Home » »


ஹீப்ரு எண் 68 ன் பலன்கள் :

சுக்ரனின் ஆதிக்கமும் சனிபகவானின் ஆதிக்கமும் கலந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக கருதப்படுகிறது . இந்த எண்ணின் பலன் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது .  

நட்சத்திர குறியிட்ட ஒரு நாணயத்துடன் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . முத்து மாலை எனவும் சாஸ்திரங்கள் இந்த எண் பற்றி கூறுகிறது . ராஜ வசியம் என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . இந்த எண்ணில் சுக்கிரன் + சனியின் ஆதிக்கம் கலந்து புதனின் ஆதிக்கத்தை விருச்சிக ராசியில் வெளிப்படுத்துவதாலும் அஷ்டமாதிபதியாகவும் லாபதிபதியாகவும் புதன் விளங்குவதால் வாழ்க்கை வேகமாக முன்னேறி வரும் பொழும்பொழுது தடங்கல்கள் உண்டாகும் . 

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் முயற்சிகளை தொடங்கும்பொழுது திடீரென நின்று விடவும் வாய்ப்புள்ளது . ஆரம்பத்தில் சுமாரான அதிர்ஷ்ட எண்ணாகவும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருந்த போதிலும் விரைவிலேயே முற்று புள்ளியை உணர்த்துவதால் இந்த 68 ம் எண் யோகமான எண் அல்ல . 

வீணான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை இழப்பார்கள் . இரும்பு கமிஷன் போன்ற தொழில்களால் லாபம் உண்டு . அரசு சம்பந்தமான துறைகளில் வெற்றி உண்டாகும் . 

பெயர் எண் 68 ம் எண்ணில் வந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்த அதிர்ஷ்ட எண்ணில் அமையவேண்டும்  

ஹீப்ரு எண் 69 ன் பலன்கள் :

சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் - செவ்வாயை குறிக்க கூடிய 9 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி  காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம்  நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு . பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு. அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் புகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள். 

ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் . தனது சொந்த புத்தி, யுக்தி,சாதுரியங்கலால்  அனைவரையும் வெல்லும் திறனையும்  மன உறுதியையும் இந்த எண் கொடுக்கும். நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் . 

யாவரும்  பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த  நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள். 

ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. பெரும் புகழ் பெரியோர்களது நட்பு  யோகம் தரும். 

6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது 

வாழ்க்கை துணைவரால் மேன்மையான பலன்கள் இந்த எண்ணிற்கு உண்டு.  கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். தன்னுடைய மன சந்தோஷத்திற்காக  எப்பொழுதும் இந்த எண் காரர்கள் பணத்தை விரயம் செய்வார்கள்.

இந்த எண ஒரு நபரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் , ஒரு நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் வந்தால் அதிஷ்ட தேவதை உங்கள் குடும்பத்தில் வாசம் செய்வாள். 

ஹீப்ரு எண் 70 ன் பலன்கள் : இதன் பலன் விடுபட்டுள்ளது . குறித்து வைத்து கொள்ளவும் 

ஹீப்ரு எண் 71 ன் பலன்கள் :

கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மனோ வலிமை கொண்ட எண்ணாகும் . அபார மூளை பலத்தை தரும் . லட்சுமி வாசம் யக்ஷினி மோஹினி வசியம் என்று மந்திர நூலில் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . செந்தாமரை அழகும் மகாலட்சுமியின் திருவடியும் இந்த எண்ணில் விளக்கப்படுத்தவதால் இது செல்வத்தையும் வெற்றியையும் தரும் . அறிவும் அதிர்ஷ்டமும் உண்டு . 

ஞானக்காரன் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் ஆரம்பத்தில் தடையும் 1 என்ற சூரியனின் எண் அடுத்து வருவதால் முடிவில் காரியத்தில் வெற்றியையும் குறிக்கிறது .பலருக்கும் பக்தி போதனைகளை சொல்லும் மஹான்களாக இந்த எண்ணினர் விளங்குவார்கள் . பிறந்த தேதி 5 14 23 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு இந்த எண் மிகுந்த செல்வத்தையும் அறிவாற்றலையும் தரும் . 

யோகத்தை கொடுக்கும் இந்த எண் நீதிபதி போன்ற பதவியையும் பங்கு மார்க்கெட் கொடுக்கல் வாங்கல் தொழில்கள் போன்ற தொழில்கள் மேன்மை தரும் . மோஹினி வசியம் செய்த வரலாற்று நாயகன் சந்திரகுப்த விக்ரமாதித்யன் 71 ம் எண் பெயர் கொண்டவர் . 

இந்த 71 ம் எண் கேட்டை நட்சத்திரம் 3 ம் பாதத்தை குறிக்கிறது . விருச்சிக ராசிக்கு 3 ம் அதிபதியான சனியும் அஷ்டமாதிபதியுமான புதனும் மரகாதிபதியாக விளங்குவதால் பொருந்தாத தேதியில் பிறந்தவர்கள் 71 ம் எண்ணில் பெயர் வைத்தால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் .

ஹீப்ரு எண் 72 ன் பலன்கள் :

மிக மிக அதிர்ஷ்டமான எண் . ஈசுவர அம்சம் கொண்டது . ஞானகாரகன் கேதுவும் மனோகாரகன் சந்திரனும் இணைந்த இந்த எண்ணை  பெற்றவர்கள் ஞானிகளாகவும் சந்தேகபுத்தி உடையவர்களாகவும் விளங்குகிறார்கள் . ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் பிறகு மிகவும் சுகப்படக்கூடிய எண்ணாகும் . சம்பாதிக்கிற  சொத்துக்கள் அடுத்தடுத்து வரும் சந்ததிகள் அன்பவிக்கிற அளவுக்கு வந்துவிடும் . 

அபாரமான செல்வநிலையும் மனோதைரியமும் இந்த எண்ணிற்கு உண்டு . நிலையான ஐசுவரியமும் நிறைந்த சொத்தும் உண்டு . செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வந்துகொண்டே இருக்கும் . வற்றாத நீர்வீழ்ச்சியாக இருக்கும் , 

பலவிதமான சுகங்களையும் - அரசாங்க ஆதரவையும் இந்த எண் பெற்று தரும் குபேர தன்மை பெற்ற இந்த எண் கொடுக்கல் வாங்கல் தொழில்களில் முன்னேற்றம் தரும் . எப்பொழுதும் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும் . வியாபாரம் வெற்றி தரும் . வீடு நிலம் வாகன வகை தொழில்களும் உண்டு .  விரோதிகள் சரணடைதல் - தீய சக்திகளை அழித்தல் தியானம் யோகம் இசை வெளிநாட்டு பொருள்கள் மூலம் யோகம் உண்டு . 

ஹீப்ரு எண் 73 ன் பலன்கள் :

பிரமாதமான வித்யாபலம் பொருள் வரவு சொத்து மாடு மனை கம்பீரமான தோற்றம் போன்றவைகளை தரக்கூடியது  விளக்கு வெளிச்சத்தில் நிலத்தில் நடக்கும் மனிதர்களுக்கு மேலே ஐந்து நாணயங்கள் இருப்பது போன்ற எகிப்திய  சித்திரங்கள் இந்த 73 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . அமிர்த ரசம் என்றும் - குன்றாத இளமை மோக்ஷம் என்றும் மந்திர நூல்களில் இந்த எண் பற்றி வருணிக்கப்படுகிறது .  

கேதுபகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் மனோ சக்திகள் பலம் அடைதலும் 3 என்ற அதிகார பலமும் புகழும் சுக வாழ்வும் சமயோசித சமர்த்தவர்களாக விளங்குதலும் மந்திரிகளின் செல்ல பிள்ளைகளாகவும் வீடு வாசல் தோட்டம் துரவு பால் - பசு பலவகையான ஸ்திர சொத்துக்கள் பெறுதலும் உண்டாகும் . தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றி உண்டாகும் . காம எண்ணங்கள் குறைந்து துறவற மனப்பான்மை கூட ஏற்படலாம் . தனுசு ராசி வீட்டில் மூலம் 1 ம் பாதத்தில் இடம்பெறும் இந்த 73 ம் எண் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோருக்கு மிகுந்த மேன்மைகளை தரும் . 

பரம்பொருளின் வற்றாத அமுத சுரபி போன்ற கருணை மழை எப்பொழுதும் இவர்கள் காட்டில் பெய்தவாறு இருக்கும் . குழந்தைத்தனமான அப்பழுக்கற்ற இதயத்துடனும் நேர்மையுடனும் சாந்த சொரூபமாகவும் வாழ்ந்து வந்தால் தாழ்வு இல்லை . எப்பொழுது அநியாயமான நடத்தைகள் தோன்றுகிறதோ அப்பொழுது வீழ்ச்சிகள் தொடங்கிவிடும் . 

ஹீப்ரு எண் 74 ன் பலன்கள் :

கேது பலமும் ராகு பலமும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த 74 ம் எண் . எகிப்திய பிரமிடுகளில் நீதி தேவனையும் நாணயங்களும் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது. கவி பாடும் திறமை - அமுதம் என மந்திர நூல்களில் காணப்படுகிறது .   

ஒரு விதமான மனசோர்வு சஞ்சலமான மனம் போன்றவற்றை இந்த எண் காட்டுகிறது . தீவிரமான மத இன தேச சீர்திருத்த கருத்துக்களும் , பற்றுதலும் கொள்கைகளை பரப்பும் நாவன்மையும் தனது சமுதாய நலனில் அக்கறையும் அதை உயர்த்த பாடுபடுதலும் இந்த எண்ணிற்கு உண்டு . 

உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டால் ஜீரண உறுப்புகளில் பலஹீனம் உண்டாக கூடும் . கேது 7 . ராகு 4. என கால சர்ப்ப தோஷம் உடைய இந்த எண் சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் செல்வம் படைத்தவர்களின் ஆதரவும் அதிகார பதவி மனிதர்களால் ஆதரவும் பிற்கால வாழ்வில் சிறப்புமிகு க்ஷேமமும் உண்டாகும். 

நீதி தேவனை குறிப்பதால் மனிதனின் செயல்களுக்கு ஏற்ப பொருளும் அருளும் கொடுக்கப்படும் . மனிதாபிமானம் கருணை ஈவு இரக்கம் போன்ற குணங்களுடன் வள்ளல் தன்மை உண்டு . 

தனுசு ராசியில் வரும் என்பதால் குரு பாக்கியம் உண்டாகி அடுத்தவர்களை வாழ்விக்கும் தன்மையும் உண்டு . நிறங்களை பற்றியும் வண்ண மலர்களை பற்றியும் . ஒளியை பற்றியும் யாரையும் திறனுள்ளவர்கள் . கால தாமதமானாலும் வெற்றி நிச்சயம் .7 - 16 - 25 - போன்ற தேதியில் பிறந்த குழந்தைளுக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருமானால் பத்திரிக்கை தொலைக்காட்சி வெளிநாட்டு புகழ் அனைத்தும் உண்டாகும் . 

முடிந்த அளவு 7 ம் ஆதிக்கத்தில் பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ஹீப்ரு எண் வருவதை தவிர்க்கவும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment