Home » » விதியை மதியால் வெல்ல முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSCC

விதியை மதியால் வெல்ல முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSCC

                                                          ஓம் சிவசக்தி 


நம் முன்னோர்கள் கூட விதியை மதியால் வெல்ல முடியுமென்ற தத்துவத்தை தான் போதித்து வந்திருக்கிறார்கள் . புராண இதிகாசத்திலும் எத்தனையோ சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன . 

மார்கண்டேயனுக்கு சிவபெருமானால் விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயதுதான் . ஆனால் அவன் மதி கொண்டு சிவ அர்ச்சனையால் என்றும் பதினாறு வயது பெற்ற கதை உண்டு . 

இதுபோலவே சத்தியவானின் உயிர் பிரிந்ததை கண்ட சாவித்திரி தன கணவனின் விதி  அவ்வளவுதான் என்றிருக்கவில்லை . எமனுடன் போராடி மாண்ட கணவனை மீண்டும் பெற்றாள் தன் மதி நுட்பத்தால் என்கிறது புராணகதை . 

இன்னும் இது போன்ற கதைகள் பல உண்டு .விதியை மதியால் மாற்ற முடியுமா ? முடியுமானால் அனுபவ பூர்வமாக வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்களா ? என்ற கேள்வியும் உண்டு . ஒரேடியாக விதியால் மதியால் வெல்ல முடியாது என்பது வள்ளுவரின் வாக்கு . ஆனால் ஓரளவாது மாற்ற முடியும் என்கிற கருத்தில் 

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத் தக்கூலி தரும் "

விதியை நம்பி கொண்டிருப்பவர்கள் கூட சமயங்களில் தங்களை அறியாமல் மதியை உபயோகித்து விதியை மாற்றுகிறார்கள் என்பது உண்மை . 

எல்லாவற்றிற்கும் விதியை சுட்டிக்காட்டி தப்பிக்கும் நபர் கூட ஒரு பாம்பு தன்னை நோக்கி கடிக்க வருகிறது என்றால் அலறி கட்டி கொண்டு  தலை கால் தெரியாமால்  ஓடி தான் தப்பித்து கொள்வதும் உண்டு . இது ஏன் . பாம்பு தன்னை கடிக்க வேண்டிய விதிபோல் இருக்கிறது என்று பேசாமல் நிற்பது தானே ? இங்கே விதியை மாற்ற கூடிய மதி முன் வந்து நிற்கிறது . அதே நபர் அல்லது அது போன்ற விதிக்கு முதலிடம் கொடுக்கும் நபர் ஏதாவது பலமான நோய்வாய் பட்டால் அத்தகைய நோயிலிருந்து  எத்தனையோ டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதும் உண்டல்லவா ? 

கண்கள் தெரிவதில்லை என்றால் கண் கெட வேண்டிய விதி போல் இருக்கிறது என்று பேசாமல் இருப்பவர்கள் யார் ?

குழந்தை பிறக்காத தம்பதிகள் சாந்தி முறைகளை கையாண்டு குழந்தைகளை பெறுவதையும் நாம் பார்க்காமல் இல்லை . விதி மேல் பழி போடும் நபர்களுக்கு கூட இந்த அறிவுரைகளை எம்மிடம் ஜோதிடம் பார்க்கும் அன்பர்களுக்கு அளிப்பது உண்டு . 

இத்தகைய சூழ்நிலையில் விதிமேல் பழி போடுபவர்களும் தங்களை அறியாமல் மதி கொண்டு விதியை மாற்ற முனைவது கண் கூடு . ஆகவே இத்தகைய சமயங்களில் எப்படி விதியை மதி கொண்டு மாற்ற எண்ணமுண்டாகிறதோ அதுபோலத் தங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி கொள்ளவும் பயனற்ற வேலைகளில் இருந்து தங்களை விடுவித்து கொண்டு . பயனுள்ள தங்கள் ஆக்க வேலையில் ஈடுபடுத்தி கொள்ளவும் தங்கள் விதியில் சிறு மாற்றத்தையாவது மதி கொண்டு ஏற்படுத்திகொள்ளலாம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment