Home » » மே 15 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

மே 15 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

                                                                   ஓம் சக்தி 

                                                   இன்று பிறந்தவர்களின்  :

பிறந்த தேதி 15 - 5 - 2021   (சுக்ரனின்    ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண்  - 16  (கேதுவின்   ஆதிக்க எண் ) 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 87 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - சனிக்கிழமை  

இன்று  15 - 5 - 2021  சனிக்கிழமை பிறந்தவர்களின்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 87. இது சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் கேது பகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 87 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மிக சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . வைராக்கியம் என்றும்  பக்தியால் செல்வம் என்றும் நமது புராதன நூல்கள் கூறுகின்றன .   

சுக்ரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த 87 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் நீதி நேர்மை உடையவராக இருந்தால் மட்டுமே செல்வம் சேரும் . மற்றவர்களுக்கு இந்த எண் மிகவும் ஆபத்தானது .


மகா சக்தியின் திருவடிகளை சரணம் அடைபவர்களுக்கு மகா லக்ஷ்மியின் கடாட்சம் உண்டாகி செல்வ வளம் சிறக்கும் . இல்லை எனில் பில்லி சூனியம் விஷமமான செயல்களால் துன்பம் உண்டாகும் . 8 என்ற சனியும் 7 என்ற கேதுவும் இணைந்து சுக்கிரனின் ஆதிக்கம் வெளிப்படுவதால் எட்டு துஷ்ட காரியங்களையும் 7 விஷ விபரீதங்களையும் வழங்கக்கூடும் . 

இரவு நேர தொழில்களாலும் - நடுநிசி திருட்டுகளாலும் மனம் தீய வழியில் செல்வதையும் இந்த எண் காட்டுகிறது . பாம்புகளையும் விஷ ஜந்துக்கலையும் வசியம் செய்து மனமானது மிருக நிலையை அடைவதையும் இந்த எண் காட்டுகிறது . காடு மலைகளில் அலைந்து மனம் சங்கடப்படுதலையும் இந்த 87 ம் எண்ணின் பலன்களாகும் . 

பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  8 க வருபவர்களுக்கும் இந்த 87 ம் மிக கொடிய பலன்களையும் மற்றவர்களுக்கு இந்த எண் சிரமங்களையும் தரக்கூடியது . 


இன்று பிறந்தவர்களின் பெற்றோர்களின்   : இன்று பிறந்தவர்களுக்கு  பிறந்த தேதி பிறந்த தேதி பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும் .



                                                        அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 87  ம் எண்ணுக்குரிய சுக்ரன் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .


மே 15 ல் பிறந்த பிரபலங்கள் :



மாதுரி தீட்சித் -  இந்திய இந்தி திரைப்பட நடிகை - பிறப்பு 15 - 5 - 1967 

ஆண்ட்ரூ "ஆண்டி" முர்ரே - ஸ்காட்லாந்து டென்னிஸ் விளையாட்டு வீரர் - பிறப்பு - 15 - 5 - 1987 

பியேர் கியூரி - நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியல் அறிஞர் -  பிறப்பு 15- 5 - 1859 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment