப்பாக பணம் இல்லை என காவல்துறை உறுதிசெய்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த,அவனின் ரத்த படிந்த துணிகள்,தொப்பி,பயன்படுத்திய பொருட்கள்,கத்தி,வீட்டில் கிடைத்த Fingerprints மற்றும் கழிவறையில் கிடைத்த கழிவுகளை வைத்து,கொலையாளியின் அங்க அடையாளங்கள் மற்றும் மேலும் சில விவரங்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஷூ :
அவன் அணிந்த Slazenger எனும் மாடல் ஷூ ஆனது கொரியா நாட்டில் மட்டுமே தயார் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஸ்வெட்டர் ஷர்ட் :
அவன் அணிந்திருந்த ஸ்வெட்டர் ஷர்ட் போன்று அதே மாடல் அதே டிசைனில், டோக்கியோ நகரில் மொத்தம் 130 ஸ்வெட்டர் ஷர்ட்ஸ் விற்பனை ஆகியுள்ளது.இருப்பினும் போலீசாரால் அத வாங்கிய பனிரெண்டு பேரை மட்டுமே ட்ரெஸ் செய்ய முடிந்தது.
ஹிப் பேக் :
அவன் விட்டு சென்ற ஹிப் பேகில் கிடைத்த மணலை ஆராய்ச்சி செய்த போது காவல்துறைக்கு மேலும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.ஆம்,அந்த மணல் US காலிஃபோர்னியா நெவாடா பாலைவனத்திலுள்ள எட்வர்ட் ஏர் போர்ஸ் பேஸ் இடத்தை சார்ந்தது.
கொலையாளியின் மாதிரி தோற்றம் :
Finger ப்ரிண்ட்ஸ்,DNA மற்றும் ரத்த படிவங்கள் :
அவனுடைய Finger ப்ரிண்ட்சை வைத்து, ஏற்கனவே ஜப்பான் நாட்டில் கிரிமினல் ரெக்கார்ட்ஸில் உள்ள குற்றவாளிகள்,உறவினர்கள்,அந்த ஏரியாவில் முன்பும் தற்போதும் குடி இருந்தவர்கள்,மருத்துவமனையில் அந்நேரத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்றவர்கள் என கிட்டத்தட்ட 5 மில்லியன் finger பிரிண்ட்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது எதுவும் மேட்ச் ஆகவில்லை.
அதே போல் அவனின் DNA மூலக்கூறுகளும் யாருடனும் மேட்ச் ஆகவில்லை.
வீடு முழுவதும் கிடைத்த ரத்த படிவங்கள் மற்றும் DNA வைத்து கொலையாளின் ப்ரோபைலை தயார் செய்தனர்
- ரத்தத்தை பரிசோதனையின் முடிவின் படி கொலையாளி ஒரு ஆண்.அவனது பிளட் குரூப் பிரிவு A.
- அவனுக்கும் மிக்கியோ குடும்பத்துக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
- கொலை செய்யப்பட்டர்களின் காயங்களை வைத்து பார்க்கும் போது கொலையாளி வலது கை பழக்கமுடையவன்.
- அவன் விட்டு சென்ற துணிகளை வைத்து அவனது உயரம் 170 cms என்று கண்டுபிடிக்கப்பட்டது.
- அவன் விட்டு சென்ற பேண்ட் அளவை வைத்து,ஒல்லி அல்லது ஆவெரேஜானை உடலமைப்பை பெற்றிருப்பான்.
- அவனின் DNA மூலக்கூறை ஆராய்ச்சி செய்த போது, அவனின் அம்மா ஐரோப்பா கண்டத்தை சார்ந்தவர் என்றும் அவனது வெள்ளை கிரோமோசோம்ஸ்களை வைத்து அவனின் தந்தை கொரியா அல்லது சீனா அல்லது ஜப்பான் நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் சமீபத்திய கண்டுபிடிப்பில் அவர் கொரியா நாட்டை சேர்ந்தவராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.அதுவும் போக அவன் அணிந்த ஷூ-ஐ கொரியா நாட்டில் மட்டுமே தயாரித்து விற்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஹிப் பேகில் கிடைத்த மணல் காலிஃபோர்னியா நெவாடா பாலைவனத்தில் உள்ளது என்பதால் கொலையாளிக்கு அமெரிக்காவிற்கும் அமெரிக்கா ஏர் போர்ஸ் மிலிட்டரிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் உள்ளது என்பது மட்டும் தெரிந்தது.
இப்படி காவல்துறைக்கு ஏகப்பட்ட எவிடென்ஸ் கிடைத்தும், திடமான சாட்சிகள் யாருமே இல்லை.
சம்பவம் நடந்த அன்று இரவு 11 30 மணிக்கு அந்த வழியே காரில் கடந்த போன பெண் ஒருவர்,மர்ப நபர் ஒருவர் மிக்கியோ வீட்டின் அருகில் சென்றதாகவும் இவரின் காரை பார்த்ததும் அந்த நபர் ஓடியதாக கூறினார்.
இருப்பினும் சாலையில் ரத்த படிவங்கள் எதுவும் இல்லாதால் மேலும் போதுமான தகவலும் கிடைக்காததால் போலீசார் கைவிட்டுவிட்டனர.
இப்படி பலரிடம் இருந்து தகவல்கள் வந்தாலும் எதுவும் இவர்களது எவிடென்சுடன் மேட்ச் ஆகவில்லை அல்லது சம்பந்தம் இல்லாமல் இருந்துள்ளது.
இது வரை,
கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தி நாற்பதாயிரம் போலீஸ் ஆபிசர்ஸ்/துப்பறிவாளர்கள் இந்த கேஸிற்காக வேலை செய்துள்ளனர்
கிட்டத்தட்ட 16,000 தகவல்கள் கிடைத்துள்ளது.
12,000 எவிடென்ஸ் கிடைத்துள்ளது.
இருப்பினும்,
20 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை கொலையாளியை கண்டுபிடிக்கமுடியவில்லை.
சமீபத்தில், கொலையாளி பற்றிய க்ளூ அல்லது கேஸ் தொடர்பான தகவல் தருபவர்களுக்கு 20 மில்லியன் யன் (ஜப்பான் நாட்டு கரன்சி) அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேல் பரிசாக அளிப்பதாக டோக்கியோ போலீஸ் டிபார்ட்மென்ட் அறிவித்திருக்கிறது.
கொலையாளி சிக்குவானா ??
காத்திருப்போம் !!
0 comments:
Post a Comment