Home » »

ஹீப்ரு எண் 20 ன் பலன்கள் :

மிகவும் சக்தி வாய்ந்த எண் . தெய்வ கடாட்சம் கொண்டது . உடலில் உஷ்ண வியாதிகள் இருந்தால் குணமாகும் . அபரிதமான வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது . 

மிதுன ராசியில் வரும் இந்த எண் சந்திரனின் ஆதிக்கத்தை பெற்ற எண்ணாகும் . சந்திரனின் ஆதிக்கத்தை பெற்ற இந்த எண் பற்றி முரசொலி எனவும்  கண் விழித்தல் எனவும் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் சுட்டி காட்டப்பட்டுள்ளது . 

புதிய நோக்கத்திற்கான அறைகூவலாக  இந்த எண்ணில் பெயர் அமைந்தவர்கள் ஒன்று பொது நல வாழ்க்கைக்காகவும்  மற்றொன்று சுயநல வாழ்க்கைக்காகவும்  ஒரு சிலர் நன்மைகளை மாத்திரமே உலகிற்கு வழங்குபவராகவும்  ஒரு சிலர் தீமைகளையே உலகிற்கு வழங்குபவராகவும் இருக்கின்றார்கள் . 

மறைந்து கிடக்கும் ரகசியங்களையும் உறங்கி கொண்டிருக்கும் உண்மைகளையும் வெளிக்கொண்டுவரும் சக்தி வாய்ந்தவர்கள் இவர்கள் . 

தெய்வ சக்தியின் அருளால்  இவர்களுக்கு நன்மைகள் ஏற்படும் . விஷ கடிகளுக்கு  விஷ முறிவு செய்யும் திறமை உள்ளவர்கள் இவர்கள் . சர்ப்ப வசியம் அதாவது பாம்பு வசியம் இவர்களுக்கு கைவரும் . 

தன்னலம் மிக்கவர்களாகவும் சுயநலம் மிக்கவர்களாகவும் இவர்கள் இருந்தால் தோல்விகளையும் கஷ்டங்களையும் இவர்கள் அடைவார்கள் . 

9  - 18 - 27 - இந்த தேதியில் பிறந்தவர்கள் இந்த எண்ணில் பெயர் இருந்தால் விபத்து உடல் உறுப்புகளை இழத்தல் நீரிழிவு நோய்  போன்றவைகளுக்கு ஆளாவார்கள் . 

ஹீப்ரு எண் 99 ன் பலன்கள் :

99 ம் எண்  கும்ப ராசியில் இடம் பெறுவதால் ஞானம், தீர்க்க ஆயுள் , ருச்சக யோகம் , மங்களகரமான வாழ்வு , அரசியல் போலீஸ் ராணுவம் நிர்வாக துறைகளிலும் சிவில் , என்ஜினீயரிங் , கட்டிட காண்ட்ராக்டர்  அறுவை சிகிச்சை சிகிச்சை நிபுணரான மருத்துவர் , ரியல் எஸ்டேட் கன்சல்டிங் பிஸ்னஸ் , வாஸ்து நிபுணர் போன்ற துறைகளில் பிரபலம் தர கூடியது. 

கல்வியும் செல்வமும் ஒருங்கே வளரும். மன்மதன் போன்ற உடல் அழகும். மங்கையின் மனதையே நெறி பிறழ செய்யும் தன்மையும் உண்டாகும். பேரானந்தம் சிரஞ்சீவி தன்மையும் உண்டாகும்.

அடுத்தவர்களை  மயங்க செய்வதும் , ஏமாற்ற நிலைக்கு கொண்டு போகவும் 99 ம் எண்ணிற்கு வலிமை உண்டு. ஆயினும் 99 ல் பெயர் உடையவர்கள்  வீண் வம்பு வழக்கு சண்டை சச்சரவுகளில் திடீரென உணர்ச்சி வசப்பட்டவர்களாக விளங்குகிறார்கள். 

ஆகவே சிறிய காரியங்களுக்கு கூட பழி வாங்கும் எண்ணம் கூடவே வந்து விடுகிறது. எதிரிகளால் தாக்க படவும், எதிரிகளை தாக்கவுமே வீண் விரயங்களும் சூழ்சிகளுக்கான விரயங்களும் இந்த 99 ம் எண்ணிற்கு நிறைய உண்டு. 

வெற்றியுடன் விரோதங்களும் தவறான வழியில் புத்தியை செலுத்துதலும் உண்டாகும். சர்ப்ப வசியம் விஷத்தை இறக்கும் மந்திர வித்தைகளும் இந்த எண்ணிற்கு பலிதமாகும். 

ஹீப்ரு எண் 97 ம் பலன்கள் :
 
பராசக்தியின் கடாட்சமும் கல்வி செல்வம் வீரம் கிடைப்பதையும் விசேஷமான ஆன்மீக உயர்வையும் இவ்வெண் குறிப்பிடுகிறது . 

சாஸ்திரங்கள் கலைஞானம் லஷ்மிகரம் வியப்புமிகு சாதனைகளை இவ்வெண் குறிப்பிடுகிறது . 

வெற்றி உடல் உறுதி வலிமை நிலம் வீடு வாகன வகையிலான சொத்துக்கள் உண்டாகும் . 

பூரட்டாதி நட்சத்திரம் 1 ம் பாதம் 97 ம் எண்ணாக வருவதால் குருவாக வணங்கப்படுவதிலும் மேஷ அம்சம் நிலா புலன்களின் ஸ்திர தன்மையையும் உணர்த்துகிறது . 

9 நவ சக்திகளும் 7 லோகங்களிலும் வியாபித்திருப்பதை இந்த எண் உணர்த்துகிறது . பிறந்த தேதி 2 - 11- 20 - 29 - க வரும் குழந்தைகளுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க  வருபவர்களுக்கு  மட்டுமே இதில் சொல்லப்பட்டுள்ள முழு பலன்களும் நடக்கும் . 

ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய 97 ம் எண்ணுக்குரிய கேது கன்னி விருச்சிகம் மகரம் மீனம் கடகம் போன்ற வீடுகளில் பலமுடன் இருந்து பிறந்த தேதியில் 1  -  6  - க வருபவர்கள் இந்த 97 ம் பெயரை அமைத்து கொண்டு நிறைய நற்பலன்களை பெறலாம் 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment