Home » »

                             

ஹீப்ரு பிரமிடு எண் 16 ன் பலன்கள் :

இந்த எண்ணை அறிவின் ஆட்சி பீடம் என கூறலாம் . இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களின் நாவில் சரஸ்வதி தேவி தண்டவமாடுவாள். 

உலக எண் கணித மேதை சீரோ இந்த எண்ணை இடிந்த கோட்டை என்று வர்ணித்துள்ளார், 

அனுபவத்தில் இது உண்மையாகவே காணப்படுகிறது. இந்த பதினாறாம் எண் ஒரு தனி மனிதனின் பெயரில் வந்தாலும் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரில் வந்தால் ஆரம்பத்தில் மிக வேகமான முன்னேற்றத்தையும் பிறகு திடீரென ஒரு பெரிய சரிவயையும் தரக்கூடியது. 

உலக சுகம் பொருள் பதவி வாக்கு வன்மை கலைகளின் மூலம் மற்றவர் மனதை கவர்தல் சாத்திரங்களின் மீது விருப்பங்கள் போன்றவை இந்த பதினாறாம் எண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள தனி சிறப்புகளாகும். அதிகப்படியான ஆசைகளை விட்டு ஞான மார்க்கத்தில் சென்றால் சரி தேவியின் அருள் கடாட்சம் கிடைக்கும் . 

 சூரியனுடைய சக்தியும் சுக்ரனுடைய சக்தியும் இணைந்து கேது பகவானின் ஆதிக்க தன்மையை உணர்த்துவதால் இந்த எண் ஆக்க சக்தியையும் , அதே சமயத்தில் அழிவு சக்தியையும் குறிக்ககூடிய எண்ணாகும் . 

ஒரு தனி மனிதனின் பெயர் எண்ணாகவும் , பிரமிடு எண்ணாகவும் இந்த பதினாறாம் எண் வரும்பொழுது இல்லற வாழ்வும் புத்திர பாக்கியம் ஏற்படுவதிலும் குறையை காட்டும். ஆபத்துக்கள் எந்த நேரத்திலும் இந்த எண்ணினருக்கு வரும். 

ஹீப்ரு  எண் 17  ன் பலன்கள் :

சூரியனின் ஆதிக்க எண்ணும்  கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து 8 என்று சனி பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் ரிஷப ராசியில்  வரக்கூடிய எண்ணாகும் . 

சரசுவதி தேவியின் பூரண கடாட்சம் கொண்டது இந்த எண் . ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு அறிவியல் மருத்துவம் கலைத்திறன் பல்வேறு விதமான ஆராய்ச்சி திறனை இவ்வெண் குறிப்பிடுகிறது . இந்த 17 ம் எண் ரிஷப லக்கினத்தில் இடம்பெறுவதால் ரிஷப லக்கினத்திற்கு 9 10 ம் இடத்திற்கு சனிபகவான் தர்மகர்மாதிபதியாக வருவதால் இந்த எண் யோகமளிப்பதாக உள்ளது . 

ஒருவருடைய பெயர் எண் 17 ம் எண்ணாக வரும்பொழுது அரசுவகை யோகமும் உலகம் மறக்க முடியாத சாதனைகளை செய்து முடிப்பவராகவும் விளங்குவார்கள் . ஏராளமான ஐஸ்வர்யம் புகழ் அந்தஸ்து ஆகியவற்றையும் தரும் வல்லமை கொண்ட எண்ணாகும் . பல்வேறு வகையான சோதனைகளையும் கஷ்டங்களையும் வென்று தனது குறிக்கோளை அடையும்வரை ஓயாது உழைத்து வெற்றி பெறுதலை இந்த எண் குறிக்கிறது . 

ஆண்களுக்கு பெண்களாலும் வாழ்க்கை துணைவியாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும் . 1 ம் எண்ணை குறிக்கக்கூடிய சூரியனின் ஆதிக்கம் முதலில் வருவதால் ஆயுள் பலம் ஓங்கும் . ஜோதிடம் தியானம் சித்துக்கள் ஜல ஸ்தம்பன வித்தைகள் கை ஓங்கும் .

ஹீப்ரு எண் 18 ன் பலன்கள் :

1என்ற சூரியனும் 8 என்ற சனியும் இணைந்து 18 என்று வந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும்   ஒளி  நிறைந்த நிலவின் படமும் - குளக்கரையும் - ஜீவ ஜந்துக்களும் - போன்றவைகளை குறிக்கும் படங்கள்  எகிப்திய ஓவியங்களில் இந்த 18 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன.  

தேவ கன்னிகை வசியம் என் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் சொல்லுகின்றன . 1 என்ற சூரியனும் - 8 என்ற சனியும் இணைவதையும் - 9 என்ற செவ்வாயின் தன்மை 18 னுள் விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . 

தெய்வீகத்தையும் - போரையும் - நீதிக்காக - போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது . பூசல் - போராட்டம் - தீ - நீர்  - புயல் - ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த எண் குறிக்கிறது . 18 நாள் நடந்த பாரத யுத்தத்தையும் - பகவத் கீதையின் 18 அத்தியாத்தையும் - 18 படிகளை கடந்தால் ஐயப்ப தரிசனம் என்பதையும் இவ்வெண் உணர்த்துகிறது . 

காரிய தாமதம் - தெய்வீக வீழ்ச்சி - கஷ்ட நஷ்டங்கள் - சூழ்ச்சிகள் - சுய நலம் போன்றவற்றை இவ்வெண் வழங்குகிறது  . அருள் குறைந்து அமைதி இழந்து மனமறிந்தே தவறான பாதைகளில் இறங்குவதையும் - சமூக விரோத செயல்களையும் பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் -ஆயுதங்களினாலும் உயிருக்கு ஆபத்து வருவதையும் இந்த 18 ம் எண் குறிக்கிறது . தவறு என்று தெரிந்தும் மற்றவர்களை தண்டிக்கும் சூழ்நிலையும் உண்டாகும். 

சூரியனும் - சனியும் - ஜாதகத்தில் சேர்ந்து இருக்க கூடாது என்பது ஜோதிட விதி . சூரியனின் சிம்ம லக்னத்திற்கு ரோக - ருண - சத்துரு ஸ்தானமாக சனியின் மகர வீடும் - சனியின் மகர லக்னத்திற்கு அப ஜெயம் - ஆபத்து - ஆயுள் விரய ஸ்தானமாக சூரியனின் சிம்ம வீடும் - "சஷ்ட அஷ்டமும் "  ஜோதிடம் கற்றோர் அறிவர் . 

பெயரில் இவ்வெண் அமைவதை விட ஹீப்ரு இந்த 18 ம் எண் அமையும் பொழுது இரட்டிப்பான தீமைகளை வழங்கி விடுகிறது . 18 ம் எண்ணில் பெயர் உடையவர்கள் தீய குணங்கள் தெரியாத வண்ணம் காட்சியளிப்பார்கள் . 1 என்ற ஆத்மகாரனும் 8 என்ற ஆயுள் காரனும் இணைந்து யுத்த காரனான 9 ஐ வெளிபடுத்துவதால் மனதுக்கு மாறான காரியங்கள் நிகழ்ந்தே வருகின்றன . 

அடுத்து ஹீப்ரு பிரமிடு எண் 19 லிருந்து 27 வரை மிதுன ராசியில் வரக்கூடிய என்னாகும் . நினைவில் கொள்ளவும் . 

ஹீப்ரு எண் 19 ல் பலன்கள் : 

சூரியனின் ஆதிக்க எண்ணும் செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மந்திர சாஸ்திர நூல்களில் திரிலோக வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . " ஆகாய அரசகுமாரன்"  "கருத்தொருமித்த காதலர் எனவும் போற்றப்படுகின்ற இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் .  

வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது . லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை அனைத்தும் இந்த 19 ம் எண்ணினருக்கு சுலபமாக கிடைத்து விடும் . 

அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும் . பெண்களாலும் அரசாங்கத்தாலும் முன்னேற்றம் உண்டாகும் . இவர்களின் சொல்லுக்கு ஒருவிதமான வசிய சக்தி ஏற்பட்டு உலக மாந்தர்கள் அனைவரும் இவர்களுக்கு  கட்டுப்பட்டு நடப்பார்கள் .

கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைத்து ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் . ஸர்வ ஸதம்பன வித்தைகளும் மிருக வசியமும் மந்திர சித்தியும் இந்த எண்ணிற்கு உண்டு . நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும் இந்த எண்ணிற்கு விலகி விடும் . எப்பொழுதும் திறமையுடனும் கட்டுப்பாடான வாழ்க்கையில் பிரியாத சக்தியாக இவர்கள் விளங்குவார்கள் . 

உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள் . பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே இந்த 19 எண்ணில் அமைந்தால் மிகுந்த மேன்மை ஏற்படும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment