ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5 இடத்தை சுபக்கிரகங்கள் பார்க்காமல் இருந்து அந்த 5 ம் இடத்தின் அதிபதியோடு ராகு சேர்ந்திருந்தால் அந்த ஜாதகனுக்கு நாக சாபத்தால் குழந்தை இல்லை
பாம்பை அடித்தல் - விளையாட்டு நோக்கில் பாம்பை துன்புறுத்துதல் கொல்லுதல் போன்ற காரணங்களால் நாக சாபம் ஏற்படுகிறது . சிலர் இப்பிறவியில் எந்த தீங்கும் பாம்புக்கு செய்யாமல் இருப்பர் . ஆனால் முற்பிறவியில் செய்த தீமையின் விளைவாக ஏற்பட்ட சாபத்தால் இப்பிறவியில் அதற்கான துன்பத்தை அனுபவிப்பர் .
மேலும் லக்கினத்தில் ராகு இருந்து செவ்வாயின் பார்வை பெற்றாலும் அல்லது செவ்வாயின் வீடுகளான மேஷ விருச்சிக ராசியில் இருப்பது நாக சாபமாகும் .
5 ம் வீட்டுக்குடைய கிரகம் ராகுவுடன் சேர சனி 5 ல் இருக்க 11 ல் சந்திரன் இருந்து சனியை பார்ப்பது நாக சாபமாகும் .
இந்த நாக சாபத்தை போக்க எளிமையான பரிகாரம் :
அரசமரமும் ஆலமரமும் உள்ள இடத்தில விநாயகரும் நாக சிலையும் உள்ள இடத்தில் காலை சூரிய உதயத்திற்கு பின் அரை மணிக்குள் காலை கடனை முடித்து குளித்து மஞ்சளாடை அணிந்து அங்குள்ள பிள்ளையார் நாகத்திற்கு பால் அபிஷேகம் செய்து 12 முறை வளம் வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் .
அரச மரத்திற்கு அபூர்வ சக்தியும் அறிவியல் சக்தியும் தெய்வ சக்தியும் நிறைய உண்டு .காலையும் மழையும் குளித்து ஈரமான துணியை உடுத்துக்கொண்டு அரசமரத்தை வலம்வந்தால் மனதில் சாந்தமும் உடலில் வலிமையும் ஏற்படும் . அரசமர குச்சியின் புகையை நுகர்வத்தினால் உடம்பிலுள்ள நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் முறுக்கேறும் . விந்தணுக்களில் உள்ள குரோமோசோம்கள் நன்கு விருத்தி அடையும் .
மேலும்
அரச மரத்தின் வேரில் பிரம்மனும் - மரப்பகுதில் விஷ்ணுவும் - இலைப்பகுதியில் சிவனும் நிறைந்து உள்ளனர் எனவே அரசமரத்தை சுற்றினால் மும்மூர்த்திகளையும் சுற்றி பூசிப்பதால் ஏற்படக்கூடிய அனைத்து நன்மைகளும் உண்டாகும் .
மார்கழி தை வைகாசி கார்த்திகை ஆகிய மாதங்களில் ஒன்றில் அரசமரக்கன்றையும் வேப்பங்கன்றையும் இணைத்து பூமியில் ஊன்றி வளர்த்து அவற்றிக்கு மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் .
பரிகார கோயில் :
திருநாகேஸ்வரம் சென்று நாகநாத சாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வரலாம் .
திருகாளஹஸ்தி சென்று ராகுவிற்கு தோஷ நிவர்த்தி செய்யலாம் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment