Home » »


ஹீப்ரு எண் 28 ன் பலன்கள் : 

நவ கிரகங்களில் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் என்னும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மனித சக்திக்கு வெகு  அப்பாலுள்ளது இந்த இந்த 28 - ம் - எண். ஜனன மரண அடிப்படைய  உணர்த்துகிறது.பெரிய பதவி - பணம் - அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கும் . பின் வந்தது வந்தது போலவே எல்லாம் மறைந்து விடும் .  

"இரண்டு செங்கோல்கள்"  - ஊன்றப்பட்ட காட்சி எகிப்திய சித்திரங்களில் இந்த 28 ம்  எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகிறது ."பிரதி பய - ஜராம் ருத்யு ஹரிணீம் ஸூ தாம் "  என வரும்  சுலோகத்தில் . "மூப்பு மரணங்களை விளக்குகிற அமிருததை சாப்பிட்டும் கூட பிரளய காலயத்தில் அழிவுறும்  தேவர்களையும் . கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவ பெருமான் தேவியின் தாடங்க மகிமையினால் காலத்தின் முடிவு நிலை   பெறாமையும்" இந்த 28 ம் எண்ணிற்க்கு    மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கமாகிறது . 

" கடக ராசியில் சந்திரன் வடிவில் சூரியனின் பலம் என்பது இந்த எண்ணை குறிக்கிறது . 

சாதரணமான நிலைமையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும் முயற்சிகளில  ஈடுபட்டு முன்னேருவதையும் - ஆன்மீகத்திலும் - தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த என் எண் குறிக்கிறது . வழக்கு சம்பந்தபட்டவைகளில் வெற்றியும் - சினிமா துறைகளில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் - இரக்கமும் மாறி மாறி வருவதை இந்த எண் குறிக்கிறது . 

2 என்ற சந்திரன் வளர்வதும் - தேய்தலுமான தன்மையை தருவதால் நிலையான வெற்றிகள் இல்லாமல் 8 என்ற சனி மிகபெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதால் " சமச்சீர் நிலையை தருவதில்லை " 

கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - கடன் கொடுத்தால் திரும்ப வராமல் போவதும் இந்த 28 ம் எண்ணிற்க்கு உண்டு . ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுவதை இந்த எண் குறிக்கிறது . பெயர் எண்ணாக வந்தால் ஆன்மீக பலம் இருப்பவர்களுக்கு தீமை ஏற்படாது . ஆனால் எந்த தேதியில் பிறந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த 28 ம் எண் வரவே கூடாது . 

சூரியனின் ஆதிக்க எண்களில் அவ்வளவாக சிறப்பான பலனை தராத எண்ணாகும் . இந்த எண்ணில் பெயரை அமைப்பதை தவிர்க்கவும் . 

ஹீப்ரு எண் 29 ன் பலன்கள் :

2 என்ற சந்திரனும் - 9 என்ற செவ்வாயும் - இணைந்த இந்த எண்கள் சந்திரனின் ஆதிக்கத்தை பிரதி பலிக்கிறது . கடக ராசியில் வருவது இந்த எண்ணாகும் . " காலடியில் மூன்று மகுடங்கள் " என மந்திர சாஸ்திர நூல்களிலும் - " மூன்று செங்கோல்கள் ஊன்றப்பட்ட இடத்தில் மனிதன் நிற்பதை போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . 

கடக ராசியில் இந்த 29 ம் எண்  இடம்பெறுவதால் - 2 என்ற சந்திரனின் ஆட்சி பலத்தையும் - 9 என்ற செவ்வாயின் நீச்ச பலத்தையும் - இவ்வெண் தெரிவிக்கிறது ." நீச்ச பங்க ராஜ யோகம் என்றும் " " சந்திர மங்கள யோகம் என்றும் இந்த 29 ம் எண்ணை குறிப்பிடலாம் . 

பூமி லாபமும் - ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் - பெண்களுக்கு மங்களகரமான வாழ்க்கையையும் - சுக பிரசவமும் - கற்பனை திறனுள்ள துறைகளில் மேன்மையும் - நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் ஏற்றமும் உண்டாகும் . 

ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் 29 பாடல்களால்  தருவதை போல பெயரிலோ இந்த 29 ம் எண்ணை அமையபெற்றவர்கள் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு வருவதன் மூலம் சிறந்த நிலை எய்தலாம் . 

மேலும் இந்த எண் காரர்கள் தடித்த வார்த்தைகளாலும் - சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இழக்கின்றனர் . புகழ் நிலையாக இருக்காது .  

" கிரீடத்தை விட்டு விலகி வருதலையும் " கிரீடத்தாலேயே இடறி கொள்வதையும் - இந்த எண்ணை பற்றி மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதன் பொருள் என்னவென்றால் " மகுடம் தரித்த மன்னவனிடம் தனது தகுதியை உணர்ந்து தனது பதவியை காப்பாற்றி கொள்ள மாட்டன் எனபதே ஆகும். 

குடும்ப வாழ்வு இனிமை இல்லாமல் போராட்டமாக இருக்கும் . பதவி - கௌரவம் இருந்தாலும் சோதனைகளையும் தோல்விகளையும் தரும். மனம் தவறான வழிகளில் செல்ல முற்படும் . பெண்கள் மூலம் பிரச்சனைகளை உண்டு பண்ணும். 

2 என்ற சந்திரனும் 9 என்ற செவ்வாயும் பகை கிரகங்கள் .  எந்த ஒரு தேதியில் பிறந்திருந்தாலும்  இந்த 29 ம் எண்ணில் பெயரை அமைப்பது  ஆபத்தை தரும் . குறிப்பாக 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு மிக கொடிய பலனை இந்த எண் ஏற்படுத்தும் . 

 ஹீப்ரு எண் 31 ன் பலன்கள் : 

நவ கிரகங்களில் குருவின் ஆதிக்க எண்ணும்  சூரியனின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடகராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக கருதப்படுகிறது . மந்திர ராஜ வசியம் என சாஸ்திர நூல்களில் இந்த எண் பற்றி காணப்பட்டுள்ளது . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஐந்து மனிதர்களோடு ஐந்து தடிகள் போன்ற சித்திரங்கள் இந்த 31 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஐம்பொறிகளை அடக்க முடியாமல் அவைகளின் ஆதிக்க சக்தியால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்களை இவ்வெண் காட்டுகிறது . 

சிவராஜயோகம் பெற்ற இவ்வெண் காரர்கள் வீர விளையாட்டு துறை சினிமா நாடகம் இசை எழுத்து போன்ற துறைகளில் பிரசித்து பெறுவர் . 

பொன் பொருள் வீடு மனைவி வாகனம் பதவி அனைத்தும் இருந்தும் மனம் தனிமையையும் தத்துவ ஏகாந்த நிலையையும் நாடும் , சிறந்த நிர்வாகியாய் இருந்தபோதும் தனது பெயரில் பணத்தையோ சொத்துக்களையோ வைத்திருக்க கூடாது . 

காரிய தடைகளுக்கு பிறகு காரிய சித்தி உண்டாகும் . உயர் பதவி மனிதர்களின் நட்பு உண்டாகும் . சுதந்திரமே பிரதானமாக இருக்கும் . போராடி வெற்றி பெற்றாலும் பலனை அனுபவிக்க முடியாமல் போகும் . வெற்றி மயக்கம் இவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை . தனது 31 வைத்து வயதில் எல்லாவற்றையும் இழக்க அல்லது துறக்க வேண்டிய நிலை ஏற்படும் . 

நாளும் தெரிந்தவராக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்ச்சிகளாலும் திடீர் முடிவுகளாலும் பாதிக்கப்படுவார்கள் . ஆனால் தீர்க்க தரிசனத்தால் தனது முடிவை தானே உணர்ந்து கொள்வார்கள் . கடக ராசியில் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் ஆன்மீக சக்தியால் காப்பாற்றபடுவார்கள் . 

பெயரின் நியூமராலஜி எண் இந்த 31 ம் எண்ணில் வந்தாலும் ஹீப்ரு பிரமிடு எண் 6 - 5 - 1 - போன்ற எண்களின் அதிர்ஷ்ட எண்களில் வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும் . 


ஹீப்ரு எண் 30  . இதை குறித்து வைத்து கொள்ளவும் . இதன் பலனை கடைசியில் சொல்கிறேன் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


                       

ஹாய் எப்படி இருக்கீங்க . கவலை வேண்டாம் . வாரத்தின் 7 நாட்களுக்கு உரிய அதிர்ஷ்ட எண்களை உங்களுக்கு  அனுப்புகிறேன் அதை பயன்படுத்தும் நேரத்தையும் உங்களுக்கு அனுப்புகிறேன் . 
தாமதமாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும் அதன் பலன் பல மடங்காக இருக்கும் . .இதை நான் நிச்சயமாக கூறுகிறேன். 

நாளை உங்களுக்கு மேலும் சில அதிர்ஷ்ட எண்களை அனுப்புகிறேன் நான் ஏற்கனவே கொடுத்திருக்கும் அதிர்ஷ்ட எண்களை தொடர்ச்சியாக பயன்படுத்தவும் . 

முன்பு கொடுத்தது போல் இல்லாமல் வேறு வேறு இலக்க எண்களை உங்களுக்கு அனுப்புகிறேன் . கவலைப்படாமல் இருங்கள் . பரிசு பல மடங்காக உங்களுக்காக கிடைக்கப்போகிறது .

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment