Home » »

 



ஹாய் எண் 12  - 21 - 14 - 41 - 24 - 42 - போன்ற எண்களுக்கு ஒரே பலன்கள் என்று சொல்லி விட முடியாது . ஏனென்றால் ஒவ்வொரு எண்களும் ஒவ்வொரு ராசி கட்டத்தில் வரும் . 

உதாரணத்திற்கு 12 ம் எண் என்றால் ரிஷப ராசியில் வரும் . ரிஷப ராசிக்கு உரிய கிரகம் சுக்ரன் . இந்த 12 ம்  எண் குருவின் குணத்தை கொண்டிருந்தாலும் சுக்ரனின் ராசியான ரிஷபத்தில் இருப்பதால் சுக்ரனின் குணமும் பலனும் இந்த 12 ம் எண்ணில் கலந்திருக்கும் . 

அடுத்து 24 ம் சுக்ரனின் குணத்தை கொண்டிருந்தாலும்  மிதுன ராசியில் இந்த எண் இடம்பெறுவதால் புதனின் குணமும் இந்த 24 ம் எண்ணில் கலந்திருக்கும் .  அதேபோல்தான் மற்ற எண்களின் பலன்களும் . 

ஹீப்ரு எண் 37 ம் பலன்கள் : 

குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் கிரகங்களில் கேதுவை குறிக்கக்கூடிய  7 ம் எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் . 

பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் . மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த 37 ம் எண் பெற்று கொடுக்கும் . 

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு . இந்த 37 ம் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது பெரும் வெற்றிகளை தரும் . 

இவர்களுக்கு 3 - 5 - 9 - போன்ற எண்களில் பெயரை அமைப்பது சிறப்பான பலனை தரும்  . 6 ம் எண்ணில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் . 

ஹீப்ரு எண் 38 : 

தேவ குருவும் - சனிபகவானும் இணைந்த இந்த 38 ம் எண் சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . 

இந்த எண்ணை பற்றி ஹீப்ருக்களின் எகிப்திய ஓவியங்களில் " ஒரு அரசி சிம்மாசனத்திலிருக்க -அவளது இரு கரங்களும் கோப்பையை தாங்கிய வண்ணம் உள்ளதாக அமைந்து இருக்கிறது . " இரண்டு விதமான அம்சங்கள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகிறது . 

பதினெட்டு வித்தைகளின் சூட்சும நிலை  கொண்ட இந்த 38 ம் எண்  நீர் சம்பந்தப்பட்ட தொழில்களில் லாபம் உண்டாகும் .

 " குரு பகவானை குறிக்கும் 3 எண்ணும் - சனி பகவானை குறிக்கும் - 8 ம் எண்ணும் ஒன்றிணைந்து குரு சண்டாள யோகத்தை ஏற்படுத்துவதால் சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது 

அமைதியான மனிதர்களாகவும் - பெரிய செல்வந்தர்களது நட்பை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . சாதரணமான  கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ் - செல்வம் - அந்தஸ்து - ஆகியவைகளில் சிறந்தவர்களாகவும் இவர்கள் விளங்கும் அளவுக்கு இந்த எண் கொண்டு செல்லும் . 

மக்களிடத்து மதிப்புள்ள மனிதர்களாகவும் சாத்மீக தன்மை - ஆத்மீக வளர்ச்சி அணைந்ததும் நிறைந்தவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . கப்பல் கட்டும் தொழில் - கடல் சம்பந்தபட்ட வாணிபம் - ஏற்றுமதி - இறக்குமதி - குளிர்பானங்கள் ஆகிய துறைகள் இந்த எண்ணிற்கு அமையுமானால் மிகுந்த லாபம் ஏற்படும் .

வித்தியாசமான  கற்பனை திறனும் - மனோ பலமும் தடை இல்லாத திருமண யோகமும் ஏற்பட்டாலும் கூட - வஞ்சகமான மனிதர்களால் திடீரென எதிர்பாராத ஆபத்துகளும் - உண்டாகும் . வாழ்க்கையின் முடிவும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டது திடீரென சோகம் குடி கொள்ளும் இந்த 38 ம் எண்ணுக்கு . 

9 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு  இந்த 38 ம் எண்ணில் பெயர் அமைந்து இருக்குமானால் விபத்தையும் - தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . ஆதலால் எந்த ஒரு தனி மனிதனுக்கும் பெயர் எண்ணாகவோ - பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ இந்த 38 ம் வரவே கூடாது . வந்தால் வாழ்க்கையே சூனியம்தான் .

ஹீப்ரு எண் 39 : 

மூன்று என்ற குருவும் ஒன்பது என்ற செவ்வாயும் இணைந்த இந்த எண் சிம்ம ராசியில் செவ்வாயின் ஆதிக்க எண்ணாகும் . இந்த எண்ணை பற்றி குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற படத்துடன் சித்தரிக்கபட்டுள்ளது . "  தெய்வ கருணை என மந்திர நூல் இந்த எண்ணை கூறுகின்றது  குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்த 39 ம் எண் . புகழ் - பதவி - வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில் முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த எண்ணின் விசேஷமாகும் . தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு .  

ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த எண்ணிற்கு உண்டு . பிறந்த தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணில் பெயர் இருந்தால் அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் இல்லை .  

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment