ஹாய் சிவராம்
சந்திரன்
ஒவ்வொரு மாதத்திலும் ஆங்கில தேதிகள் 2 11 20 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்கள் ஆவார்கள் . மற்றும் தேதி மாதம் வருடம் இவைகள் மூன்றையும் கூட்டி வரும் எண் 2 க வருபவர்களும் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள்
ததி ஸங்க துஷாராபம்
கூஷு மதார்ணவ ஸம்பவம்
நமாமி ஸசி நம் ஸோமம்
ஸம்போர் மகுட பூஷணம்
இது சந்திரன் கிரகத்திற்குரிய மூல மந்திரம்
இதன் பொருள்
தயிர் சங்கு பனி போன்ற வெண்மை நிறமுடையவன் . பாத கடலில் தோன்றியவன் முயல் சின்னம் உடையவன் . சோமன் என்று வேதத்தில் அழைக்கப்படுபவன் . சிவபெருமானது முடியில் அணிகலனாக இடம்பெற்றிருக்கும் சந்திரனை வணங்குகிறேன் .
மக்கள் மத்தியில் போற்றப்படுத்தலும் பிறகு தூற்றப்படுத்தலும் இவர்களின் வாழ்க்கையின் இரண்டு படிவங்களாகும்
மனதை ஆட்சி செய்யும் சந்திரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் கற்பனை வளம் நிறைந்தவர்கள் மன உலகில் சஞ்சரிப்பவர்கள்
நூதனமான கற்பனை திறன் மிகுந்த காவியங்களும் கண்கவர் ஓவியங்களும் படைக்கும் ஆற்றல்களை பெற்றவர்கள் இவர்கள் . அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் மனவியல் நூலாசிரியர்கள் புதிய சித்தாந்தங்களை உருவாக்குபவர்கள் இவர்கள் .
ஒரே நாளில் இரண்டு குணாதிசய மாறுபாடுகள் கொண்டவர்கள் இவர்கள் .
சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 15 நாட்கள் வளர்பிறையும் 15 நாட்கள் தேய்பிறையும் உண்டாவது போல தாழ்வுணர்ச்சியும் தன்னம்பிக்கை உணர்ச்சியும் மாறி மாறி வருவதுண்டு .
சந்திரனின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு தேய்பிறையில் ஒரு மாதிரியான பலனும் வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு ஒரு மாதிரியான பலனும் உண்டாகும்
தேய்பிறை காலத்தில் பிறந்த கூட்டு எண் சரியில்லாமல் அமைந்தவர்கள் எதிலும் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக விளங்குவார்கள் . மாதத்தில் பாதி நாட்கள் ஆன்மீகவாதிகளாகவும் மீதி நாட்கள் நாத்திகவாதிகளாகவும் மனம் மாறி போக கூடியவர்கள் இவர்கள் .
தன்னம்பிக்கையும் அடுத்தவர்மேல் நம்பிக்கையும் வாழ்க்கையின் மேல் நம்பிக்கையும் இல்லாதவர்களாக இவர்கள் மனம் குழம்பி போகிறார்கள் .
ஒரு பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்து விட்டால் மன நிம்மதியுடன் இவர்களால் இருக்க முடியாது . இவர்களே பொறுப்பாற்றினால்தான் நிம்மதி அடைவார்கள் .
வீட்டை பூட்டி விட்டு வந்தால் கூட பூட்டினோமா இல்லையா என்கிற புரியாத சந்தேகத்தினால் மீண்டும் மீண்டும் இழுத்து பார்க்கவும் இயல்புடையவர்கள் இவர்கள் .
கடக ராசியில் ஆட்சி பெறும் சந்திரன் நீர் ராசியின் அதிபதி என்பதால் இந்த எண் காரர்கள் ஏதாவது ஒரு திரவ பொருளுக்கு அடிமையாதல் அல்லது அருந்துதல் ( டீ காபி குளிர்பானங்கள் மது அல்லது தண்ணீர் ) போன்றவைகளும் உண்டு
சிலர் அதிக நேரம் நீராடுவதும் உண்டு .
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு கூட்டு எண் பெயர் எண் ஆகியவை சிறப்பாக அமையுமானால் அரசு அரசாங்க கவுரவம் அந்தஸ்து எப்பவும் இருந்து கொண்டே இருக்கும் .
சந்திரனின் ஆதிக்கம் குறைந்த 2 ம் எண் காரர்கள் ஆழந்த உறக்கத்தை அனுபவிக்க முடிவதில்லை
மனதை பற்றி பேசுகின்ற எண் ஆதலால் உடல் அளவில் பலம் குறைவாகவே இருக்கும்
சாமர்த்தியமும் சக்தியும் இருந்தபோதிலும் எதிலும் பரபரப்பாக ஈடுபடும் குணம் இவர்களிடம் கிடையாது
வீண் சந்தேக குணங்களுடன் வாழும் இவர்கள் அடிக்கடி மனதை குழப்பி கொண்டு தெளிவற்று காணப்படுவார்கள் .
சந்திரனின் ஆதிக்கத்தை பெற்ற 2 ம் எண் காரர்களுக்கு நீரினால் கண்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கு செல்லும்பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும் .
ஆண்கள் பெண்களாலும் பெண்கள் ஆண்களாலும் துன்புறுத்தப்படுதலும் சந்தேகம் வீண் வாக்குவாதம் ஆகியவற்றால் குடும்பத்தில் நிம்மதி குறைபாடு ஏற்படக்கூடும்
இருபத்தி ஒன்பது முப்பத்தி எட்டு வயதுகளில் நீதி மன்றங்களில் குடும்ப சண்டைகளுக்காக விவாயகரது போன்ற விஷயங்களுக்காக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்
பிறந்த தேதியை ஹீப்ரு பிரமிடு எண்ணாக்கினால் 1 3 5 6 வருமேயானால் மேலே சொல்லப்பட்ட பாதிப்புகள் இருக்காது
அனுபவ ரீதியாக 7 16 25 பிறந்த தேதியாக வருபவர்களும் கூட்டு எண் 7 க வருபவர்களும் 2 ம் எண் காரர்களின் தவறுகளை பெரிது படுத்தாமல் தன்னை இழந்து வசியம் ஆகி விடுகிறார்கள் .
இரண்டாம் எண் காரர்கள் இரண்டாம் எண் காரர்களிடமே நெருங்கி பழகினால் இவர்களின் ஆழந்த நட்பு வீழ்ந்த ஆலமரம் போல் ஆகி விடுகிறது
இரண்டாம் எண் காரர்கள் 9 18 27 தேதியில் பிறந்தவர்களுடனும் கூட்டு எண் 9 க வருபவர்களுடனும் கூட்டு வியாபாரம் நட்பு ஒப்பந்தம் திருமணம் செய்து கொள்வது பெருத்த சிரமத்தையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் .
இரண்டாம் எண் காரர்கள் வழக்குரைஞர்கள் நீதிபதிகள் எழுத்தாளர்கள் ஓவியர்கள் சிற்ப சாஸ்திரங்கள் பாகர்கள் இசை அமைப்பாளர்கள் போன்ற துறைகளில் சிறப்பை அடைகிறார்கள்
கடல் பொருள்கள் திரவ பொருள்கள் விவசாயம் கால்நடை வளர்ப்பு வண்ண சாய தொழில்கள் பெண்கள் விரும்பும் ஆடை அணிகலன்கள் ஆகியவற்றால் லாபத்தை அடைய முடியும் .
1 3 4 7 8 எண்களில் பிறந்தவர்களால் 2 ம் எண் காரர்களுக்கு லாபம் உண்டாகும்
ஒவ்வொரு மாதத்திலும் 7 16 25 ம் தேதிகள் மிகவும் முன்னேற்றமான நற்பலன்களை வாரி வழங்கும் .
கூட்டு எண் 7 க வரும் நாட்களில் மகிழ்ச்சியும் நீடித்தால் வெற்றியும் உண்டாகும் . 2
2 ம் எண் உடையவர்கள் 7 ம் எண்ணை பயன்படுத்தி வரவர 7 ம் எண் 2 எண்ணை காத்து அருள்புரியும்
இவர்களுக்கு கூட்டு எண் 1 ம் எண் அதிர்ஷ்டம் தரும்
1 10 19 28 தேதிகள் அதிர்ஷ்ட தினங்களாம்
மிக லேசான பச்சை நிறத்தை பயன்படுத்தி வந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற சுலபமான வழிகள் தானாகவே திறக்கும் என்பதில் சந்தேகமில்லை
வெளிர் மஞ்சளும் வெள்ளை நிறங்களும் நன்மையை தரும்
கருப்பு சிவப்பு ஆழ்ந்த நீல நிறங்கள் இவர்களுக்கு ஆகாது .
சந்திரனின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்கள் 20 29 38 47 56 போன்ற எண்களில் பெயரை வைத்துக்கொள்ள கூடாது
இவர்களுக்கு பொன் பொருள் பதவி கவுரவம் உயர்வாழ்வு எல்லாம் 19 37 46 மற்றும் 21 39 32 41 24 33 42 ஆகிய எண்கள் பெயராக அமைந்தால் உண்டாகும்
இவர்களுக்கு 22 31 40 26 35 44 27 36 45 ஆகிய எண்களில் பெயர் அமைந்தால் வீண் சிக்கல்களும் விவகாரங்களும் பெண்ணானால் ஆண்களாலும் ஆண்கள் ஆனால் பெண்களாலும் தற்கொலை போன்ற துர் மரணங்கள் ஏற்படும் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
மேலே சொல்லப்பட்ட பலன்கள் எல்லாம் 2 ம் எண் காரர்களுக்கு பொதுவான பலன்கள் . தேதி எண் 2 க இருந்தாலும் கூட்டு எண் தேதியின் ஹீப்ரு எண் இவைகளை அனுசரித்தே பெயரை அமைத்து கொள்ள வேண்டும்
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் மிக முக்கியமானது . அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் வாழ்க்கையில் ஆனந்தம் தரும் .
பராசக்தியின் வழிபாடு இவர்களுக்கு நன்மையை தரும் .
தொடரும்





