Home » »

 


ஹீப்ரு எண் 32 ன் பலன்கள் :

மூன்று என்ற குருவும் இரண்டு என்ற சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகத்தை வெளிப்படுத்தும்   இந்த 32 ம்  எண் கடக ராசியில் வந்து புதனின் ஆதிக்கத்தை வெளிபடுத்துவதால் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும் . " 6 செங்கோல்களும் அரசனும் குதிரையும் " போன்ற எகிப்திய படங்கள் வீரதைய்ம் சக்தியையும் குறிக்கும் வகையில் இந்த 32 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

"ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணினர் விளங்குவர் . புத்திசாலி தனம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசும் திறனும் - சினிமா - இசை -  அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . 

அடுத்தவர் ஆலோசனையை கேட்காமல் தனது மனதில் உதிக்கிற படி நடந்து வந்தால் வெற்றி மேல் வெற்றி  உண்டாகியபடியே இருக்கும் . அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும் இந்த எண்ணிற்க்கு உண்டு. 

விக்கிரமாதித்தனின் எண் 32 என வருவதால் காடாறு மாதம் நாடாறு  மாதம் எனபது போல் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தோல்வியோ தாழ்வோ இந்த 32 எண்ணிற்கு இல்லை என்பதால் இந்த 32 எண்ணில் பெயரை அமைத்து பெயரின் ஹீப்ரு எண் 41 - 23 - 95 - போன்ற எண்களில் வருமாறு பெயரை அமைத்து கொண்டால் அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்.

ஹீப்ரு எண்  33 ன் பலன்கள் :

ஸ்ரீ மகாலட்சுமியின் பூரண அருள் பெற்றது . பொன் பொருள் அறிவு பூமி கவுரவம் அந்தஸ்து அனைத்தையும் தர வலிமை கொண்டது . சௌபாக்கியம் சொல்வளம் என சாஸ்திரம் கூறுகிறது .  ஏழு விதமான செங்கோல்கள் என எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது . உடல் பலத்தையும் வீரத்தையும்  திறமையையும் 33 ம் எண் தருகிறது . 

லட்சுமிகாரமான எண்ணாதலால் கலைஞானம் செல்வம் வீரம் இணைவதையும் வீடு நிலம் அசையாத சொத்துக்கள் ஜன வசீகரம் போலீஸ் ராணுவம் கலைத்துறை இசை ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதையும் இந்த எண் குறிக்கிறது .   

அருளும் பொருளும் பராசக்தியின் கடாட்சமும் தான தான்ய விருத்தியும் தான்ய குவியல் தடாகம் ஐஸ்வர்யம் ஆகியவற்றையும் இந்த எண் குறிப்பதால் பெயராகவோ வியாபார விலாசமாகவோ இந்த 33 ம் எண் வரும்பொழுது மிகுந்த மேன்மைகள் உண்டாகும் . 

மிக மிக அற்புதம் வாய்ந்த இந்த 33 ம் எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெயரில் வரும் பொழுது சகல சௌபாக்கிய மேன்மைகளும் உண்டாகின்றபடியே இருக்கும் . 

3 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இந்த 33 ம் எண்ணில் அதாவது 6 ம் எண்ணில் பெயரை அமைக்கக்கூடாது . 

ஹீப்ரு எண் 34 ன் பலன்கள் : 

கடக ராசியில் குருவும் ராகுவும் இணைந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய எண்ணாகும் . பொருளாதார ரீதியாக இந்த எண் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றத்தை தர இயலாத வலிமை கொண்டது . அஷ்டம செங்கோல்கள் என இந்த எண்ணை பற்றி எகிப்திய பிரமிடுகளில் வரையறுக்கப்பட்டுள்ளன . கடக ராசியில் கேதுவின் ஆதிக்கத்தை பிரதிபலிப்பதால் சிறந்த ஞானம் - இறையாற்றல் ஆகியவற்றை இந்த உணர்த்துகிறது . 

இந்த 34 ம் எண்ணை  பெயரில் உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும் , புகழ் பெற்றவராகவும் ஆராய்ச்சி மனோபாவம் உடையவராகவும் ,  உள்ளக்கருத்துக்களை தெள்ள தெளிவாக விளக்கும் திறன் பெற்றவர்காளாகவும் விளங்குவார்கள் .

தான் சேர்த்து வைத்துள்ள பெருஞ்செல்வத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி புரியக்கூடியவராகவும் விளங்குவார்கள் . உண்மை ஒழுக்கம் தன்னம்பிக்கை ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடையக்கூடியவர்களாக விளங்குவார்கள் . மேன்மையான சுபாவங்களையும் சக்திகளையும் அளிக்க கூடிய எண்ணாகும் . 

பொதுவாக  7 ம் எண் ஆதிக்கத்தில் பெயரின் நியூமராலஜி எண் அமைந்தாலும் பெயரின் ஹீப்ரு எண் 6 - 5 - 1 -  போன்ற  எண்களின் அதிர்ஷ்ட எண்களில் அமைவது நன்மையை தரும் . 

ஹீப்ரு எண் 35 :

அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் இந்த எண் தரும். அனாவசியமான குழப்பமும் - சச்சரவும் இந்த எண்ணில் காணப்படுகிறது . தலைப்பாகை அணிந்த ஒரு மனிதன் நீளமான தடியை பிடித்து கொண்டு நிற்பதையும் -  அது மட்டுமல்லாமல் 7 தடிகளும் - மலைகளும் - கொண்ட எகிப்திய சிற்பங்கள் இந்த 35 ம் எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

" ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி "ஷய ரோக நிவர்த்தி " என மந்திர நூல்களில் இந்த எண் பற்றி காணப்படுகிறது . 

கடக ராசியில் பகை பெற்ற எண் இந்த 35 ம் எண்ணாகும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் - இந்த எண்ணை பெயரில் பெற்ற வியாபார ஸ்தலங்கள் எப்பொழுதும் விரயத்தை நோக்கியே இழுக்கபடுகிறது . மனம் அலை கடலென அமைதியை இழந்து நிற்கும் . பணம் வரும் வழி நியாயமானதாக இருக்காது . தன்னை சார்ந்தவர்களால் சிரமங்கள் ஏற்படக்கூடும் . வயிறு - முதுகு - பல் - போன்ற உடல் அங்கங்களில் தொந்திரவு ஏற்படும் . 

பார்வைக்கு அதிர்ஷ்டமானதாக இந்த 35 ம் எண் காட்சி தருமே ஒழிய கூட்டு - ஒப்பந்தம் - ஜாமீன்  - சாட்சி - வகைகளில் - நஷ்டமும் - கஷ்டங்களும் - உண்டாகும் . 

" பெரிய வியாபாரம் " " பெரும் செல்வந்தர் " எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் இந்த எண் காரர்கள் நிற்பார்கள் . சில நேரங்களில் திட சித்தம் இல்லாமல் கூட போகும் . 

எதிர்பாராத விபத்துகளும் - திடீர் சரிவுகளும் - கஷ்டங்களும் - கண்டிப்பாக இந்த 35 ம் எண்ணுக்கு உள்ளதால் பெயர் எண்ணாகவோ - பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ 35 ம் எண் வரவே கூடாது . மேலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக 8 ம் எண் வரவே கூடாது என்று என்னுடைய நியுமராலஜி கட்டுரையில் பல இடங்களில் நான் கூறி இருப்பதால் இந்த 35 எண் பெயரின் ஹீப்ரு எண்ணாக வரும்பொழுது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை கூறி கொள்கிறேன் .

ஹீப்ரு எண் 36 : 

குரு என்ற 3 ம் எண்ணும் - சுக்ரன் என்ற 6 ம் இணைந்து நீச செவ்வாயின் ஆதிக்கத்தை கடக ராசியில் உணர்த்தும் எண்ணாக இந்த 36 ம் எண் விளங்குகிறது . 10 செங்கோல்கள் என எகிப்திய பிரமிடுகளிலும் - உயர்ந்த பதவி என்று சாஸ்திரங்களிலும் - ஸர்வ வியாதி நிவாரணம் - எனவும் மந்திர நூல்களிலும் இந்த 36 ம் எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 

அறிவின் சிகரமாக இந்த எண் போற்றபடுகிறது . உயர்ந்த பதவி - அரசாங்க ஆதரவு - சாமானிய மனிதரையும் பிரபலமானவராகவும் - செல்வ சீமானாகவும் உருவாக்கும் சக்தி இந்த 36 ம் எண்ணிற்கு உண்டு. தான் பிறந்த இடத்திலிருந்து தூரமான இடங்களுக்கு சென்ற பிறகுதான் இவர்கள் புகழையும் - அந்தஸ்தையும் - செல்வதையும் அடைவார்கள் . அனேக பிரயாணங்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருக்கும் . உயர் பதவிகளும் உண்டு . 

இந்த 36 எண் கடக ராசியில் வரும் செவ்வாயின் நீச்ச எண் என்பதால் உடன் பிறப்பு வகையிலும் - ராணுவம் - போலீஸ் துறைகளிலும் - வீடு மனை - ரியல் எஸ்டேட் தொழில் வகைகளிலும் - ஒரு சில சங்கடங்களை தரும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைப்பது நன்மையை தரும் . இந்த 36 ம் எண்ணில் பெயரை அமைப்பது முடிந்தவரை தவிர்க்கவும் .

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328





Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment