Home » »


ஹீப்ரு பிரமிடு எண் 21 ன் பலன்கள் :

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது என எகிப்திய சித்திரங்கள் விளக்குகிறது . "ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . சந்திரன் என்ற 2 ம் எண்ணும் - சூரியன் என்ற 1 ம் எண்ணும்-சேர்ந்து குரு பகவானின் 3 ம் எண்ணை தரும் இந்த 21 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.   

பெரிய அறிவாளி என பெயர் கிட்டும். பொருளும் - கௌரவமும் பெருகி வரும் . சொந்தங்களின்  ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல  அதிர்ஷ்டங்களை  கிடைக்கும் . 

"அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் -பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் - நிரந்தரமான பதவிகளும் உண்டு. 

செல்வம் -செல்வாக்கு - குடும்ப வாழ்க்கை - புத்திர பாக்கியம் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த 21 எண்ணில் 2என்ற சந்திரன் முன்னே வரவதும் பின் 1 என்ற சூரியன் அடுத்து வருவதால் முன் வாழ்வு தேய்பிறை - வளர்பிறை பிறை போல் இருந்தாலும் வியாபார நிறுவனங்கள் ஆரம்பத்தில் லாப நஷ்டங்களை ஆரம்பத்தில் பிரதி பலித்தாலும் வலிமையான செங்கோலை அடுத்து நிற்கும் 1 ம் வழங்கி விடுகிறது . 

பிறந்த தேதி 6- 15 - 24 - க  வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த 21 எண்ணில் பெயர்  வைத்து கொண்டாலும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - இந்த 21 ம் எண்ணில் இருந்தாலும் கெடுதலான தீமையான பலன்கள் ஏற்படும். 

பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் இந்த 21 ம் எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் அனைத்து வகையிலும் அதிஷ்டகரமான வாழ்க்கை அமையும். 

ஹீப்ரு எண் 22 ன் பலன்கள் :

ராகு ஆதிக்கத்தில் மிக்க அற்புதம் கொண்டது இந்த எண் . அதிக சக்தி வாய்ந்தது. ராகுவை போல கொடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழை நிலையிலிருந்து பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் பெயர் கொண்டவர்கள் . 

இந்த எண் காரர்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் தன்னை இழக்கும் மயக்க உணர்சிகளுக்காக மண் மனை பூமி  பொருள்களை எல்லாம் இழக்ககூடிய சந்தர்ப்பங்களை நோக்கியும் இவர்கள் விரைவார்கள் 

செல்வம் நல்வாழ்க்கை துணை வாகனம் ஆன்மிகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உயர் பதவில்  இருப்பவர்களின் நட்பு, எந்த கஷ்டம் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை போன்றவற்றை இந்த எண்ணினர் பெற்றிருந்தாலும் மனம்   குறுக்கு வழியில் பொருள் சேர்க்க தூண்டும்  .

இதனால் வழக்கு வியாஜ்யம் விரோதிகள் தீய செயல்கள் எனவும் தோல்வியும் பொருள் நாசமும் கொடுத்து விடும். 

வாரிசுகள் விஷயத்தில் மனம் சஞ்சலத்திற்கு ஆளாகலாம். கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் உண்டு. பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்துக்கொண்டால்  ராஜ யோக வாழ்க்கை அமையும். 

ஹீப்ரு எண் 23 ன் பலன்கள் :

நவகிரகங்களில் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் குரு பகவானை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து 5 என்ற புதனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 23 ம் புதனின் வீடான மிதுன ராசியில் வரக்கூடிய புதனின் ஆட்சி பெற்ற எண்ணாகும் .  

பல விதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . பணம் , பதவி , கெளரவம் அந்தஸ்து என அனைத்தையும் தரும் வலிமை கொண்டது . எகிப்திய ஹீப்ரு பிரமிடு சித்திரங்களில் அரசனின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த 23 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பலவிதமான  வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . புதனின் புதனின் வீடான மிதுன ராசியில் வரும் இந்த 23 ம்  புதனின் ஆட்சி பலத்தை குறிக்கும் அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி - கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது .

அரசனின் செங்கோலை குறிக்கும் எகிப்திய சித்திரங்கள் இந்த எண்ணை குறிக்கும் வகையில் காணப்படுகிறது . " சக்தி ரூபமாகவும் " மந்திரமாகவும் இந்த 23 ம்  வருணிக்கபடுகிறது . "சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் - சர்வ சம்பத்தையும் இந்த எண் வழங்குவதாக சக்தியின்தேவியின்  புகழ் பாடும் "சௌந்தர்யா லஹரி " குறிப்பிடுகிறது . 2 என்ற சந்திரனும் 3 என்ற குருவும்  ஒன்று சேர்ந்து 23 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிபடுட்டுவதால் இவர்கள் போடுகின்ற திட்டங்கள் எல்லாம் வெற்றி பெரும் . 

எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது . வியாபார விலாசமோ - ஒரு மனிதனின் பெயரிலோ - இந்த 23 ம் வருமேயானால் - உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் - ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது தொடர்பும் உண்டாகும் . எந்த ஒரு விஷயத்திலும் லாபமும் - தொடுத்த காரியங்களில் வெற்றியும் உண்டாகி கொண்டே இருக்கும் . 

"சக்தியானது  இவர்களின்  உள்ளே உற்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . " ஜோதிடம் - விஞ்ஞானம் - கணிதம் - இசை - தத்துவம் போன்ற துறைகளில் வெற்றி ஏற்படும். வீடு - வாகனம் - குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். மிகபெரிய திட்டங்களை போட்டு முயற்சி செய்தால் மாபெரும் மனிதராக திகழ வைக்கும் . 

எல்லா வளங்களை இந்த 23 ம் எண் வழங்கினாலும் சோம்பல் நிறைந்த மன நிலை உண்டாகும். மார்த்தாண்ட பைரவர் வாசம் செய்கிற இவ்வெண்  நேயர்கள் பக்தி வசப்பட்டால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளுக்கு பாத்திரமானவர்கள் . 

"அஷ்பஷ்டமி யந்நாம பிரஸங்கேனாபி பாஷ ஜதம் ! ததாதி வாஞ்சிதா - நர்த்தான் துர்லபானபி ஸர்வதா " என்கிறது மந்திர நூல் . 

அதாவது " கிடைப்பதற்கு அறியதான பொருளாக இருந்தாலும் பரா சக்தியின் நாமம் உச்சரிக்க பட்டாலே போதும் எல்லாவற்றையும் எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருப்பாள் " என்பதால் இந்த 23 ம்  எண்ணினர் ஸ்ரீ தேவியின் அருளுடன் இருக்க மகா பாக்கியசாலி ஆவார்கள் . 

ஹீப்ரு எண் 24 ன் பலன்கள் :

சந்திரனின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . சுயமான எண்ணங்களையும் கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் தரும் . அரசியின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த எண்ணோடு எகிப்திய சித்திரங்களில் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

சிறந்த படைப்பாற்றல் கொண்ட எண்ணாக இந்த எண் வருணிக்கப்படுகிறது . மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் . 

ஸ்ரீ காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்களை நினைவூட்டும் இந்த எண் மிகுந்த தெய்வீக சக்தியை கொண்டது . 

கதை கவிதை இசை விஞ்ஞானம் ஜோதிடம் போன்ற துறைகளில் ஆராய்ச்சியும் சாதனைகளையும் தரும் . 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் (KRISHNAN) இந்த எண்ணை பெயரில் பெற்றவர். பெண்களால் உதவியும் முன்னேற்றமும் தரும், வியாபார நிறுவனங்கள் மேன்மை பெரும் . 

காலத்தை உணர்ந்து செயல்படும் இவர்கள் வாக்கு பலிதம் உடையவர்கள் . உயர்ந்த மனிதர்கள் செல்வந்தர்கள் உதவிகள் கிடைக்கும் . பிரிந்த பெண்கள் இணைவார்கள். பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களும் இந்த 24 ம் எண்ணில் பெயர் அமைத்தால் தீமையான பலன்கள் உண்டாகும் . 

ஹீப்ரு பிரமிடு எண் 20 ன் பலன்களை நாளை உங்களுக்கு அனுப்புகிறேன் 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment