Home » » ஏழாம் இடத்தில் கேது இருந்தால் திருமணத்தில் தடையை ஏற்படுத்துமா ?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - R இராவணன் BSC

ஏழாம் இடத்தில் கேது இருந்தால் திருமணத்தில் தடையை ஏற்படுத்துமா ?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - R இராவணன் BSC

                                                             ஓம் சிவசக்தி


ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான - கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். 

எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னத்துக்கு 7 ம் இடத்தில் கேது இருந்தால் திருமணமாவது சந்தேகம் என்று சொல்பவர்கள் உண்டு . கேதுவிற்கு ஞானி என்றும் - துறவி என்றும் வேறு பெயர்களும் உண்டு . துறவி களத்திர ஸ்தானம் பெற்றால் இல்லறத்தை விரும்ப மாட்டார்கள் என்பதால் உற்ற வயதில் திருமணம் தடை படும் என்று சொல்லலாம் . 

ஞானி களத்திர ஸ்தானம் பெற்றால் ஞானியாகவே ஆகிவிடுவான் எனவே திருமணம் தடை படும் என்று சொல்பவர்களும் உண்டு . ஏழாம் இடத்தில் கேது இருந்தால் துறவி அல்லது ஞானி திருமணத்தை விரும்பாதவன் என்று கொண்டால் துறவி ஆவதற்கு வேறு கிரகங்களே தேவை இல்லை என்றும் ஏற்படுகிறது 

பல ஞானிகளின் ஜாதகங்களையும் துறவிகளின் ஜாதகங்களையும் பார்க்கும்பொழுது அவர்கள் எல்லோரும் எழில் கேதுவை பெற்றவர்கள் அல்ல என்று தெரிகிறது . ஆனால் என்னுடைய ஜோதிட அனுபவத்தில் ஏழில்  கேது இருந்து சில காலத்துக்கு பின் ஞானி ஆனவர்களையும் , முதலில் ஞானியாயிருந்து பின்னால் திருமணம் செய்து கொண்டு நல்லபடி வாழ்பவர்களையும் நான் அனுபவத்தில் பார்த்ததுண்டு . 


அதனால் லக்னத்துக்கு 7 ம் இடத்தில் கேது இருந்தால் ஞானியாகவோ துறவியாகவோ ஆகி விடுவார் என்ற வாதம் சரியில்லை . 

நான் பார்த்த ஜோதிட அனுபவத்தில் சில பெண்களுக்கு லக்னத்துக்கு ஏழாம் இடத்தில கேது வீற்றிருந்து அவர்களுக்கு திருமணம் நடந்து இருக்கிறது . ஏழில்  கேது இருக்கும் பெண்கள் எல்லாம் ஞானிகளாக ஆகிவிட்டார்களா? இல்லை . அவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள் .

மேலும் ஏழாம் இடத்தில் கேது இருந்து அந்த கேதுவை குரு பகவான் பார்த்தல் திருமணம் இனிதாக முடிந்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துவார்கள் . இது ஜோதிடராகிய நான் சொல்லும் அசைக்க முடியாத வார்த்தை . 

சுருக்கமாக சொல்ல போனால் ஏழாம் இடத்தில் கேது இருந்தால் 30 வயது தாண்டியவர்களுக்கு திருமண தடையை செய்வதில்லை . ஆனால் மனைவிக்கு அடிக்கடி ஏதாவது  நோயை கொடுத்து கொண்டிருக்கும் . இது என்னுடைய ஜோதிட அனுபவத்தில் நான் கண்ட உண்மை . 

ஏழாம் இடத்தில கேதுவுடன் சூரியன் சேர்ந்து இருந்தாலும் திருமணம் நடக்கும் .ஆனால் குடும்பத்தில் வெறுப்புணர்ச்சி அதிகரித்து காட்டும் . மனைவியிடம் அடக்கடி மன வேற்றுமை காட்டும் . 

ஏழாம் இடத்தில் கேதுவுடன் சந்திரன் சேர்ந்து இருந்தால் காதலில்  தோல்வி அடைந்து விரக்தி அடைந்து விடுவார். அல்லது மனைவியின் எண்ணம் வேறு விதமாக இருக்கும் தம்பதிகளுக்கு ஆயுளும் குறையலாம் . 

செவ்வாயும்  கேதுவும் ஒரே மாதிரியான பலனை செய்வார்கள் . ஒரு ஆண் மகனின் ஜாதகத்தில் செவ்வாயும் கேதுவும் இருவருமே ஏழாம் இடத்தில் இருந்தாலும் சிறு பெண்ணையே அவர் மணப்பார் . இவருக்கு   கணவனை இழந்த ஒருத்தியின் நேசமும் ஏற்படும் . 

ஏழாம் இடத்தில் கேதுவுடன் புதன் சேர்ந்தால் நாள் கடந்து திருமணம் நடந்தாலும் சிறிய பெண்ணையே அந்த ஜாதகர் மணப்பார் . இல்லற வாழ்க்கையில் நல்ல சந்தோஷமும் செழுமையும் வளமும் செழித்தோங்கும்
ஏழாம் இடத்தில் கேதுவுடன் குரு சேர்ந்து இருந்தால் சம்பிரதாயப்படி திருமணம் ஏற்படுவது அரிது . உயர்ந்த குலத்தை சேர்ந்த பெண் இவருக்கு மனைவியாக வாழ்க்கை படுவார் . 

ஏழாம் இடத்தில் கேதுவுடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் நல்லபடி திருமணம் ஏற்படுவது அரிதாகும் . இவருக்கு கீழ் படிந்த வேலை செய்பவர்களின் தொடர்பு ஏற்படும் . 

ஆதலால் ஏழாம் இடத்தில கேது இருந்தால் திருமணம் நடக்காது என்ற கருத்து காலம் காலமாக சொல்லி கொண்டு வந்தாலும் எழில் இருக்கும் கேது அதனை பார்க்கும் கிரகம் - அதனோடு சேர்ந்து இருக்கும் கிரகம் இவற்றை கொண்டு பலன் சொல்ல வேண்டும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment